Vetrilai For Hair: வெறித்தனமா முடி வளரணுமா? வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்க போதும்

  • SHARE
  • FOLLOW
Vetrilai For Hair: வெறித்தனமா முடி வளரணுமா? வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்க போதும்


Benefits Of Vetrilai For Hair In Tamil: இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் முடி உதிர்வு, நரைமுடி போன்ற பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். போதிய ஊட்டச்சத்து இல்லாதது, மன அழுத்தம், உணவுப் பழக்கம், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற உடல் சார்ந்த பல்வேறு காரணங்களால் தலைமுடிக்கு சேதம் உண்டாகலாம்.

இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க சந்தைகளில் கிடைக்கும் பராமரிப்பு பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை விலை மதிப்பு மிக்கதாக இருக்கலாம். கெமிக்கல் அடங்கிய பொருள்களைக் கலந்திருக்கும் ஷாம்பூவை பயன்படுத்துவது தலைமுடிக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க தலைமுடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு இயற்கையான முறையைக் கையாளலாம். அந்த வகையில் தலைமுடிக்கு வெற்றிலை பயன்படுத்தும் முறை மற்றும் நன்மைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Curry Leaves For Hair: கறிவேப்பிலையை இப்படி யூஸ் பண்ணா இந்த முடி பிரச்சனை எதுவும் வராதாம்.

முடிக்கு வெற்றிலை (Vetrilai Benefits For Hair)

வெற்றிலை இயற்கையாகவே குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இதில் பாலிஃபினால்கள் நிறைந்துள்ளன. இவை பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் மற்றும் கிருமி நாசினிகள் போன்றவற்றிற்கு உதவுகிறது. மேலும், இதில் உள்ள சாவிகோல் என்ற கரிம சேர்மம் கிருமிகளில் இருந்து இரட்டைப் பாதுகாப்பை வழங்குகிறது.

வெற்றிலையில் அலர்ஜி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இவை முடி உதிர்தலைக் குறைத்து, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. மேலும் இதில் நிறைந்துள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் தலைமுடியில் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.

தலைமுடிக்கு வெற்றிலை ஹேர் மாஸ்க் செய்வது எப்படி (How To Use Vetrilai For Hair)

முடிக்கு வெற்றிலை ஹேர் மாஸ்க் தயாரிக்கும் முறை குறித்துக் காணலாம்.

தேவையான பொருள்கள்

  • நெய் - 2 முதல் 3 டீஸ்பூன்
  • தேன் - 1 டீஸ்பூன்
  • வெற்றிலை - 5 முதல் 10 இலைகள் (தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப)
  • தண்ணீர் - தேவையான அளவு

இந்த பதிவும் உதவலாம்: Guava Leaves For Black Hair: வெள்ளை முடி கருப்பாக மாற கொய்யா இலையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்துங்க.

வெற்றிலை ஹேர்மாஸ்க் செய்யும் முறை

  • முதலில் வெற்றிலையை எடுத்துக் கொண்டு தேவையான அளவு நீர் சேர்த்து கலவை தயார் செய்து கொள்ள வேண்டும்.
  • பின் இந்தக் கலவையில் நெய் மற்றும் தேன் சேர்த்து கெட்டியான கலவையாக மாறும் வரை நன்கு கிளற வேண்டும்.
  • பிறகு உச்சந்தலையில் தொடங்கி முடிகளில் தடவிக் கொள்ள வேண்டும்.
  • இதனைத் தொடர்ந்து 4 முதல் 5 நிமிடங்களுக்கு முடியில் மசாஜ் செய்து வர ஹேர் மாஸ்க் முடியின் வேர்க்கால்கள் வரை நன்கு பரவுமாறு அப்ளை செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு அரை மணி நேரம் அப்படியே வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு முடியை அலச வேண்டும்.

இந்த வழிகளில் வெற்றிலையைப் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வு குறைவதுடன், முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. எனினும், தலைமுடிக்கு வெற்றிலையைப் பயன்படுத்தும் முன்னதாக நிபுணரின் ஆலோசனை பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mustard Oil For Hair: கரு கரு முடிக்கு கடுகு எண்ணெயுடன் இந்த 3 பொருள்களை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க.

Image Source: Freepik

Read Next

Onion Hair Spray: தலைமுடி அடர்த்தியா வளர… வெங்காய தோலை இப்படி பயன்படுத்தி பாருங்க!

Disclaimer