Sakkarai Pongal Recipe: சுகர் இருக்கா.? அப்போ சர்க்கரை பொங்கலை இப்படி செஞ்சி பாருங்க.!

  • SHARE
  • FOLLOW
Sakkarai Pongal Recipe: சுகர் இருக்கா.? அப்போ சர்க்கரை பொங்கலை இப்படி செஞ்சி பாருங்க.!

உங்கள் வீட்டில் சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்களா? அப்போ இந்த பொங்கல் பண்டிகையின் போது அவர்களுக்கு இந்த மாதிரி சர்க்கரை பொங்கல் செய்து கொடுங்க. ஆரோக்கியமான இனிமையை உணர்வார்கள். இதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதற்கான பொருட்கள் என்னென்ன? என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். 

1. தினை சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்

தினை அரிசி - 1 கப்

பால் - 1 கப்

தண்ணீர்- 3 கப்

பாசிப்பருப்பு - 1/3 கப்

முந்திரி மற்றும் உலர் திராட்சை - ஒரு கைபிடி (தேவையான அளவு)

ஏலக்காய் பொடி - ஒரு டீஸ்பூன்

வெல்லம் - 2 கப்

நெய் - 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை

* வாணலியில் பாசிப்பருப்பை போட்டு வாசம் வரும் வரை வறுக்கவும். இதே போல் தினை அரிசியையும் தனியாக வதக்கவும். 

* பானையில் தினை அரிசியை போடவும். இதில் 3 கப் தண்ணீர் மற்றும் 2 கப் பாலை சேர்க்கவும். இவை நன்கு குழைந்து வரும் வரை விடவும். 

* இந்த நேரத்தி 2 கப் வெல்லத்தை அரை டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும். இதனுடன் பாசிப்பருப்பை சேர்த்து கிளரவும். 

* இப்போது பொங்கலில் இதனை சேர்த்து மிதமான வெப்பநிலையில் அப்படியே வைக்கவும்.

* நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து மறுக்கவும். 

* தற்போது இதையும் பொங்கலுடன் இணைக்குவும். இதையடுத்து ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கலந்து விடவும். 

* இப்போது தினை சர்க்கரை பொங்கல் தயாராகிவிடும். இதனை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டால் எந்த பிரச்னையும் வராது. ஆனால் பகுதி கட்டுப்பாடு அவசியம். 

இதையும் படிங்க: Soups For Diabetes: நீரிழிவு நோய்க்கு இந்த சூப் குடிங்க.! சர்க்கரை அளவை பார்த்து ஆச்சரியப்படுவீங்க.

2. பழுப்பு அரிசி சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்

பழுப்பு அரிசி - 1 கப்

பாசிப்பருப்பு - 1/2 கப்.

ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

நெய் - 1 டேபிள் ஸ்பூன் 

உடைந்த முந்திரி - 10

உலர் திராட்சை - 10

உப்பு - ஒரு சிட்டிகை

வெல்லம் - 2 கப்

தண்ணீர் - 2 கப்

பால் - 1/2 கப்

செய்முறை

* ஒரு தடிமனான பானையில் பழுப்பு அரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்துக்கொள்ளவும். இதனுடன் 2 கப் தண்ணீர் மற்றும் 1/2 கப் சேர்த்து கொதிக்க விடவும். 

* இந்த நேரத்தி 2 கப் வெல்லத்தை அரை டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும். 

* பொங்கல் குழைந்து வரும் வேலையில் தீயை மிதமாக வைத்துக்கொண்டு, வெல்ல கரைசலை சேர்த்து கிளரவும். 

* நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து மறுக்கவும். 

* தற்போது இதையும் பொங்கலுடன் இணைக்குவும். இதையடுத்து ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கலந்து விடவும். 

* இப்போது பழுப்பு அரிசி சர்க்கரை பொங்கல் தயாராகிவிடும். இதனை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டால் எந்த பிரச்னையும் வராது. ஆனால் பகுதி கட்டுப்பாடு அவசியம். 

சர்க்கரை நோயாளிகள், மேற்கூறிய செய்முறைகளை முயற்சித்து, அரோக்கியமான இனிமையை சுவைக்கவும். இருப்பினும் இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது. 

Read Next

Soups For Diabetes: நீரிழிவு நோய்க்கு இந்த சூப் குடிங்க.! சர்க்கரை அளவை பார்த்து ஆச்சரியப்படுவீங்க.

Disclaimer

குறிச்சொற்கள்