Mango Sooji Kesari In Tamil: பிறந்த நாள், திருமணம், காது குத்து என எந்த வீட்டு விசேஷமாக இருந்தாலும் நாம் பொதுவாக செய்யக்கூடிய இனிப்பு கேசரி. நெய், முந்திரி, உளர் திராட்சை, சர்க்கரை என அனைத்தையும் சேர்த்து செய்யக்கூடியது தான் இந்த இனிப்பு. நாம் பொதுவாக ரவை அல்லது சேமியா வைத்து தான் கேசரி செய்வோம்.
ஆனால், எப்போதாவது பழத்தை வைத்து கேசரி செய்ய முயற்சி செய்வது உண்டா? கேற்கவே விசித்திரமாக இருக்கா? ஆம், மாங்காய் சீசன் வந்தாச்சு. சந்தைகளில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து சுவையான மாம்பழ ரவா கேசரி செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: White Sauce Macaroni: ஈஸியான முறையில் வீட்டிலேயே சுவையான ஒயிட் சாஸ் மேக்ரோனி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
மாம்பழம் - 1
ரவா - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 7 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு - 10
திராட்சை - 10
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
மாம்பழ ரவா கேசரி செய்முறை:
முக்கிய கட்டுரைகள்
- மாம்பழத்தின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- ஒரு கடாயில், ரவாவை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை 5 நிமிடம் வறுக்கவும்.
- ஒரு கடாயில் நெய் சேர்த்து, நெய் உருகியதும் முந்திரி, திராட்சை இரண்டையும் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- அதே கடாயில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து அதில் வறுத்த ரவாவை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேகவைக்கவும்.
- அடுத்து அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வேகவைக்கவும்.
- மாம்பழ விழுதும், ரவையும் நன்கு வேகவைத்த பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பிறகு ரவா கலவையில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
- அடுத்து நெய் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் அல்லது கேசரி கெட்டியாகும் வரை வேகவைக்கவும்.
- பிறகு வறுத்த முந்திரி, திராட்சை, நெய் மற்றும் குங்குமப்பூ சேர்த்தால், சுவையான மாம்பழ ரவா கேசரி தயார்!
மாம்பழ ரவா கேசரி சாப்பிடுவதன் நன்மைகள்
நோயெதிர்ப்பு ஆதரவு: மாம்பழம் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இவை வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்கு அவசியமானவை.
செரிமான ஆரோக்கியம்: அவற்றில் நார்ச்சத்து மற்றும் செரிமான நொதிகள் உள்ளன. அவை செரிமானத்திற்கு உதவுகின்றன மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கின்றன.
இதய ஆரோக்கியம்: மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளன. அவை ஆரோக்கியமான இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகின்றன. இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன.
தோல் ஆரோக்கியம்: மாம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் ஏ மற்றும் சி சுருக்கங்கள், கறைகளைக் குறைத்து கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கின்றன.
கண் ஆரோக்கியம்: மாம்பழம் வைட்டமின் ஏ இன் நல்ல மூலமாகும். இது ஆரோக்கியமான பார்வையைப் பராமரிக்கவும் வயது தொடர்பான மாகுலர் சிதைவைத் தடுக்கவும் முக்கியமானது.
எடை மேலாண்மை: மாம்பழம் நார்ச்சத்தின் நல்ல மூலமாகும். இது உங்களை முழுமையாக உணரவும் உங்கள் எடையை நிர்வகிக்கவும் உதவும்.
புற்றுநோய் தடுப்புக்கான வாய்ப்பு: மாம்பழங்களில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் இருக்கலாம் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Foods With Tea: இந்த உணவுகளை எப்பவும் டீ அல்லது காபியுடன் சாப்பிட வேண்டாம்! உயிருக்கே ஆபத்து!
ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு சக்தி மையம்: மாம்பழத்தில் பாலிபினால்கள் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றிகள் நிரம்பியுள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்: மாம்பழம் இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தலாம்: மாம்பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
Pic Courtesy: Freepik