How to make karupatti pongal: பொங்கல் என்றாலே பொங்கல், கரும்பு இரண்டும் தான். தென்னிந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையில், பெரும்பாலானோர் வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடுவர். இதில் பலரும் பாரம்பரியமாக வெல்லம் சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்வர். ஆனால் இந்த முறை வித்தியாசமாக கருப்பட்டியைக் கொண்டு சுவையான கருப்பட்டி பொங்கலைத் தயார் செய்யலாம்.
கருப்பட்டியானது பனையின் செறிவூட்டப்பட்ட சாற்றில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு அச்சுகளில் ஊற்றி தயார் செய்யப்படுகிறது. இது சர்க்கரையைப் போன்றே இனிப்புச் சுவையுடன் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. இதில் சர்க்கரைக்கு மாற்றாக கருப்பட்டியைக் கொண்டு தயார் செய்யப்படும் கருப்பட்டி பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் மற்றும் எப்படி செய்வது என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Sakkarai Pongal Recipe: சுகர் இருக்கா.? அப்போ சர்க்கரை பொங்கலை இப்படி செஞ்சி பாருங்க.!
கருப்பட்டி பொங்கல் தயார் செய்யும் முறை
தேவையான பொருள்கள்
- பச்சரிசி - 1 கப்
- கருப்பட்டி - 1 கப் ( இனிப்புக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம் )
- பாசிப்பருப்பு - அரை கப்
- ஏலத்தூள் - அரை டீஸ்பூன்
- பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
- தண்ணீர் - 3 கப்
- நெய்- கால் கப்
- உப்பு - சிட்டிகை அளவு
- முந்திரி. திராட்சை, பாதாம் - கால் கப்
கருப்பட்டி பொங்கல் தயாரிக்கும் முறை
- கருப்பட்டி பொங்கல் தயார் செய்வதற்கு, முதலில் கருப்பட்டியை நறுக்கி தண்ணீர் சிறிதளவு சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.
- அரிசி மற்றும் பருப்பை சேர்த்து நன்றாகக் கழுவி அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
- பிறகு, குக்கரில் ஊறவைத்த அரிசி, பருப்பை சேர்த்து 4 விசில் வரை விடலாம்.
- பின் தனியாக, கருப்பட்டியில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதில் கருப்பட்டி கரையும் வரை வைத்திருக்க வேண்டும்.
- அதன் பிறகு, குக்கரில் விசில் அடங்கிய பிறகு அரிசி, பருப்பை எடுத்து குழைத்து விட வேண்டும்.
- பின், இதில் கரைந்துள்ள கருப்பட்டி பாகுவை மேலாக ஊற்றி விடலாம். அடியில் கசடுகள் தங்கியிருக்கும் என்பதால் இதை அடியோடு சேர்க்க வேண்டாம்.
- இந்தக் கலவை நன்றாக குழைய கரண்டியால் கிளற வேண்டும்.
- இந்த கலந்த பொங்கலில் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து, பச்சை கற்பூரத்தைச் சேர்த்து கிளறி விடலாம்.
- மேலும் நெய்யில் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள் போன்றவற்றைச் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி விட வேண்டும்.
- இறுதியாக இந்த கலந்த பொங்கலில் அனைத்து நெய்யையும் கலந்து இறக்கி விடலாம்.
- இப்போது சுவையான, ஆரோக்கியமான மற்றும் அமிர்தமான சுவையில் கருப்பட்டி பொங்கல் தயார் செய்யப்பட்டது.
இந்த பதிவும் உதவலாம்: Kalkandu Pongal: வெறும் நான்கு பொருள் இருந்தால் போதும் சுவையான கல்கண்டு பொங்கல் ரெடி!
கருப்பட்டி பொங்கல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய வெல்லம் இரும்புச்சத்து கொண்டவையாகும். அதே போன்று, வெல்லத்தைக் காட்டிலும் கருப்பட்டி இன்னும் சக்தி மிகுந்தவை. எனவே இதை தாராளமாக பயன்படுத்தலாம். பனங்கருப்பட்டியில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது. இது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை சுத்திகரிக்கப்படாததால் மண் சுவையை உள்ளடக்கியதாகும்.
- கருப்பட்டி இரத்தத்தை சுத்திகரித்து, உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. இது சருமத்தை பளபளப்பாக வைக்கிறது.
- கருப்பட்டி உடலுக்கு ஆற்றலை அதிகமாக வழங்கக் கூடியதாகும்.
- செரிமான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு கருப்பட்டி பொங்கல் சிறந்த தேர்வாகும். இது எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.
- கருப்பட்டி உட்கொள்வது உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும், மலச்சிக்கல்லைத் தவிர்க்கவும் உதவுகிறது.
- சளி, இருமலுக்கு சிகிச்சையளிக்க கருப்பட்டி உதவுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Sugarcane juice pongal recipe: வீடே மணக்கும் சுவையில் அசத்தலான கரும்புச்சாறு பொங்கல் ரெசிபி! இப்படி ஈஸியா செய்யுங்க
Image Source: Freepik