Betel leaf benefits for weight loss: நம் வீட்டில் இருக்கும் முதியவர்கள் அடிக்கடி வெற்றிலை பாக்கு போடுவதை பார்த்திருப்போம். நாமும் சிறுவயதில் அவர்களிடம் வாங்கி சாப்பிட்டிருப்போம். தற்போதும், பூஜை, திருமணம் அல்லது விருந்து போன்ற சுப நிகழ்வுகளில் வெற்றிலை பாக்கு போடுவது வழக்கம். இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. அதுமட்டும் அல்ல இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
வெற்றிலை இயற்கையில் குளிர்ச்சியான பண்பு உடையது. இது வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. இதன் நுகர்வு வாய் துர்நாற்றம் அல்லது அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆனால், இந்த அனைத்து நன்மைகளையும் பெற வெற்றிலையை சரியான முறையில் உட்கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த பதிவும் உதவலாம் : Apricots Benefits: குளிர்காலத்தில் ஆப்ரிகாட் சாப்பிடுவது சருமத்திற்கு எவ்வளவு நல்லது தெரியுமா?
ஒருங்கிணைந்த சுகாதார பயிற்சியாளரும் ஊட்டச்சத்து நிபுணருமான நேஹா ரங்லானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெற்றிலையின் நன்மைகள் மற்றும் அவற்றை எவ்வாறு உட்கொள்வது என்பது பற்றி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவற்றை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
வெற்றிலையை சரியான முறையில் எப்படி சாப்பிடணும்?

பான் போல் சாப்பிடுங்கள்
வெற்றிலை பாரம்பரிய முறையில் அதாவது கலப்பு வெற்றிலை தயாரித்து உட்கொள்ளப்படுகிறது. பான் தயாரிக்க, அதில் கற்கண்டு, தேங்காய், பாக்குமற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை சேர்க்கலாம். இது உங்கள் உணவுப் பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும், மேலும் எடையைக் குறைக்கவும் உதவும்.
இந்த பதிவும் உதவலாம் : Banana Stem Juice: சிறுநீரக கல் முதல் நீரிழிவு நோய்வரை அனைத்தையும் குணப்படுத்தும் வாழைத்தண்டு ஜூஸ்!
வெற்றிலை சாலட்
வெற்றிலையை பழங்கள் மற்றும் காய்கறி சாலட்களில் சேர்த்தும் சாப்பிடலாம். இதற்கு இலைகளை பொடியாக நறுக்கி சாலட்டில் கலந்து சாப்பிட வேண்டும். வெற்றிலையை சாலட் வடிவில் சாப்பிடுவது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். நார்ச்சத்துடன் பான் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
வெற்றிலை டீ

டீ பிரியர்கள் வெற்றிலையில் தேநீர் தயாரித்து அருந்தலாம். இதற்கு, வெற்றிலையை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அதில் வெல்லம் மற்றும் எலுமிச்சை கலந்து சாப்பிடவும். இந்த டீ செரிமானத்தை ஆரோக்கியமாகவும், எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Breakfast Idea: காலையில் இதை மட்டும் சாப்பிடுங்க.. எந்த நோயும் வராது.!
வெற்றிலை ஸ்மூத்தி
உங்கள் பழ ஸ்மூத்தியை இன்னும் சுவையாக மாற்ற, நீங்கள் அதில் சிறிது வெற்றிலை சேர்க்கலாம். இதற்கு வெற்றிலையை வெல்லம் பாகு மற்றும் பழங்களுடன் சேர்த்து அரைக்க வேண்டும். இது உங்களின் உணவுப் பசியையும் கட்டுப்படுத்தி, புத்துணர்ச்சியுடன் உணர்வீர்கள்.
வெற்றிலை மவுத் பிரஷ்னர்
வாய் துர்நாற்றத்தை போக்க வெற்றிலை வாய் புத்துணர்ச்சி பலன் தரும். இதை தயாரிக்க, வெற்றிலை, ஏலக்காய், வெல்லம் மற்றும் ஆளி விதைகளை கலந்து சாப்பிட வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : Health Tips: 'இந்த' 5 விஷயங்கள சேர்த்துக்கோங்க… எந்த நோயும் உங்களை நெருங்காது!
வெற்றிலை சட்னி

துவையல் மற்றும் சட்னி செய்தும் வெற்றிலையை சாப்பிடலாம். பான் சட்னி செய்ய வெற்றிலை, பச்சை மிளகாய், மஞ்சள், தேங்காய் சேர்த்து அரைக்க வேண்டும். சுவைக்காக மசாலாப் பொருட்களையும் இதில் சேர்க்கலாம்.
Pic Courtesy: Freepik