Christmas special recipe: இந்த கிறிஸ்துமஸூக்கு சுவையான பஞ்சுபோன்ற வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்! இப்படி ஈஸியா செய்யுங்க

Vanilla sponge cake recipe: கிறிஸ்துமஸ் வந்துவிட்டாலே பலரும் பலவிதமான ரெசிபிகளைச் செய்து மகிழ்வோம். அந்த வகையில் சுவையான மற்றும் எளிதான முறையில் வீட்டிலேயே வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் தயார் செய்யலாம். இதில் கிறிஸ்துமஸ் தினத்தில் வீட்டிலேயே வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் செய்முறை குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Christmas special recipe: இந்த கிறிஸ்துமஸூக்கு சுவையான பஞ்சுபோன்ற வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்! இப்படி ஈஸியா செய்யுங்க

Christmas special vanilla sponge cake recipe: டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் தொடங்கி விடும். இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே கிறிஸ்துமஸ் கேக் ரெசிபிகளுக்கான தயாரிப்புகளும் ஆரம்பமாகி விடும். இது பாரம்பரியமாகவே, பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் முறையாகும். அதிலும் கிறிஸ்துமஸ் கேக் ரெசிபிகளைச் செய்ய பலரும் ஈடுபாட்டுடன் காணப்படுவர். அவ்வாறே இந்த கிறிஸ்துமஸூக்கு நாம் வீட்டிலேயே, எளிதான முறையில் சில ரெசிபிகளைத் தயார் செய்யலாம். இதில் வீட்டிலேயே உள்ள சில பொருள்களைக் கொண்டு செய்யப்படும் வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் செய்முறை குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Kalathappam Recipe: கேரளா ஸ்பெஷல் கலத்தப்பம் எப்படி செய்யணும் தெரியுமா?

வெண்ணிலா கேக் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்

  • மைதா - 2 கப்
  • பேக்கிங் பவுடர் - ஒன்றரை ஸ்பூன்
  • பேக்கிங் சோடா – கால் ஸ்பூன்
  • வெண்ணிலா எசன்ஸ் - 2 ஸ்பூன்
  • வெண்ணெய் - கால் கப்
  • சர்க்கரை பொடித்தது - ஒரு கப்
  • பால் - 1 கப்
  • உப்பு - ஒரு சிட்டிகை

வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் செய்யும் முறை

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அருமையான சுவையில் இடம்பெறும் வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் செய்வது எப்படி என்பது குறித்து காணலாம்.

  • முதலில் பாத்திரம் ஒன்றில் மைதா மாவு, பேக்கிங் சோடா, பொடித்த சர்க்கரை, உப்பு போன்ற அனைத்தையும் நன்றாக கலக்க வேண்டும்.
  • பிறகு இதில் இதில் காய்ச்சி ஆறவைத்த பால், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் உருக்கிய வெண்ணெய் போன்றவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • பின், இதை ஒரு கேக் டின்னில் ஊற்றி, சமப்படுத்தி, இட்லி பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
  • இதை குறைவான தீயில் 40 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.
  • இப்போது எளிதான, சுவையான வெண்ணிலா கேக் தயாராகி விட்டது.
  • இதை வீட்டிலேயே செய்வது எளிதாகும். மேலும், இதை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
  • இதில் முட்டை சேர்க்க விரும்பினால், முட்டையை அடித்து சேர்த்து, கேக் தயார் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Veg Pancake: குழந்தைகளுக்கு பிடித்த மினி வெஜிடபிள் பான் கேக் செய்வது எப்படி?

மைதா மாவுக்குப் பதிலாக கோதுமை மாவு கொண்டு அருமையான ஸ்பாஞ்ச் கேக் ரெசிபியைத் தயார் செய்யலாம்.

கோதுமை மாவில் வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் செய்வது எப்படி?

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஆரோக்கியமான முறையில் கேக் தயாரிக்க விரும்புபவர்கள் கோதுமை மாவைப் பயன்படுத்தலாம். மைதா மாவுடன் ஒப்பிடுகையில் கோதுமை மாவு சிறந்த நன்மைகளைத் தருகிறது.

தேவையானவை

  • கோதுமை மாவு - 1/2 கப்
  • சர்க்கரை - 3/4 கப்
  • எண்ணெய் - 1/4 கப்
  • தயிர் - 1 கிண்ணம்
  • பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி
  • பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
  • வெண்ணிலா எசென்ஸ் - 3/4 தேக்கரண்டி
  • உலர்ந்த பழங்கள்

வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் செய்முறை

  • இந்த கேக் தயார் செய்ய, முதலில் பாத்திரம் ஒன்றில் தயிர் எடுத்துக் கொண்டு, அதில் கால் கப் எண்ணெய் மற்றும் 3/4 கப் சர்க்கரையைச் சேர்க்கலாம்.
  • இந்த கலவையை சர்க்கரை கரைக்கும் வரை கலக்க வேண்டும். பிறகு அதில் கோதுமை மாவை ஒரு சல்லடையின் உதவியுடன் வடிகட்டி சேர்க்க வேண்டும்.
  • அதன் பின், முக்கால் டீஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா போன்றவற்றைக் கலக்கலாம். இவை அனைத்தையும் நன்கு கலக்க வேண்டும்.
  • இந்த கலவையை நன்றாக கலக்கும் வரை அடித்தால் மட்டும் போதுமானது. ஆனால் இதை அதிகம் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • அதன் பிறகு, பேக்கிங் தட்டில் எண்ணெய் அல்லது வெண்ணெயை நன்கு தடவ வேண்டும்.
  • பிறகு பேக்கிங் ட்ரேயில் மாவை பாதியாக மட்டும் ஊற்ற வேண்டும். ஒரு ஆழமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் நிரப்பி அதை ஒரு ஸ்டாண்டில் வைக்க வேண்டும். அதன் பின், அதை ஒரு கேக் டின் மூலம் மூடி சுமார் 45 நிமிடங்கள் குறைந்த தீயில் வைக்கலாம்.
  • இதனால் கேக் நன்றாக சமைக்கப்படும். அடுத்ததாக, திட்டமிட்ட நேரத்திற்குப் பிறகு இதை திறந்து சரிபார்த்துக் கொள்ளலாம்.
  • கேக் சமைக்கவில்லை எனில், இன்னும் சிறிது நேரம் வேக வைக்கலாம். அதன் பின், கேக் முழுவதுமாக வெந்த பிறகு எடுத்து பரிமாறலாம்.

இவ்வாறு எளிமையான முறையில் வீட்டிலேயே இனிமையான சுவையில் இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் தயார் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Christmas Cake: கிறிஸ்மஸ் வந்தாச்சு.. வீட்டிலேயே சுவையான பிளம் கேக் செய்யலாமா?

Image Source: Freepik

Read Next

Christmas Cake: கிறிஸ்மஸ் வந்தாச்சு.. வீட்டிலேயே சுவையான பிளம் கேக் செய்யலாமா?

Disclaimer