சம்பா கோதுமை இருக்கா.? 10 நிமிஷத்துல பொங்கல் ரெடி.!

  • SHARE
  • FOLLOW
சம்பா கோதுமை இருக்கா.? 10 நிமிஷத்துல பொங்கல் ரெடி.!

சிலர் காலையில் பொங்கல் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் அதை சாப்பிட்டால் தூக்கம் வரும் என்பதால், அதை விலக்கி வைப்பார்கள். ஆனால் நாங்கள் சொல்லும் வகையில் பொங்கல் செய்து பாருங்க. வீடே மனக்கும். அது ஆரோக்கியமானதும் கூட. 

பச்சரிசிக்கு பதில் சம்பா கோதுமையை பயன்படுத்தி பாருங்க. 10 நிமிஷத்துல, வீடே மனக்கும் பொங்கல் ரெடி. இதை எப்படி செய்வது என்று நாங்கள் சொல்கிறோம். 

சம்பா கோதுமை பொங்கல் செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்

சம்பா கோதுமை - 1 கப்

பாசி பருப்பு - 1/2 கப்

சீரகம் - 1 டீஸ்பூன் 

மிளகு - 1 டீஸ்பூன் 

முந்திரி - ஒரு கைப்பிடி

இஞ்சி - ஒரு துண்டு 

பெருங்காயம் - 1/2 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 3

இதையும் படிங்க: Sakkarai Pongal Recipe: சுகர் இருக்கா.? அப்போ சர்க்கரை பொங்கலை இப்படி செஞ்சி பாருங்க.!

செய்முறை

  • குக்கரில் 1  டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து, அதில் பாசி பருப்பு, சம்பா கோதுமை மற்றும் உப்பு சேர்த்து வருத்துக்கொள்ளவும். 
  • நிறம் மாரி வரும் நேரத்தில் அதில் 1 கப் சம்பா கோதுமைக்கு 3 கப் அளவு தண்ணீர் எனவும், 1/2 கப் பாசி படுப்புக்கு 1 கப் தண்ணீர் என்ற விகிதத்தில் 4 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடிவும். 
  • மிதமான தீயில் அடுப்பை வைத்து, மூன்று விசில் வந்த உடன் அடுப்பை நிறுத்தவும். 
  • குக்கர் விசில் அடங்கியதும், குக்கரை திறந்து, கரண்டியை வைத்து நன்கு கிண்டவும். 
  • ஒரு கடாயில் 1  டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து, அதில் சீரகம், மிளகு, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி துண்டு, பெருங்காயம் சேர்த்து வருக்கவும். 
  • இதனை குக்கரில் சேர்த்து, மேலும்  1  டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலக்கவும். 
  • அவ்வளவு தான் ஆரோக்கியமான சம்பா கோதுமை பொங்கல் ரெடி. இதனை சுவைத்து மகிழவும். 

சம்பா கோதுமை நன்மைகள்

சம்பா கோதுமை தமிழ்நாட்டில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு முக்கியமான, ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவாகும்.  அவை ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் இரும்பு, துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம் போன்ற தாதுக்களின் வளமான ஆதாரங்கள். 

இதில்  கரையாத நார்ச்சத்துக்கள் இருப்பதால்  செரிமானப் பாதை வழியாகச் சென்று மலச்சிக்கல் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. இதில் குறைந்த அளவு கார்போஹைட் உள்ளது. மேலும் புரதம் நிறைந்துள்ளது. இது மிகவும் எளிதில் ஜீரணமாகும் மற்றும் இரைப்பை குடல் கோளாறுகளை தடுக்கிறது. 

இதனால் காலையில், சம்பா கோதுமை பொங்கல் சாப்பிடுவது, உங்கள் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உங்களை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும். 

image Source: Freepik

Read Next

Benefits Of Jaggery Tea: குளிர்காலத்தில் டீயில் வெல்லம் போட்டு குடித்து பாருங்க.. அவ்வளவு நல்லது.!

Disclaimer

குறிச்சொற்கள்