$
Healthy Chicken Recipe For Weight Loss: குண்டா இருந்தால் சிக்கன் சாப்பிடலாமா என்று யோசிக்கிறீர்களா? தாராலமாக சாப்பிடலாம். ஆனால் அதை எப்படி செய்வது என்பதை பொறுத்தது. உடல் எடையும் கூடக்கூடாது, அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் இருக்க சிக்கனை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள். ருசியாகவும் இருக்கும், உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
உடல் எடையை குறைக்க சிக்கன் எப்படி உதவுகிறது?
சிக்கனில் அதிகளவு புரதம் நிறைந்துள்ளது. இது உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவும். மேலும் இது கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் இருக்கிறது. இதற்காக நீங்கள் நாட்டுக் கோழியை தேர்வு செய்வது நல்லது.
சிக்கன் சாப்பிட்டும் உடல் எடை கூடாமல் இருக்கனும் என்றால், அதை சுட்டோ, சூப்பாகவோ உட்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்து சாப்பிடக்கூடாது. இது கலோரியை அதிகரித்து, எடையை அதிகரிக்க உதவுகிறது.
இதையும் படிங்க: ஒரு கப் கோதுமை ரவை இருந்தா போதும்.. சுவையான இட்லி ரெடி..
ஆரோக்கியமான சிக்கன் ரெசிபி
மல்வானி சிக்கன் சுக்கா:
மகாராஷ்டிராவில் பிரலமாக இருக்கும் மல்வானி சிக்கன் சுக்கா, ஆரோக்கியமான முறையில் செய்யப்படும். இதற்கு 1 ஸ்பூன் எண்ணெய் மட்டும் போதும்.

தேவையான பொருட்கள்:
நாட்டுக்கோழி - 1 கிலோ
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பச்சை ஏலக்காய் - 5
துருவிய தேங்காய் - 1 கப்
கருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 6
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 16
மல்லி விதை - 3 டீஸ்பூன்
ஏலக்காய் - 3
கசகசா - 1 டீஸ்பூன்
செய்முறை
- வரமிளகாய், மல்லி விதை, கிராம்பு, மிளகு, சீரகம், கருஞ்சீரகம், ஏலக்காய், துருவிய தேங்காய், கசகசா ஆகியவற்றை தனியாக வருத்து எடுத்துக்கொள்ளவும். இதில் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
- பின்னர் கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கிராம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மஞ்சள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- இதனுடன் சிக்கன் மற்றும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட்டு, 20 நிமிடங்களுக்கு வேக விடவும்.
- சிக்கன் வெந்த பிறகு அடுப்பை அணைத்து, அதன் மீது எலுமிச்சை சாற்றை பிழிந்து விடவும். அவ்வளவு தான் மல்வானி சிக்கன் சுக்கா ரெடி.
Image Source: Freepik