Is It Good To Eat Curry Leaves Daily: உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். நல்ல, ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் ஆரோக்கியமற்ற உணவுமுறையை பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.
இன்று பலரும் ஆரோக்கியமான உணவுகளை ஒதுக்கி வைப்பர். இதில் கறிவேப்பிலையும் அடங்கும். கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது பல வகையான நோய்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. அந்த வகையில், தினமும் குறைந்தது 5 கறிவேப்பிலையைத் தொடர்ந்து உட்கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
முக்கிய கட்டுரைகள்
கறிவேப்பிலையின் ஊட்டச்சத்துக்கள்
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், ஆக்ஸிஜனேற்றிகள், இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த இலைகளை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதுடன், பல நோய்களைத் தடுக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Okra Water Benefits: இதய ஆரோக்கியம் முதல் நோயெதிர்ப்புச் சக்தி வரை. வெண்டைகாய் நீர் தரும் அற்புத நன்மைகள்
தினமும் 5 கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தினந்தோறும் 5-10 கறிவேப்பிலையைத் தொடர்ந்து உட்கொள்வது உடலுக்குப் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் கறிவேப்பிலை தரும் அற்புத நன்மைகளைக் காணலாம்.
மூளை செயல்பாட்டிற்கு
கறிவேப்பிலை மூளை செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை மூளையின் நரம்பு மண்டலத்தை பாதுகாப்பாக வைப்பதுடன் அல்சைமர் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.
வயிறு சார்ந்த பிரச்சனைக்கு
ஹெல்த்லைனின் அறிக்கையின் படி, தினந்தோறும் 5 முதல் 10 கறிவேப்பிலையைச் சாப்பிடுவது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வது மலச்சிக்கல் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இதில் நிறைந்துள்ள அதிகளவிலான தாவரக் கலவைகள் உடலை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
வீக்கத்தைக் குறைக்க
ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலுக்குக் கடுமையாக தீங்கு விளைவிக்கலாம். கறிவேப்பிலையை உட்கொள்வது ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. கறிவேப்பிலையில் தாதுக்கள், வைட்டமின்கள் தவிர பல்வேறு அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளன. இந்த எண்ணெய்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Avocado Benefits: இந்த நன்மைகள் எல்லாம் பெற தினமும் ஒரு அவகேடோ பழம் சாப்பிடுங்க
நீரிழிவு நோய்க்கு
கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த பலனளிக்கும். எப்படி தெரியுமா? கறிவேப்பிலையில் உள்ள ஆரோக்கியமான பண்புகள் உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் நீரிழவு நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
கறிவேப்பிலை இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடிய இலையாகும். இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
நோய்த்தொற்றுக்களைத் தடுக்க
கறிவேப்பிலையில் கிளைகோசைடுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் பினாலிக் கலவைகள் நிறைந்துள்ளன. இந்த கூறுகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து பாக்டீரியா, வைரஸ் தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
கறிவேப்பிலை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு வழிகளில் நன்மை தருகிறது. தினந்தோறும் கறிவேப்பிலையை சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Red Banana Benefits: இதய ஆரோக்கியம் முதல் எடை இழப்பு வரை பல நன்மைகளை தரும் செவ்வாழை!
Image Source: Freepik