Sugarcane juice pongal recipe: வீடே மணக்கும் சுவையில் அசத்தலான கரும்புச்சாறு பொங்கல் ரெசிபி! இப்படி ஈஸியா செய்யுங்க

Karumbu chaaru pongal recipe: இந்த பொங்கல் பண்டிகையில் சற்று வித்தியாசமாக கரும்புச்சாறு கொண்டு பொங்கல் தயார் செய்யுங்கள். இது சுவையுடன் கூடிய பல ஆரோக்கிய நன்மைகளையும் தரக்கூடியது. இதில் கரும்புச்சாறு பொங்கல் தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Sugarcane juice pongal recipe: வீடே மணக்கும் சுவையில் அசத்தலான கரும்புச்சாறு பொங்கல் ரெசிபி! இப்படி ஈஸியா செய்யுங்க

How to make karumbu chaaru pongal recipe: பொங்கல் என்றாலே பொங்கல், கரும்பு இரண்டும் தான். தென்னிந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையில், பெரும்பாலானோர் வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடுவர். இதில் பலரும் பாரம்பரியமாக வெல்லம் சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்வர். ஆனால் இந்த முறை வித்தியாசமாக கரும்புச் சாறு கொண்டு கரும்புச் சாறு பொங்கலைத் தயார் செய்யலாம்.

கரும்பு பொங்கல் அனைவரும் விரும்பி உண்ணும் பொங்கல் வகையாகும். கரும்பு பொங்கலை தெய்வத்திற்கு நைவேத்தியம் செய்த பிறகு காலை உணவில் சேர்த்து சாப்பிடுவது நல்லது. இது ஒரு பசையம் இல்லாத செயல்முறையைக் குறிக்கிறது. கூடுதலாக, இதில் உள்ள கரும்பு அதன் ஊட்டச்சத்து பண்புகளுக்காக நன்கு பெயர் பெற்றதாகும். இதில் கரும்புச்சாறு பொங்கல் தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் தயாரிக்கும் முறை குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்:  Pongal 2025: ஆரோக்கியமான முறையில் சர்க்கரை பொங்கல் செய்யலாமா.?

கரும்புச்சாறு பொங்கல் தயார் செய்யும் முறை

தேவையானவை

  • பச்சரிசி - 2 கப்
  • கரும்புச்சாறு - 4 கப்
  • பால் - அரை கப்
  • பாசிப்பருப்பு - முக்கால் கப்
  • வெல்லம் - ஒரு கப்
  • முந்திரி, திராட்சை - கால் கப்
  • ஏலக்காய் பவுடர் - கால் ஸ்பூன்
  • சுக்குப்பொடி - 2 சிட்டிகை
  • தேங்காய் - அரை மூடி
  • தண்ணீர் - 3 கப்
  • நெய் - தேவையான அளவு

கரும்புச்சாறு பொங்கல் தயாரிக்கும் முறை

  • கரும்புச்சாறு பொங்கல் தயார் செய்வதற்கு முதலில் பாசிப்பருப்பை நன்கு சுத்தம் செய்து அதை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு பச்சரிசியை சுத்தம் செய்து 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
  • பாத்திரம் ஒன்றை எடுத்து, அதில் கரும்புச்சாற்றை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கலாம். இது கொதித்த பின் தனியே எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
  • அதன் பிறகு, ஒரு பானை அல்லது குக்கரில் இரண்டு கப் தண்ணீரும் அரை கப் பாலும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இப்போது வறுத்து ஊறவைத்த பருப்பு மற்றும் அரிசியை அதில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இப்போது எடுத்து வைத்த கரும்புச்சாறை அதில் ஊற்றி குக்கரை மூடி 4-5 விசில் விட்டு வேக வைக்க வேண்டும். பின், குக்கரிலிருந்து விசில் நீங்கியதும் திறந்து கரண்டியால் நன்கு குழைவாக மசித்துக் கொள்ளலாம்.
  • அதன் பிறகு, கடாய் ஒன்றில் வெல்லம் சேர்த்து அதில் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைய விட்டு வைத்துக் கொள்ளலாம்.
  • இந்த வெல்லக் கரைசலை வேகவைத்த அரிசியில் ஊற்றி நன்றாகக் கிளறி விட வேண்டும். இது ஆரம்பத்தில் குழைந்து இருக்கும். ஆறிய பிறகு கொஞ்சம் கெட்டியாக மாறும்.
  • பிறகு, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு வெல்லப்பாகின் சுவை அரிசியோடு நன்றாகக் கலக்கும் வரை கிளறிவிட வேண்டும். இப்போது ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம், ஏலக்காய்த் தூள், சுக்குப் பொடி போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறலாம். இதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.
  • இறுதிப்படியாக, நெய்யில் முந்திரி, உலர் திராட்சை போன்றவற்றைச் சேர்த்து வறுத்து அதில் சேர்க்க வேண்டும். அதே போல, தேங்காயை துருவியோ அல்லது பொடியாக நறுக்கியோ பொங்கலில் சேர்த்தால், நெய் மற்றும் கரும்புச்சாறு சேர்த்து சுவையான கரும்புச்சாறு பொங்கலைத் தயார் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Sakkarai Pongal: சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் கோயில் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் செய்யலாமா?

கரும்புச்சாறு பொங்கல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கரும்பு முழுமையான நீர்ச்சத்துக்களைக் கொண்டதாகும். கரும்பில் வைட்டமின் பி1, பி2 மற்றும் பி6, கார்போஹைட்ரேட்டுகள், அத்தியாவசிய அமினோ அமிலங்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

மேலும் இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சிட்ரிக் அமிலம் போன்ற தாதுக்களும் உள்ளது. இவை அனைத்துமே உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள் ஆகும்.

  • கரும்புச்சாறு சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இது இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
  • கரும்புச்சாற்றில் ஃபோலிக் அமிலம் உள்ளது. கர்ப்பிணிகளுக்கு கரும்புச்சாறு மிகுந்த நன்மை பயக்கும். இது கர்ப்பிணி பெண்களுக்கு செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிகல்லைத் தடுக்கிறது.
  • கரும்புச்சாறு உடலில் பித்த தோஷம் அதிகரிப்பதைத் தடுக்கிறது. பித்த தோஷம் என்பது கல்லீரலைப் பாதிக்கக் கூடியதாகும். இதனால் மஞ்சள் காமாலை அறிகுறிகள் தோன்றலாம். இந்நிலையில் கரும்பு ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது. குறிப்பாக, பித்த தோஷம் உள்ளவர்கள் கரும்புச்சாறு அருந்துவது பித்தத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Kalkandu Pongal: வெறும் நான்கு பொருள் இருந்தால் போதும் சுவையான கல்கண்டு பொங்கல் ரெடி!

Image Source: Freepik

Read Next

ஏகபோக நன்மைகளை பெற.. இது ஒன்னு மட்டும் போதும்.!

Disclaimer