Muttai Mittai Recipe in Tamil: முட்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. எப்பவும் முட்டையை வைத்து குழம்பு, பொரியல், கிரேவி, மசாலா என செய்து சலித்துவிட்டதா? அப்போ இந்த முறை முட்டையை வைத்து முட்டை மிட்டாய் செய்து கொடுங்க.
வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள், சென்னை ஸ்பெஷல் முட்டை மிட்டாய் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Healthy Momos Recipe: குழந்தைகளுக்கு மோமோஸ் இப்படி செஞ்சி கொடுங்க..
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
சர்க்கரை - 1/2 கப்
பொடித்த பாதாம் - 1/4 கப்
பால் பவுடர் - 1/2 கப்
நெய் - 1/4 கப்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
அலங்கரிக்க நறுக்கிய பாதாம் - சிறிது
நெய் - சிறிது
முட்டை மிட்டாய் செய்முறை:

- முதலில், ஒரு பவுலில் முட்டை சர்க்கரையை சேர்த்து சர்க்கரை நன்றாக கரையும் வரை கலக்கவும்.
- பிறகு இதனுடன் பொடித்த பாதாம் பால் பவுடர் மற்றும் நெய் சேர்த்து விஸ்க் செய்யவும்.
- குங்குமப்பூ சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலக்கவும்.
- சர்க்கரை கரையாமல் இருப்பது போல் தோன்றினால் அடுப்பில் குறைந்த தீயில் ஒரு நிமிடம் வைத்து கிளறி எடுக்கவும்.
- இப்போது, கேக் டின்னின் மேல் நெய் தடவி தயாரித்து வைத்திருக்கும் கலவையை இதில் ஊற்றி நெய் மற்றும் நறுக்கிய பாதாம் முந்திரி சேர்க்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Selavu Rasam: தக்காளி ரசம் தெரியும்.. அது என்னப்பா செலவு ரசம்? இதோ ரெசிபி!
- அகலமான பாத்திரத்தில் உப்பு கொட்டி 15 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும் பிறகு தயாரித்து வைத்திருக்கும் கலவையை வைத்து மூடி மிதமான தீயில் 30 நிமிடம் வைக்கவும்.
- இவை சிவந்த நன்றாக வெந்த பிறகு ஆறவிடவும். ஆறியபிறகு துண்டுகளாக போட்டு பரிமாறவும்.
முட்டை சாப்பிடுவதன் ஆரோக்கிய நன்மைகள்:
புரதம்: முட்டைகள் அனைத்து ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்ட உயர்தர புரதத்தின் நல்ல மூலமாகும். முட்டை புரதம் தசை ஆரோக்கியம், எடை மேலாண்மை மற்றும் வயதானவர்களுக்கு சர்கோபீனியாவைத் தடுக்கவும் உதவும்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: முட்டையில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே, பி1, பி2, பி5, பி6, பி9 மற்றும் பி12 உட்பட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. ஒரு பெரிய வேகவைத்த முட்டையில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் உள்ளது.
இந்த பதிவும் உதவலாம் : Mushroom Green Masala: நாவில் எச்சில் ஊற வைக்கும் காளான் க்ரீன் மசாலா… எப்படி செய்யணும் தெரியுமா?
கண் ஆரோக்கியம்: முட்டையில் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு அபாயத்தைக் குறைக்க உதவும்.
எலும்பு ஆரோக்கியம்: வைட்டமின் டி கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது. ஒரு முட்டை தினசரி பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் டியில் 6% வழங்குகிறது.
இதய ஆரோக்கியம்: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீடைன் மற்றும் கோலின் போன்ற சத்துக்கள் முட்டையில் உள்ளன.
இந்த பதிவும் உதவலாம் : Viral Tomato Chutney: வெறும் 5 நிமிடம் போதும் சுவையான வைரல் தக்காளி சட்னி ரெடி!
வயிறு நிறைவு: முட்டையில் அதிக புரதம் உள்ளது. இது நீண்ட நேரம் நம்மை நிறைவாக உணர உதவும்.
Pic Courtesy: Freepik