How To Make Mini Christmas Cake At Home: கிறிஸ்மஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது கேக் தான். கிறிஸ்மஸ் தினத்தன்று கிறிஸ்துவர்கள் புத்தாடை அணிந்து, இறைவனை பிராத்தனை செய்து கேக் சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக, கிறிஸ்மஸ் அன்று பல வகையான கேக் சாப்பிடுவது மிகவும் வழக்கம். இந்த முறை வீட்டிலேயே சுவையான எக்லஸ் மினி கிறிஸ்துமஸ் கேக் செய்து அசத்துங்க. உங்களுக்கான ரெசிபி இதோ_
தேவையான பொருட்கள்:
பேரீட்சைப்பழம் - 1/2 கப் விதை நீக்கியது
காய்ந்த திராட்சை - 8
டூட்டி ப்ரூட்டி - கால் கப்
செர்ரி - சிறிது
வால்நட் - 1.1/2 கப்
மைதா - 1 கப்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
நாட்டு சர்க்கரை - 3/4 கப்
உருக்கிய வெண்ணெய் - 1/2 கப்
பால் - 1 கப் காய்ச்சி ஆறவைத்தது
வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
பட்டை தூள் - 1 தேக்கரண்டி
ஜாதிக்காய் (விரும்பினால்)
இந்த பதிவும் உதவலாம்: Christmas Cake: கிறிஸ்மஸ் நெருங்கிடுச்சு.. வீட்டிலேயே எக்லஸ் டூட்டி ப்ரூட்டி கேக் செய்யலாமா?
மினி கிறிஸ்துமஸ் கேக் செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை சலித்து எடுத்து கொள்ளவும்.
- பின்பு அதில் நாட்டு சக்கரை, காய்ந்த திராட்சை, டூட்டி ப்ரூட்டி, செர்ரி, விதை நீக்கிய பேரீட்சைப்பழம், நறுக்கிய வால்நட்டை சேர்த்து கலந்துவிடவும்.
- பிறகு உருக்கிய வெண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.
- பின்பு காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து கலந்து பிறகு வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும்.
- பிறகு பட்டை தூள், ஜாதிக்காயை துருவி சேர்த்து கலந்துவிடவும்.
- ஓவனை 180 டிக்ரீயில் 15 நிமிடம் சூடு செய்யவும்.
- பின்பு கேக் அச்சில் எல்ல பக்கமும் வெண்ணெய் தடவி அதில் தயார் செய்த கேக் கலவையை ஊற்றவும்.
- பின், 180 டிக்ரீயில் 40 நிமிடம் பேக் செய்யவும். பின்பு நன்கு ஆறவிட்டு கேக் அச்சில் இருந்து எடுத்தால் அருமையான மினி கிறிஸ்துமஸ் கேக் தயார்!.
கிறிஸ்துமஸ் கேக்கின் சில நன்மைகள் இங்கே:
ஊட்டச்சத்துக்கள்: கிறிஸ்துமஸ் கேக்கில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன, ஏனெனில் இது மாவு மற்றும் பழங்களின் அதிக விகிதத்தைக் கொண்டுள்ளது.
நார்ச்சத்து: கிறிஸ்துமஸ் கேக் செரிமான அறிகுறிகளைப் போக்க உதவும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: கிறிஸ்துமஸ் கேக் ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாகும்.
இரத்த சர்க்கரை: கிறிஸ்துமஸ் கேக்கில் உள்ள திராட்சைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
இதய நோய்: கிறிஸ்துமஸ் கேக் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
Pic Courtesy: Freepik