Hair Loss Diabetes: சர்க்கரை நோயினால் முடி உதிர்வு பிரச்சனையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்

  • SHARE
  • FOLLOW
Hair Loss Diabetes: சர்க்கரை நோயினால் முடி உதிர்வு பிரச்சனையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்

நீரிழிவு நோய் முடி உதிர்வு

நீரிழிவு நோய் என்பது நாள்பட்ட மற்றும் வளர்ச்சிதை மாற்ற நோயாகும். அதிகளவு இரத்த சர்க்கரையால் கண்கள், இதயம், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள், நரம்புகள் போன்றவற்றில் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Water For Hair: தேங்காய் எண்ணெய் மட்டுமல்ல, தேங்காய் தண்ணீரும் தலைமுடிக்கும் நல்லது. எப்படி தெரியுமா?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் முடி உதிர்வுக்கான காரணங்கள்

அழற்சி

நீரிழிவு நோயால் உடலில் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தலாம். இவை முடியின் மயிர்க்கால்களை சேதப்படுத்தலாம். மேலும் முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.

மோசமான இரத்த ஓட்டம்

உயர் இரத்த சர்க்கரை அளவு காரணமாக இரத்த நாளங்களை சேதப்படுத்தலாம். இவை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை மயிர்க்கால்களில் இழக்க நேரிடும்.

ஊட்டச்சத்து குறைபாடு

நீரிழிவு நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம். இவை முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். எனவே இரும்பு, துத்தநாகம் மற்றும் பயோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது.

ஹார்மோன் சமநிலையின்மை

சர்க்கரை நோயால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தலாம். இவை முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். அதிகளவு இன்சுலின் மற்றும் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் இருப்பின், இவை முடி உதிர்வைத் தூண்டலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Vetrilai For Hair: வெறித்தனமா முடி வளரணுமா? வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்க போதும்

மன அழுத்தம்

நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் அதிக மன அழுத்தம் ஏற்படலாம். மன அழுத்தம், பதட்டம் போன்றவை முடி உதிர்தலுக்கு பங்களிக்கலாம். முடி உதிர்வைத் தடுக்க மன அழுத்தத்தைக் குறைப்பது நல்லது.

நீரிழிவு நோயால் ஏற்படும் முடி உதிர்வைத் தடுக்கும் வழிகள்

உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானதாகும் மற்றும் முடி உதிர்தலைத் தடுக்கவும் உதவுகிறது.

வீக்கத்தைக் குறைக்க

முடி உதிர்வைத் தடுக்க உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைப்பது அவசியமாகிறது. இதற்கு அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும் மன அழுத்தம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு நிவர்த்தி செய்தல்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனை ஏற்படலாம். உணவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சரிபார்ப்பது

சர்க்கரை நோய்க்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, முடி உதிர்தலுக்கு வழிவகுக்கலாம். முடி உதிர்தலுக்கு பங்களிக்கும் ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகளை நிவர்த்தி செய்ய மருத்துவரை அணுகுவது நல்லது.

நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கு முடி உதிர்வு பிரச்சனை ஏற்படாது. எனினும் முடி உதிர்வு பிரச்சனைக்கு அடிப்படை காரணங்களைக் கண்டறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சை முறைகளை ஆராய்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Hemp Seed Oil For Hair: முடி நீளமா, மென்மையா, அடர்த்தியா வளர சணல் விதை எண்ணெய் தரும் நன்மைகள்

Image Source: Freepik

Read Next

Coconut Water For Hair: தேங்காய் எண்ணெய் மட்டுமல்ல, தேங்காய் தண்ணீரும் தலைமுடிக்கும் நல்லது. எப்படி தெரியுமா?

Disclaimer