How to make delicious coconut mysore pak: இனிப்பை விரும்பாதவர்கள் எவர் உள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே நோ என்று சொல்லாத உணவு என்றால், அது இனிப்பு உணவாகத் தான் இருக்க வேண்டும். பல்வேறு வகையான இனிப்பு ரெசிபிகள் காணப்படுகின்றன. இந்த வரிசையில் மைசூர் பாக் ஒரு சிறந்த இடத்தையே பிடித்துள்ளது. எனவே தான் வாரம் ஒரு முறையாவது மைசூர் பாக் சாப்பிடுபவர்கள் ஏராளம் உள்ளனர். ஆனால், கடைகளில் விற்பனை செய்யும் இனிப்புகளில் அதிக சர்க்கரை சேர்த்திருக்கலாம் அல்லது நீண்ட நாள்களுக்கு முன்னதாக செய்த இனிப்பாக இருக்கலாம். இது சில சமயங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இதனைத் தவிர்க்க, வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தயார் செய்த உணவுகளை எடுத்துக் கொள்வது பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபட வைக்கிறது. அவ்வாறு வீட்டில், எளிதான முறையில் தேங்காயைக் கொண்டு மைசூர் பாக் அருமையான சுவையில் தயார் செய்யலாம். தேங்காயில் செய்யப்பட்ட மைசூர் பாக்கில், சர்க்கரை, பால், தேங்காய் போன்றவை சேர்க்கப்படுகிறது. இதில் கூடுதல் சுவைக்காக உலர் பழங்கள் மேலே தூவி செய்யப்படுகிறது. இது சுவையுடன் கூடிய ஆசையைத் தூண்டுகிறது. இதில் மைசூர் பாக் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் செய்முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Brinjal Fry Recipe: சிக்கன் வறுவலை மிஞ்சும் செட்டிநாடு நீட்டு கத்திரிக்காய் வறுவல்.. இதோ ரெசிபி!
மைசூர் பாக் தயார் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
- தேங்காய் துருவல் - 2 கப்
- தேங்காய்ப்பேஸ்ட் - கைப்பிடி அளவு
- சர்க்கரை - 1/2 கப்
- பால் - 1 கப்
- வெதுவெதுப்பான நீர் - ½ டீஸ்பூன்
- குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
- பொடியாக நறுக்கிய பிஸ்தா - 1/2 டீஸ்பூன்
- பாதாம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
- ஏலக்காய் பவுடர் - சிறிதளவு
- தேங்காய் துண்டுகள்
தேங்காய் மைசூர் பாக் செய்முறை
தேங்காய் மைசூர் பாக் தயார் செய்ய, புதிய தேங்காயைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- முதலில் தேங்காயை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து, தனியாக பேஸ்ட்டாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
- இப்போது கடாயை அடுப்பில் வைத்து, பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- பாலில் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
- இப்போது தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் சமைக்க வேண்டும்.
- அடிப்பகுதியில் ஒட்டாமல் இருக்க இதை அடிக்கடி கலக்க வேண்டும்.
- இப்போது, இந்தக் கலவையில், பாலில் ஊறவைத்த குங்குமப்பூ இதழ்களை, பாலுடன் சேர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Christmas Cake: கிறிஸ்மஸ் வந்தாச்சு.. வீட்டிலேயே சுவையான பிளம் கேக் செய்யலாமா?
- இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்
- இதை மிதமான தீயில் 10 நிமிடங்கள் சமைக்கலாம்.
- பின், இந்தக் கலவையில் துருவிய தேங்காயைச் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- இந்தக் கலவையை இறுக்கமாக்கும் வரை நன்றாக கலக்க வேண்டும்.
- இப்போது ஒரு தட்டில் நெய் ஊற்றி, அதில் சூடான இனிப்பு கலவையை பரப்பலாம்.
- சற்று ஆறிய பிறகு, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம்.
- இப்போது சுவையான தேங்காய் மைசூர் பாக் தயாரானது. மேலும், இதில் பிஸ்தா, பாதாம் போன்றவற்றை தூவி சாப்பிடலாம்.
- இந்த இனிப்பான தேங்காய் மைசூர் பாக்கை எளிதான முறையில் இப்படி வீட்டிலேயே தயார் செய்யலாம்.
கடைக்குச் சென்று ஒவ்வொரு முறையும் மைசூர் பாக் வாங்கி சாப்பிடுவதை விட, இவ்வாறு வீட்டிலேயே தேங்காயில் செய்யப்படும் மைசூர் பாக்கைத் தயார் செய்யலாம். வழக்கமான மைசூர் பாக் விட, தேங்காய் மைசூர் பாக் அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டதாகும். ஏனெனில், இது தேங்காய், பால், உலர் பழங்கள் போன்றவை கொண்டு தயார் செய்யப்படுகிறது.
தேங்காய் மைசூர் பாக் நன்மைகள்
இந்த ரெசிபி தயாரிக்க முதன்மையானதாக தேங்காய் தேவைப்படுகிறது. தேங்காய் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. தேங்காயில் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருள்கள் இரத்தத்தில் கலந்து சருமத்திற்கு பளபளப்புத் தன்மையைத் தருகிறது. மேலும், தேங்காயில் உள்ள புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் போன்றவை முடி உதிர்வு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
ரெசிபியில் பால் சேர்ப்பது மேம்பட்ட எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. குறிப்பாக, டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கும், இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கவும் உதவுகிறது.
மேலும், இதில் சேர்க்கப்படும் உலர் பழங்கள் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். கூடுதலாக, இதன் ஆரோக்கிய நன்மைகள் வகை 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது, புற்றுநோயைத் தடுப்பது, எடையிழப்பு, எலும்புகளை வலுப்படுத்துதல் போன்றவற்றிற்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Christmas special recipe: இந்த கிறிஸ்துமஸூக்கு சுவையான பஞ்சுபோன்ற வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்! இப்படி ஈஸியா செய்யுங்க
Image Source: Freepik