Thakkali Thokku: தக்காளி தொக்கு ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க… விடவே மாட்டீங்க…

  • SHARE
  • FOLLOW
Thakkali Thokku: தக்காளி தொக்கு ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க… விடவே மாட்டீங்க…


Thakkali Thokku Recipe: தக்காளி தொக்கு நாம் வீட்டில் செய்யக்கூடிய சுவையான ஒன்றாகும். இதனை உங்கள் காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவோடு மகிழலாம். தக்காளி தொக்கு எல்லா நேரத்திலும் உங்களுக்கு உதவும். இதனை இட்லி, தோசை, சப்பாதி, சாதம் என எதனுடன் வேணாலும் வைத்து சாப்பிடலாம். அவ்வளவு ருசியாக இருக்கும்.

வீட்டிலேயே அருமையான, சுவையான, காரமான தக்காளி தொக்கு செய்வது எப்படி என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இதை ட்ரை பண்ணி பாருங்க. அப்புறம் அடிக்கடி செய்வீங்க.

தக்காளி தொக்கு செய்வது எப்படி.? (How To Make Tomato Thokku)

தேவையான பொருட்கள்

தக்காளி - 2 கிலோ
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 200 மில்லி
பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்
வெந்தய பொடி - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 10
நாட்டு பூண்டு - 100 கிராம்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

இதையும் படிங்க: Sesame Seeds Laddu: எள்ளு லட்டு இப்படி செஞ்சி பாருங்க… ரொம்ப நல்லது.!

செய்முறை

  • கட்டயில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்துக்கொள்ளவும். இதனுடன் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் இணைத்து, தீயை மிதமாக வைத்து, கடாயை மூடி வைக்கவும். அவ்வப்போது கிளற மறக்காதீர்கள்.
  • தக்காளி நன்கு சுண்டி வரும் நேரத்தில் மிளகாய் மற்றும் மல்லி தூளை சேர்த்து கலந்து விடவும். இதனை நன்கு வேக வைக்கவும்.
  • தற்போது நாட்டுப்பூண்டை எடுத்து தோல் உரித்து, மேலோட்டமாக அரைத்துக்கொள்ளவும்.
  • வேறு ஒரு வாணலியை எடுத்து, அதில் நல்லெண்ணெய் சேர்க்கவும். இது சூடான பிறகு, கடுகு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை, வெந்தய பொடி, பெருங்காயத்தூள் இணைத்து வதக்கவும். பின்னர் வேக வைத்த தக்காளி விழுதை இதனுடன் சேர்த்து கலக்கவும்.
  • பின் அரைத்த நாட்டுப்பூண்டை இதனுடன் கலந்து நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும். அவ்வளவு தான் சுவையாக தக்காளி தொக்கு ரெடி. இதனை கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்.
  • இதனை இட்லி, தோசை, சப்பாதி, சாதம் என எதனுடன் வேணாலும் வைத்து சாப்பிடலாம். அவ்வளவு ருசியாக இருக்கும்.

Image Source: Freepik

Read Next

Pista Benefits: பிஸ்தா செய்யும் அதிசியங்கள் இங்கே…

Disclaimer

குறிச்சொற்கள்