
$
Ways To Use Betel Leaves For Skin: சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க பலரும் பல்வேறு வழிகளைத் தேர்வு செய்கின்றனர். அதிலும் குறிப்பாக அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், சில சமயங்களில் இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே இயற்கையான முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். அந்த வகையில் முகப்பொலிவுக்கு வெற்றிலை பெரிதும் உதவுகிறது. இது பல்வேறு தோல் பிரச்சனைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
வெற்றிலை நீரால் முகத்தை சுத்தம் செய்வதன் மூலம் பல்வேறு வகையான ஒவ்வாமை பிரச்சனைகளைக் குணமாக்கலாம். வெற்றிலை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது எரிச்சல், அரிப்பு, மற்றும் வலி போன்ற தோல் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் தருகிறது. சருமத்திற்கு வெற்றிலை தரும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Ear Pimple Remedies: காது கொப்புளத்தால் அவதியா? கொப்புளம் சீக்கிரம் போக இத செய்யுங்க.
சருமத்திற்கு வெற்றிலை தரும் நன்மைகள்
வீக்கத்தைக் குறைக்க
வெற்றிலையில் உள்ள பல்வேறு மருத்துவ குணங்கள் சருமத்திற்கு பல்வேறு வழிகளில் நன்மைகளைத் தருகிறது. இதில் ஃபிளவனாய்டுகள், பாலிபினால்கள் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் போன்றவை நிறைந்துள்ளன. இவை முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

அரிப்பு பிரச்சனையிலிருந்து நிவாரணம்
வெற்றிலையைப் பயன்படுத்துவதன் மூலம் அரிப்பு, வலி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும். இதன் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் அரிப்பு, வலியிலிருந்து நிவாரணம் தருகிறது. இது முகப்பரு மற்றும் தோல் வெடிப்புகள் வளர்வதைத் தடுக்கிறது.
வயதாவதை எதிர்த்துப் போராட
முதுமை காரணமாக, சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மை குறையலாம். இதனால் சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் போன்றவை ஏற்படுகின்றன. இந்த சூழ்நிலையில் வெற்றிலையைப் பயன்படுத்துவது சருமத்தை பளபளப்பாகவும், அழகாகவும் வைக்க உதவுகிறது.
கரும்புள்ளிகளைக் குறைக்க
சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்க வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. இதில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் சருமத்தை ஒளிர வைக்க உதவும் சில பொருள்கள் உள்ளன. வெற்றிலையைப் பயன்படுத்துவதன் மூலம் கறைகளைக் குறைத்து சருமத்தை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Olive Oil For Skin: முகம் பளிச்சினு தங்கம் போல மின்ன ஆலிவ் எண்ணெய் ஒன்னு போதும்
முகத்திற்கு வெற்றிலை பயன்படுத்தும் முறை
சருமத்திற்கு வெற்றிலையை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.
வெற்றிலை பேஸ்ட்
வெற்றிலையை நன்கு நசுக்கி அதன் சாற்றைத் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இதில் தயிர் சேர்த்து கலவையாக மாற்றி பருக்கள் மீது தடவி வர பருக்கள் விரைவில் மறையும்.

வெற்றிலை எண்ணெய்
வெற்றிலையை கண்ணாடி ஜாடி ஒன்றில் போட்டு வைக்க வேண்டும். பின் இதில் ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெயைச் சேர்க்கலாம். இந்த கவலையை 1 வாரத்திற்கு ஊறவைக்க வேண்டும். பின் இந்த எண்ணெயை வடிகட்டி, வாரம் ஒரு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்து வர முகத்தைப் பொலிவாக வைத்திருக்கலாம்.
வெற்றிலை டோனர்
வெற்றிலை டோனர் தயாரிக்க, அதை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின், இந்த நீரை மட்டும் தனியாக எடுத்து ஆற வைக்க வேண்டும். இந்த நீரை ஸ்ப்ரே பாட்டில் ஒன்றில் ஊற்றி 5 நாள்கள் வரை டோனராகப் பயன்படுத்தலாம்.
வெற்றிலை ஃபேஸ்பேக்
வெற்றிலையை மிக்ஸியில் நன்கு மைய அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளலாம். பின் இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.
குறிப்பு
அதிகப்படியான முகப்பரு அல்லது சரும பிரச்சனை கொண்டவர்கள், அலர்ஜியால் பாதிக்கபட்டவர்கள் மருத்துவரிடம் அனுமதி பெற்ற பிறகே வெற்றிலையை பயன்படுத்த வேண்டும். மேலும் சருமம் உணர்திறன் மிக்கதென்பதால் முகத்திற்கு பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Cinnamon Face Pack: முகத்தில் பருக்கள் சீக்கிரம் மறைய இலவங்கப்பட்டையுடன் இந்த ஒரு பொருள் போதும்
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version