Dates Apple Payasam Recipe in Tamil: கல்யாணம், காதுகுத்து, பிறந்த நாள், பூஜை என எதுவாக இருந்தாலும் நாம் பாயாசம் செய்வது வழக்கம். மத்திய உணவு சாப்பிட்டுவிட்டு, கடையில் ஒரு அப்பளத்தை நொறுக்கி போட்டு பாயாசத்தை ஊற்றி சாப்பிட்டால் அடஅடஅட சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது. பாயாசம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
சேமியா பாயாசம், பாசி பருப்பு பாயாசம், பாசி பயறு பாயாசம், பச்சை பயறு பாயாசம், இளநீர் பாயாசம் என பல வகையான பாயாசத்தை நாம் செய்திருப்போம். என்னதான் அனைவரும் பாயாசம் செய்தாலும் ஒவ்வொருவரின் செய்முறையும் கை பக்குவமும் மாறுபடும். அந்தவகையில், மிகவும் ஆரோக்கியமான மற்றும் தித்திப்பான பேரீட்சைப்பழம் ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Rice Payasam Recipe: ஒரு கப் பச்சரிசி இருந்தால் போதும் அட்டகாசமான பாயாசம் செய்யலாம்!
தேவையான பொருட்கள்
ஆப்பிள் - 1 துருவியது
பால் - 1 லிட்டர் காய்ச்சி ஆறவைத்தது
வறுத்த சேமியா - 3 தேக்கரண்டி
பேரீட்சைப்பழம் நறுக்கியது
முந்திரி பருப்பு - 10
திராட்சை - 10
சர்க்கரை - 3 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் - 2 சொட்டு
நெய் - 50 கிராம்
முக்கிய கட்டுரைகள்
பேரீட்சைப்பழம் ஆப்பிள் பாயாசம் செய்முறை:
- ஒரு பானில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, நறுக்கிய பேரீட்சைப்பழம் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து கொள்ளவும்.
- அடுத்து ஆப்பிளின் தோலை நீக்கி துருவி கொள்ளவும்.
- ஒரு பானில் நெய் ஊற்றி துருவிய ஆப்பிளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின்பு சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.
- ஒரு சாஸ் பானில் காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி, வறுத்த சேமியாவை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- பின்பு சர்க்கரை, ஏலக்காய் தூள், வேகவைத்த ஆப்பிள் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும்.
- 2 நிமிடம் குறைந்த தீயில் வைத்து கலந்து விடவும். பிறகு ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
- இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை, பேரீட்சைப்பழம் சேர்த்து கலந்து விட்டு 2 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
- சுவையான பேரீட்சைப்பழம் ஆப்பிள் பாயாசம் தயார்.
இந்த பதிவும் உதவலாம்: Caramel Semiya Payasam: நாவில் எச்சில் ஊறவைக்கும் கேரமல் சேமியா பாயாசம் எப்படி செய்யணும் தெரியுமா?
பாயாசம் நன்மைகள்:
பாயாசம் செரிமானம்:
அரிசியில் உள்ள ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வீக்கத்தைக் குறைக்கும். பாயாசத்தில் உள்ள தேங்காய் கூழ் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களை உடைக்க உதவும். இது செரிமானத்திற்கு உதவும்.
பாலூட்டுதல்
ஆயுர்வேதத்தில், பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் திசு வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கருதப்படுகிறது. ஞாவர பாயாசம் என்பது புதிய தாய்மார்களுக்கு பாலூட்டலை அதிகரிக்கும் ஒரு ஆயுர்வேத தயாரிப்பாகும்.
குளிர்ச்சியூட்டும் விளைவு
கீர் வயிறு மற்றும் உடலை குளிர்விக்கும். ஆயுர்வேதத்தில், சந்திரன் குளிர்ச்சி மற்றும் ஊட்டச்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, சிலர் நிலவின் வெளிச்சத்தில் கீரையை உட்கார வைப்பது அதன் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை மேம்படுத்தும் என்று நம்புகிறார்கள்.
இந்த பதிவும் உதவலாம்: Ellu Laddu: மாதவிடாய் பிரச்சினையை நீக்கும் எள்ளு லட்டு... செய்வது எப்படி?
பிற நன்மைகள்
- பாயாசம் ஊட்டமளிக்கும் மற்றும் வலுப்படுத்தும். வெங்காயத்தால் செய்யப்பட்ட பாயாசம் எலும்பு முறிவுகளை குணப்படுத்த உதவும்.
- சபுதானாவால் செய்யப்பட்ட பாயாசம் செரிமானத்திற்கு உதவும். அமிலத்தன்மையை குறைக்கும் மற்றும் தோல் மற்றும் முடியை மேம்படுத்தும்.
- தட்டையான அரிசியால் செய்யப்பட்ட பாயாசம் இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும்.
Pic Courtesy: Freepik