Breakfast Ideas: காலையில் என்ன செய்வது என்று குழப்பமா.? இதை ட்ரை பண்ணுங்க..

  • SHARE
  • FOLLOW
Breakfast Ideas: காலையில் என்ன செய்வது என்று குழப்பமா.? இதை ட்ரை பண்ணுங்க..


Easy Breakfast Recipes: தினமும் காலை எழுந்த உடன் என்ன உணவு செய்யலாம் என்று தலையை பிச்சிக்கொள்ளும் அளவுக்கு யோசனையா? கவலைய விடுங்க. உங்களுக்கான சில காலை உணவு ரெசிபியை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இதை செய்து ரிலாக்ஸ் செய்யவும். 

தோசை

அனைவராலும் விரும்பப்படும் சர்வதேச உணவாக தோசை திகழ்கிறது. இதனுடன் சாம்பர், சட்னி சேர்த்து சாப்பிடும் போது வரும் சுகமே தனி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக தோசை திகழும். தோசை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். 

ரவா உப்மா

காலை உணவாக ரவா உப்மா செய்யவும். இதில் கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் சேர்து செய்யவும். குறிப்பாக தாளிக்கும் போது, நெய், முந்திரி, இஞ்சி போன்றவற்றை பயன்படுத்தவும். 

காலை உணவாக இதனை உட்கொள்ளும் போது, புரதம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை இதில் இருந்து கிடைக்கிறது. மேலும் இரும்புச்சத்து, வைட்டமின் A, B, C மற்றும் D ஆகியவை கிடைக்கின்றன. 

இதையும் படிங்க: ஒரு கப் கோதுமை ரவை இருந்தா போதும்.. சுவையான இட்லி ரெடி..

பூரி மற்றும் கிழங்கு

கோதுமையில் பூரி செய்வது நல்லது. மைதாவை விட கோதுமையில் நல்ல அளவிலான கார்போஹைட்ரேட்டும் புரோட்டீனும் உள்ளன. இதிற்கு உருளைக்கிழங்கு தான் சிறந்த காம்பினேஷன். பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா செய்து சாப்பிடவும். 

இட்லி

இட்லி சாம்பார் காலை சாப்பாட்டிற்கு சிறந்தது. புரோட்டீன், கார்ப்ஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. இது உங்கள் நாளை புத்துணர்ச்சியுடனும் தொடங்க உதவுகிறது. இட்லி மீந்தால், அதில் உப்மா செய்யலாம். 

பொங்கல்

அரிசி, பாசிப்பருப்பு போதும். கமகமன்னு பொங்கல் ரெடி. தாளிப்பதற்கு நெய், முந்திரி, பச்சை மிளகாய் இஞ்சி, கறிவேப்பிலை தேவைப்படும். காலையில் பொங்கல் சாப்பிட்டால் மந்தமாக இருக்கும் என்றாலும், இதில் பல நன்மைகள் உள்ளன. இது காலை உணவுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். 

Image Source: Freepik

Read Next

சிக்கனை இப்படி ட்ரை பண்ணுங்க.. டக்குன்னு எடை குறையும்

Disclaimer

குறிச்சொற்கள்