How to make christmas special rose milk cake: கிறிஸ்மஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது கேக் தான். கிறிஸ்மஸ் தினத்தன்று கிறிஸ்துவர்கள் புத்தாடை அணிந்து, இறைவனை பிராத்தனை செய்து கேக் சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக, கிறிஸ்மஸ் அன்று பல வகையான கேக் சாப்பிடுவது இயல்பு. இந்த கிறிஸ்மஸ்க்கு முட்டை இல்லாத சுவையான ரோஸ் மில்க் கேக்யை வீட்டிலேயே செய்து அசத்துங்க. இதோ உங்களுக்கான ரெசிபி.
தேவையான பொருட்கள்:
மைதா - 2 கப்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
பால் - 3/4 கப் காய்ச்சி ஆறவைத்தது
சர்க்கரை - 1/2 கப்
தயிர் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1/2 கப்
ரோஸ் சிரப் - 5 மேசைக்கரண்டி
ரோஸ் கலரிங் ஜெல்
கன்டென்ஸ்டு மில்க் - 3 மேசைக்கரண்டி
விப்டு கிரீம் - 200 மி.லி
ஐசிங் சுகர் - 1/2 கப்
நறுக்கிய பிஸ்தா - சிறிது
இந்த பதிவும் உதவலாம்: Elaneer payasam: தித்திக்கும் சுவையில் ஸ்வீட் இளநீர் பாயாசம்! இப்படி செஞ்சா மிச்சமே இருக்காது
ரோஸ் மில்க் கேக் செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை, தயிர், எண்ணெய், ரோஸ் சிரப், ரோஸ் கலரிங் ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- மற்றொரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து சலிக்கவும்.
- சிறிது சிறிதாக மைதா மாவு கலவையை, பால் கலவையுடன் சேர்த்து கட்டியின்றி கலக்கவும்.
- வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பர் வைத்த கேக் டின்னில் கேக் கலவையை சேர்க்கவும்.
- ஓவனை 180 டிக்ரீயில் 15 நிமிடம் சூடு செய்யவும். 180 டிக்ரீயில் 30 நிமிடம் பேக் செய்யவும்.
- கெட்டியான ரோஸ் மில்க் செய்ய ஒரு பாத்திரத்தில் பால், கன்டென்ஸ்டு மில்க், ரோஸ் சிரப் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- கேக்கை நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு பட்டர் பேப்பரை எடுத்து விட்டு கேக்கின் மேல் பகுதியை சமமாக வெட்டவும்.
- கேக்கை மீண்டும் டின்னில் வைத்து தயார் செய்த ரோஸ் மில்கை ஊற்றி 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
- கேக்கிற்கு கிரீம் செய்ய ஒரு பாத்திரத்தில் விப்டு கிரீம், ஐசிங் சுகர் சேர்த்து 15 நிமிடம் பீட் செய்யவும்.
- அடுத்து கேக்கின் மீது செய்த கிரீமை சமமாக பரப்பி அதன் மேல் நறுக்கிய பிஸ்தா, ரோஸ் பெட்டல்ஸ் தூவி அலங்கரித்தால் அருமையான ரோஸ் மில்க் கேக் தயார்.
ரோஸ் மில்க் கேக் ஆரோக்கிய நன்மைகள்:
- ரோஸ் பாலில் ரோஜா சாறை சேர்ப்பதால் உடலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகரிக்கும். இந்த ஆக்ஸிஜனேற்றிகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
- மில்க் கேக்கில் கால்சியம், புரதம், வைட்டமின் பி12 மற்றும் நார்ச்சத்து உள்ளது. இவை எலும்புகளையும் பற்களையும் வலுவாக்கும்.
- மில்க் கேக்கில் கலோரிகள் குறைவு மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
- மில்க் கேக் சாப்பிடுவது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.
இருப்பினும், மில்க் கேக்கை அதிக அளவில் சாப்பிட்டால், அது எடை அதிகரிக்க வழிவகுக்கும். பால் கேக்கில் நிறைய கொழுப்பு மற்றும் கலோரிகள் இருப்பதால் இது நிகழ்கிறது.
Pic Courtesy: Freepik