Breakfast Plan: நம் நாளை கிக் ஸ்டார்ட் செய்வது காலை உணவு தான். அத்தகைய காலை உணவில் ஆரோக்கியமான உணவுகளை நாம் சேர்க்க வேண்டும். இது நம்மை பல நோயிடம் இருந்து தள்ளி வைக்க உதவுகிறது. இதற்காக நீங்கள் காலை உணவாக என்ன சாப்பிட வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
கிச்சடி

கிச்சடியில் பல காய்கறிகள் மற்றும் நட்ஸ் சேர்க்கப்படும். இது பல ஊட்டச்சதுகளை நமக்கு வழங்குகிறது. மேலும் இது உங்களை நீண்ட நேரத்திற்கு முழுமையாக வைத்திருக்கும். இதனால் அடிக்கடி சாப்பிட வேண்டிய தேவை இருக்காது. இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
ஸ்மூத்தி
காலையில் பழம் அல்லது கீரை கொண்ட ஸ்மூத்தி குடிப்பது உடலுக்கு நல்லது. இதில் தேன் மற்றும் சியா விதை சேர்த்து சாப்பிடவும். இது உங்கள் நாளை தொடங்க சிறந்த காலை உணவு தேர்வாக இருக்கும்.
இதையும் படிங்க: Fiber Rich Foods: இந்த உணவுகள் நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும்.!
இட்லி
இந்திய காலை உணவில் இட்லி முக்கியமாக கருதப்படுகிறது. இதனுடன் சாம்பார், தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்டால், அவ்வளவு சுவையாக இருக்கும். இது ஆரோக்கியமான சுவையை அளிக்கிறது.
கோதுமை அடை
கோதுமை மாவை தோசை மாவு போல் தண்ணீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும். இதில் வெங்காயம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலந்துக்கொள்ளவும். இதில் அடை சுட்டு சாப்பிடவும். இது சிறந்த காலை உணவு தேர்வாக இருக்கும்.
தண்ணீர்
எந்த உணவு எடுத்துக்கொள்ளும் போதும் சாப்பிடுவதற்கு முன் மற்றும் அரை மணி நேரத்திற்கு பின் தண்ணீர் குடிப்பதை மறக்காதீர்கள்.
மேற்கூறிய உணவுகள் உடலுக்கு நன்மையை கொடுக்கும். இருப்பினும் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தாலோ அல்லது நீங்கள் ஏதேனும் மருத்துவ நிலையில் இருந்தாலோ, இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரிடம் இருந்து ஆலோசனை பெறவும்.
Image Source: Freepik