Godhumai Rava Idli: ஒரு கப் கோதுமை ரவை இருந்தா போதும்.. சுவையான இட்லி ரெடி..

  • SHARE
  • FOLLOW
Godhumai Rava Idli: ஒரு கப் கோதுமை ரவை இருந்தா போதும்.. சுவையான இட்லி ரெடி..

கோதுமை ரவையில் எப்படி இட்லி செய்வது? இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன? இதற்கான விளக்கத்தை இங்கே விரிவாக காண்போம். 

கோதுமை ரவை இட்லி ரெசிபி

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப் 

தயிர் - 3/4 கப்   

துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்  

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி 

உப்பு - தாவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - 1/2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு -  1 டீஸ்பூன் 

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி 

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

இதையும் படிங்க: சம்பா கோதுமை இருக்கா.? 10 நிமிஷத்துல பொங்கல் ரெடி.!

செய்முறை: 

  • வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, கடலை பருப்பு, உளுந்து, பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும். 
  • இதில் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்க்கவும். 
  • பின்னர் மிதமான தீயில் கோதுமை ராவையை சேர்த்து, நிறம் மாறும் வரை வருக்கவும்.
  • இதை அடுப்பில் இருந்து இறக்கி குளிர விடவும், 
  • தற்போது இதில் கேரட், கொத்தமல்லி, தயிர் சேர்த்து, நன்கு கிளறி, 10 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற விடவும். 
  • இவ்வாறு செய்தால் இட்லி மாவு ரெடி. இதில் இட்லி சுட்டு சாப்பிடவும். 

கோதுமை ரவை நன்மைகள்

ஆற்றலை அதிகரிக்கும்

காலை உணவாக கோதுமை ரவை இட்லி சாப்பிடுவது, உங்களின் நாளை ஆற்றல் மிக்கதாக தொடங்க வழிவகுக்கும். 

எலும்பு வலுவாகும்

கோதுமை ரவையில் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்றவை உள்ளன. இவை எலும்பை வலுவாக்கும். மேலும் இது நரம்பு மண்டலத்தை காக்கிறது. 

இதய ஆரோக்கியம்

கோதுமை ரவையில் செலினியம் இருப்பதால், இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. 

எடை இழப்பு

கோதுமை ரவையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 

நீரிழிவு மேலாண்மை

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கோதுமை ரவை சிறந்த உணவாக இருக்கும். இது இன்சுலின் சுரப்பை சீராக்குகிறது. மேலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 

Read Next

அடிக்கடி சோர்வாகவும் சோம்பேறியாகவும் உணர்கிறீர்களா? அப்போ இந்த ஸ்மூத்தியை குடியுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்