Eggless Tutti Frutti Cake Recipe In Tamil: கிறிஸ்மஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது கேக் தான். கிறிஸ்மஸ் தினத்தன்று கிறிஸ்துவர்கள் புத்தாடை அணிந்து, இறைவனை பிராத்தனை செய்து கேக் சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக, கிறிஸ்மஸ் அன்று பல வகையான கேக் சாப்பிடுவது மிகவும் வழக்கம். இந்த முறை வீட்டிலேயே சுவையான எக்லஸ் டூட்டி ப்ரூட்டி கேக் செய்து அசத்துங்க. உங்களுக்கான ரெசிபி இதோ_
தேவையான பொருட்கள்
டூட்டி ப்ரூட்டி - 100 கிராம்
மைதா மாவு - 1 1/2 கப் (250 மில்லி கப்)
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 3/4 கப்
வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
தயிர் - 3/4 கப்
உருக்கிய வெண்ணெய் - 1/2 கப் உப்பில்லாதது
பால் - 1/4 கப் காய்ச்சி ஆறவைத்தது
இந்த பதிவும் உதவலாம்: Christmas Cake: கிறிஸ்மஸ் வந்தாச்சு.. வீட்டிலேயே சுவையான பிளம் கேக் செய்யலாமா?
முட்டையில்லாத டூட்டி ப்ரூட்டி கேக் செய்முறை:
- முதலில் டூட்டி ப்ரூட்டியில் மைதாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடரை சேர்த்து சலித்து வைத்து கொள்ளவும்.
- மற்றோரு பாத்திரத்தில் சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ், தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின்பு உருக்கிய வெண்ணெய்யை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
- பிறகு சலித்த மாவை பாதி பாதியாக சேர்த்து கட்டி இல்லாமல் கலந்துகொள்ளவும்.
- அடுத்து பாலை ஊற்றி கலந்து பின்பு மாவில் கலந்து வைத்த டூட்டி ப்ரூட்டி சேர்த்து கலந்துகொள்ளவும்.
- பின்பு கேக் டின்னில் பட்டர் பேப்பரை வைத்து அதன் மேல் சிறிது மைதா மாவை தூவி, பிறகு தயார் செய்த மாவை ஊற்றி சமன் செய்யவும்.
- பின்பு சிறிதளவு டூட்டி ப்ரூட்டியை மாவின் மேல் தூவி ஓவனை 180°C 15 நிமிடம் முன் கூட்டியே சூடு செய்யவும்.
- பிறகு மாவை வைத்து 180°C 30 நிமிடம் பேக் செய்து எடுத்தால், சுவையான டூட்டி ப்ரூட்டி கேக் தயார்!
இந்த பதிவும் உதவலாம்: Christmas special recipe: இந்த கிறிஸ்துமஸூக்கு சுவையான பஞ்சுபோன்ற வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்! இப்படி ஈஸியா செய்யுங்க
எக்லஸ் டூட்டி ப்ரூட்டி கேக் நன்மைகள்
ஆற்றல்: டுட்டி ஃப்ரூட்டி ஒரு நல்ல ஆற்றல் மூலமாகும்.
நார்ச்சத்து: டுட்டி ஃப்ரூட்டியில் மிதமான அளவு நார்ச்சத்து கிடைக்கும், இது மலச்சிக்கலுக்கு உதவும்.
செரிமானம்: பழ கேக்கில் உள்ள ஜாதிக்காய் செரிமான அமைப்பை மேம்படுத்தும்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: பழ கேக்குகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் பழங்கள் நிரம்பியுள்ளன, அவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: பழ கேக்குகள் ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாகும்.
இரத்த சர்க்கரை: பழ கேக்கில் உள்ள திராட்சைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
இதய நோய்: பழ கேக்குகள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள். மேலும், OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
Pic Courtesy: Freepik