How to prepare beetroot cutlet: அன்றாட உணவில் நாம் சேர்க்கப்படும் சில உணவுப்பொருள்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அவ்வாறு நம் உடலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் பீட்ரூட்டை எடுத்துக் கொள்வது தற்போது பெரும்பாலும் அரிதான ஒன்றாகி விட்டது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு பீட்ரூட் கொடுப்பது பல நன்மைகளைத் தரும் என்றாலும், அதை பெரும்பாலும் அவர்கள் விரும்பி சாப்பிடுவதில்லை. எனினும், பீட்ரூட்டை பல்வேறு ஆரோக்கியமான வழிகளில் குழந்தைகளுக்குக் கொடுப்பது மிகவும் நன்மை பயக்கும்.
பீட்ரூட் கட்லெட்
வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும் பீட்ரூட் கட்லெட் சுவையான சிற்றுண்டியாகும். இதை சூடான நீர் அல்லது காபியுடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த கட்லெட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பீட்ரூட், வாழைக்காய், ப்ரெட் துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் பீட்ரூட் கட்லெட் தயார் செய்வதற்கான பொருள்கள் மற்றும் தயாரிக்கும் முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mutton Cutlet Recipe: பக்ரீத் ஸ்பெஷல் சுவையான மற்றும் மொறுமொறுப்பான மட்டன் கட்லெட்!
முக்கிய கட்டுரைகள்
பீட்ரூட் கட்லெட் செய்யும் முறை
தேவையானவை
- பீட்ரூட் - 3 முதல் 4
- பெரிய வெங்காயம் - 1
- வாழைக்காய் - 1
- மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- மல்லித் தூள் - கால் டீஸ்பூன்
- ஆம்சூர் பொடி - கால் டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்
- சீரக தூள் - கால் டீஸ்பூன்
- ப்ரெட் க்ரம்ப்ஸ் - அரை கப்
- பூண்டு - 6 பற்கள்
- இஞ்சி துண்டு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
- முதலில் வாழைக்காயை தோலுடன் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் வாழைக்காயை பாதி அளவு வேக வைத்தால் மட்டும் போதும். வாழைக்காயை ஆறிய பிறகு தோலை உரித்து வைத்துக் கொள்ளலாம்.
- மேலும், பீட்ரூட்டை துருவி வைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை இடித்து வைத்து, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
- இப்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி பூண்டு சேர்த்து சிவக்க வதக்கலாம். பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
- பிறகு துருவி வைத்த பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வதக்கலாம். இது நன்கு வதக்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், அம்மெச்சூர் தூள், கரம் மசாலா தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
- இதை சில நமிடங்கள் வதக்கி, வேக வைத்த வாழைக்காயை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். இது ஆறிய பிறகு, அதனுடன் ப்ரெட் க்ரம்ப்ஸ், கொத்தமல்லி போன்றவற்றைச் சேர்த்து நன்கு பிசைந்து தேவையான வடிவத்தில் தட்டி வைத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Veg Cutlet Recipe: குழந்தைகளுக்கு திவ்யா திரைசாமி செய்து கொடுத்த வெஜ் கட்லெட் ரெசிபி..
- பின் கடாய் ஒன்றில் கட்லெட்டை பொரிக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடான பிறகு, அதில் பொரித்து எடுத்த வேண்டும்.
- இதில் கட்லெட்டின் ஒவ்வொரு பக்கமும் மிதமான தீயில் வேக வைத்து, திருப்பி போடும் போது ஒரு தேக்கரண்டி எண்ணெயை பரவலாக அதன் மேல் ஊற்ற வேண்டும்.
- இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி தயாராகி விட்டது.
- இந்த சுவையான பீட்ரூட் கட்லெட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இது சற்று இனிப்பாக இருந்தால், குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணுவர்.
பீட்ரூட் கட்லெட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- பீட்ரூட் கட்லெட்டில் வைட்டமின் பி1, இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
- பீட்ரூட் உட்கொள்வது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
- மேலும் பீட்ரூட் உட்கொள்வது சோர்வு, மலச்சிக்கல், உடல் பருமன் போன்ற பல்வேறு உடல் உபாதைகளை நீக்கி, உடலுக்கு வலிமையை தருகிறது.
- இது நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து, உயர் அழுத்தத்தினைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
- இது உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ணும் அளவிற்கு மொறு மொறு கட்லெட்டைத் தயார் செய்யலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Oats Cutlet: ஒரு கப் ஓட்ஸ் இருந்தால் போதும்.. சுவையான கட்லெட் செய்யலாம்!