Vetrilai Benefits For Diabetes: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பொதுவாக நோயாக நீரிழிவு நோய் உள்ளது. உலகளவில் மில்லியன் கணக்கிலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும் வழிகளில் முதன்மையானதாக அமைவது ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஆகும். குறிப்பாக இரத்த சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்படுத்த சீரான உணவுகளை கடைபிடிப்பதாகும். அந்த வகையில் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட இரவு உணவுக்குப் பின் தூங்கும் முன் வெற்றிலையை எடுத்துக் கொள்ளலம்.
சர்க்கரை நோய்க்கு வெற்றிலை தரும் நன்மைகள்
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஸ்வாதி பத்வால் அவர்கள் நீரிழிவு நோய்க்கு வெற்றிலை தரும் நன்மைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். மருத்துவர் ஸ்வாதி பத்வால் அவர்களின் கூற்றுப்படி, “நவீன காலங்களில் வெற்றிலையை புகையிலை மற்றும் பல பொருள்களுடன் இணைந்து பயன்படுத்துவது வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனினும், இவை குரோமியத்தின் சிறந்த ஆதாரமாக இருப்பதால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. குரோமியம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாகவே, உணவுக்குப் பிறகு வெற்றிலையை உண்ணும் பழக்கம் பழங்காலம் முதலே வழக்கத்தில் உள்ளது” என்று கூறியுள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
அதன் படி, படுக்கைக்கு முன் வெற்றிலையை சாப்பிடுவது சர்க்கரை அளவைக் குறைக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள சேர்மங்கள் மெதுவாக ஒரே இரவில் இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுவதற்கு அனுமதிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Cinnamon For Diabetes: சர்க்கரை நோயாளிகளே! இந்த பொக்கிஷத்தை மிஸ் பண்ணீடாதீங்க.
வெற்றிலையின் எதிர்மறை விளைவுகள்
டாக்டர் பத்வால் அவர்களின் கூற்றுப்படி, ”குரோமியம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதே சமயம், வெற்றிலையை மிகக் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.” எனக் கூறியுள்ளார். ஏனெனில் அதிகப்படியான குரோமியம் உட்கொள்ளல் இரத்த சோகை, உடல் எடை இழப்பு, குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை, சிறுநீரக செயலிழப்பு, தோல் அழற்சி, உயர் இரத்த சர்க்கரை போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, மற்ற மூலிகைகளைப் போலவே வெற்றிலையையும் அதிகம் உட்கொள்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். வெற்றிலையை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் சில பொதுவான அபாயங்களைக் காணலாம்.
- நரம்பு பாதிப்பு
- புற்றுநோய்
- வாய்ப்புண்
இந்த பதிவும் உதவலாம்: Beetroot Benefits: அரை கப் பீட்ரூட் துண்டு போதும். நீரிழிவு பிரச்சனையை ஈஸியா குறைக்கலாம்.!
சில அறிவியல் சான்றுகள் மற்றும் நிபுணர்களின் கருத்துப்படி, நீரிழிவு நோயைத் திறம்பட குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும் வெற்றிலை ஆரோக்கியத்தைத் தருகிறது. இந்த இலைகளில் உள்ள குரோமியம் உள்ளடக்கம் பயனடையக் கூடிய ஆரோக்கியமான விருப்பத்தை உருவாக்குகிறது. எனினும், இந்த இலைகளுடன் சேர்த்து சுண்ணாம்பு போன்ற வழக்கமான வடிவத்தில் உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் இந்த சேர்மங்கள் புற்றுநோயை உண்டாக்கும்.
இவ்வாறு வெற்றிலையின் உதவியுடன் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம். அதே சமயம், சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வதும் அவசியமாகிறது. எனினும், மருத்துவ ஆலோசனையின் படி சர்க்கரை நோயாளிகள் வெற்றிலையை எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Amla For Diabetes: நெல்லிக்காயை இப்படி எடுத்துக்கிட்டா சுகர் பிரச்சனையே வராதாம்.!
Image Source: Freepik