How to make curry leaf pickle and its benefits: ஊறுகாய் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. நாம் பலவகையான ஊறுகாய்களைக் கேள்விப்பட்டிருப்போம். அதில் சில ஊறுகாய் வகைகளை ருசித்திருப்போம். தக்காளி, எலுமிச்சை, மாங்காய், நார்த்தங்காய், பூண்டு உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருள்களைக் கொண்டு வீட்டிலேயே எளிதான முறையில் ஊறுகாயைத் தயார் செய்வோம். அவ்வாறு வீட்டிலேயே நமக்கு எளிதில் கிடைக்கக் கூடிய கறிவேப்பிலையைக் கொண்டு ஊறுகாய் தயார் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நாம் பெரும்பாலான வீடுகளில் கறிவேப்பிலை சட்னியைத் தயார் செய்வதைப் பார்த்திருப்போம். கறிவேப்பிலை அதிகம் கிடைக்கும் காலங்களில் இது போல கறிவேப்பிலை ஊறுகாயைச் செய்து வைத்துக் கொண்டால், அதை நாம் நீண்ட நாள்களுக்கு வைத்து பயன்படுத்தலாம். இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் வைத்து சாப்பிடலாம். இதில் வீட்டில் எளிமையான முறையில் கறிவேப்பிலை ஊறுகாய் தயார் செய்வதற்கான முறையையும், கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Curry Leaves Water Benefits: தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்
கறிவேப்பிலை ஊறுகாய் தயார் செய்யும் முறை
தேவையான பொருள்கள்
- கறிவேப்பிலை - 50 கிராம்
- வெல்லம் - சிறிதளவு
- பச்சை மிளகாய் 100 கிராம்
- எண்ணெய் - கால் கப்
- கடுகு - கால் ஸ்பூன்
- புளி - 100 கிராம்
- வெந்தயம் - கால் ஸ்பூன்
- சீரகம் - ஒரு ஸ்பூன்
- உளுந்து - ஒரு ஸ்பூன்
- கடலைப் பருப்பு - ஒரு ஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- பூண்டு - 10 பல்
- வரமல்லி விதைகள் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
இந்த பதிவும் உதவலாம்: Curry Leaves Benefits: இந்த நாள்பட்ட நோய்களை எல்லாம் தவிர்க்க தினமும் 5 கறிவேப்பிலை சாப்பிடுங்க
- முதலில் கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி, அது சூடான பிறகு கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து, கடலைபருப்பு மற்றும் உளுந்து போன்றவற்றையும் சேர்த்து அது பொன்னிறமான பிறகு வரமல்லி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- பிறகு கழுவி காய வைத்த கறிவேப்பிலையை சேர்த்து மிதமான தீயில் வைக்க வேண்டும். இதில் இலைகளில் எஞ்சிய ஈரப்பதம் குறையும் வரை வதக்கலாம்.
- இதை வதக்கிய பிறகு, ஆறவைத்து, ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளலாம்.
- கறிவேப்பிலை வறுத்த அதே எண்ணெயில் வெல்லம் மற்றும் புளி விழுது போன்றவற்றைச் சேர்க்க வேண்டும். இது தேன் போன்று கெட்டியான பேஸ்ட் உருவாகும் வரை அதை கொதிக்கவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த கெட்டியான புளி விழுதில் மஞ்சள், உப்பு மற்றும் அரைத்த கறிவேப்பிலை விழுது சேர்த்து அடுப்பை அணைத்து நன்றாகக் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இதை ஆறவைக்கலாம். இப்போது சுவையான கறிவேப்பிலை ஊறுகாய் தயாரானது.
- இதை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி ஜாரில் எடுத்து அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொண்டு, 15 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கலாம்.
இப்போது காரமான சுவையில் எளிதான முறையில் ஆரோக்கியமாக கறிவேப்பிலை ஊறுகாயைத் தயார் செய்யலாம்.
கறிவேப்பிலை ஊறுகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கறிவேப்பிலை ஊறுகாய் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. கறிவேப்பிலை ஊறுகாயில் உள்ள வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஈ போன்ற வைட்டமின்களும், அத்துடன் இரும்பு மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளது. குறிப்பாக, கறிவேப்பிலையில் உள்ள செரிமான பண்புகள் செரிமான நொதிகளைத் தூண்டவும் இரைப்பை குடல் பிரச்சினைகளைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், இதன் ஊட்டச்சத்துக்களின் உள்ளடக்கம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. கறிவேப்பிலை ஊறுகாய் சாப்பிடுவதன் மூலம் இது போன்ற ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Curry Leaves Juice: முடி உதிர்வு முதல் எடை குறைப்பு வரை… அனைத்து பிரச்சனைக்கும் இந்த ஒரு ஜூஸ் போதும்!!
Image Source: Freepik