How to make amla rasam recipe: நம்மில் பலருக்கு ரசம் சாதம் பிடிக்கும். என்னதான் மட்டன், சிக்கன் என எது சாப்பிட்டாலும் கடைசியில் கொஞ்சம் சாதத்தில் ரசம் ஊற்றி சாப்பிட்டால் தான் நம்மில் பலருக்கு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். ரசம் சுவையிக்கு மட்டும் அல்ல; ஆரோக்கியத்திற்கும் நல்லது.
நாம் பெரும்பாலும் தக்காளி ரசம், பருப்பு ரசம், சிக்கன் ரசம், மிளகு ரசம், கல்யாண ரசம், மைசூர் ரசம் என பல ரசம் வைத்துக் கொடுத்திருப்போம். ஆனால், எப்போதாவது கிராமத்து ஸ்டைலில் செலவு ரசம் வைத்துளீர்களா? நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். இந்த வாரம் உங்கள் குடும்பத்தினருக்கு செலவு ரசம் செய்து கொடுங்க. வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறை பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : அருமை! ஆரோக்கியம்! கம்பு மட்டும் போதும்.. அசத்தலான தோசை சட்டுனு ரெடி..
தேவையான பொருட்கள்:
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
மஞ்சள் தூள் - சிறிதளவு
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
நாட்டுத்தக்காளி - 2 பெரியது
பூண்டு - 5
சின்ன வெங்காயம் - 5
கருவேப்பிலை - 1கொத்து
காய்ந்த மிளகாய் - 1
கொத்தமல்லி தழை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
செலவு ரசம் செய்முறை:

- இதற்கு முதலில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக வறுத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- பின்னர் அவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு ரசத்திற்கு தேவையான அளவு தணண்ணீரை அவற்றோடு சேர்க்கவும்.
- பிறகு அவற்றோடு தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து மிதமான சூட்டில் நுரை வரும் வரை கொதிக்க வைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Tirupati Laddu: திருப்பதி லட்டை அதே சுவையில் வீட்டிலேயே செய்யலாமா? இதோ ரெசிபி!
- இதற்கிடையில், ரசத்தை தாளிக்க ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு பொறியவும், கருவேப்பிலை - காய்ந்த மிளகாய் சேர்த்து கிளறி ரசத்தோடு சேர்த்துக்கொள்ளவும்.
- ரசம் நுறை தட்டி பொங்கி வரும் போது அடுப்பை அனைத்து கீழே இறக்கினால் மனமனக்கும் செலவு ரசம் ரெடி!
செலவு ரசம் சாப்பிடுவதன் நன்மை

செரிமானம்
ரசத்தில் உள்ள கருப்பு மிளகு உங்கள் வயிற்றில் அதிக அமிலத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது செரிமானம், வாயு, வாய்வு மற்றும் வயிற்றுப்போக்கிற்கு உதவும்.
மலச்சிக்கல்
ரசத்தில் உள்ள புளியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலச்சிக்கலை போக்கவும், குடல் இயக்கத்தை எளிதாக்கவும் உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி
ரசத்தில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆண்டிபயாடிக் ஆகவும் செயல்படும்.
நீரேற்றம்
ரசத்தின் திரவ நிலைத்தன்மை உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
இந்த பதிவும் உதவலாம் : Healthy Momos Recipe: குழந்தைகளுக்கு மோமோஸ் இப்படி செஞ்சி கொடுங்க..
எடை இழப்பு
ரசம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதன் மூலமும் எடை இழப்புக்கு உதவும்.
தோல் ஆரோக்கியம்
ரசத்தில் உள்ள புளி மற்றும் தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் சருமத்தை இளமையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவும்.
குடல் ஆரோக்கியம்
ரசம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி குடல் நுண்ணுயிரியை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
நீரிழிவு நோய்
தினமும் ரசம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சர்க்கரை நோய் கட்டுப்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Pic Courtesy: Freepik