$
Vetrilai Nanmaigal: வெற்றிலை நன்மைகளை பலரும் கண்டிப்பாக அறிந்திருப்பீர்கள். பூஜை மற்றும் திருமண நிகழ்வுகளில் கண்டிப்பாக வெற்றிலை இடம்பெறும். இன்றைய காலக்கட்டத்தில் யாரும் வெற்றிலையை அவ்வளவு பயன்படுத்துவதில்லை. ரெடிமேட் முறையில் ஏதாவது வாங்கி அதையே உணவுக்கு பின் சாப்பிடுவார்கள்.
வெற்றிலை ஆரோக்கிய நன்மைகள்
வெற்றிலையில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. பல அத்தியாவசிய பண்புகள் இருக்கிறது. வெற்றிலையின் குளிர்ச்சியானது வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
இதன் நுகர்வு வாய் துர்நாற்றம் அல்லது அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆனால் இந்த அனைத்து நன்மைகளுக்கும் வெற்றிலையை சரியான முறையில் உட்கொள்வது அவசியம்.
வெற்றிலையை எப்படி உட்கொள்வது?

வெற்றிலை மடிப்பாக சாப்பிடலாம்
வெற்றிலை பாரம்பரிய முறையில் பல வகையில் உட்கொள்ளப்படுகிறது. இதை சில வெறும் வாயிலும், இடித்தும், ஸ்வீட் பீடா போன்றும் சாப்பிடுவார்கள். இது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் எடையை குறைக்கவும் உதவும்.
வெற்றிலை சாலட்
வெற்றிலையை பழங்கள் மற்றும் காய்கறி சாலட்களில் சேர்த்தும் சாப்பிடலாம். இதற்கு இலைகளை பொடியாக நறுக்கி சாலட்டில் கலந்து சாப்பிட வேண்டும். வெற்றிலையை சாலட் வடிவில் சாப்பிடுவது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். நார்ச்சத்துடன் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
வெற்றிலை டீ
டீ மீது ஆசை இல்லாதவர்கள் எண்ணிக்கை மிக குறைவு. ஆனால் வெற்றிலை தேநீர் கேள்விப்பட்டுள்ளீர்களா. இதற்கு வெற்றிலையை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அதில் வெல்லம் மற்றும் எலுமிச்சை கலந்து சாப்பிடவும். இந்த தேநீர் செரிமானத்தை ஆரோக்கியமாகவும், எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.
வெற்றிலை ஸ்மூத்தி
உங்கள் பழ ஸ்மூத்தியை இன்னும் சுவையாக மாற்ற, நீங்கள் அதில் வெற்றிலை சேர்க்கலாம். இதற்கு வெற்றிலையை வெல்லம் பாகு மற்றும் பழங்களுடன் சேர்த்து அரைக்க வேண்டும். இது உங்களின் உணவுப் பசியை கட்டுப்படுத்தி, புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும்.
வாய் புத்துணர்ச்சி
வாய் துர்நாற்றத்தை போக்க வெற்றிலை பெரும் உதவியாக இருக்கும். வாய் புத்துணர்ச்சி அளிக்க வெற்றிலை பிரதானம். இதை தயாரிக்க, வெற்றிலை, ஏலக்காய், வெல்லம் மற்றும் ஆளி விதைகளை கலக்க வேண்டும்.
வெற்றிலையில் இதுபோன்ற பல ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியுள்ளது. நீங்கள் தாராளமாக தினசரி அளவான வீதம் வெற்றிலையை எடுத்துக் கொள்ளலாம்.
Pic Courtesy: FreePik