Avocado Benefits: இந்த நன்மைகள் எல்லாம் பெற தினமும் ஒரு அவகேடோ பழம் சாப்பிடுங்க

  • SHARE
  • FOLLOW
Avocado Benefits: இந்த நன்மைகள் எல்லாம் பெற தினமும் ஒரு அவகேடோ பழம் சாப்பிடுங்க


அவகேடோவின் ஊட்டச்சத்துக்கள்

அவகேடோ பழத்தில் நல்ல அளவிலான கொழுப்புகள், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி6, சி, மற்றும் வைட்டமின் கே1 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவகேடோவில் 20-க்கும் மேற்பட்ட வைட்டமின்கள் அதிகளவு உள்ளது. இதனுடன் தாதுக்கள், மினரல்கள் போன்றவை நிறைந்துள்ளன.

இவ்வாறு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அவகேடோ பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எனினும், தினமும் அவகேடோ சாப்பிடலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். ஆம். தினந்தோறும் ஒரு அவகேடோவை சாப்பிடலாம். இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகள் உடல் ஆரோக்கியத்துடன் சரும ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ghee In Summer: இந்த காரணத்துக்காக கோடையில் நீங்க கண்டிப்பா நெய் எடுத்துக்கணும்

தினமும் அவகேடோ பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

ஒரு நாளைக்கு ஒரு அவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

ஆரோக்கியமான கொழுப்பு

உடலில் கொழுப்பு சேர்வதற்கான முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதே ஆகும். நல்ல ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யலாம். இந்தப் பழத்தில் அதிகளவு மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகள் இருக்கிறது. இந்த நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்வதன் மூலம் மாரடைப்பு போன்ற அபாயத்தைத் தவிர்க்கலாம்.

இதய ஆரோக்கியத்திற்கு

இரத்தத்தில் டிரைகிளிசரைடுகளின் அளவு அதிகமாவது எல்டிஎல் என்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. அவகேடோ பழம் சாப்பிடுவது டிரை கிளிசரைடு அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் உடலில் உள்ள எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பைக் குறைத்து எச்டிஎல் என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்கலாம்.

அவகேடோவில் பைட்டோஸ்டீரோல் என்ற மூலக்கூறு அதிகளவு நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்க

இந்த பழத்தில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உடலின் தினசரி இயக்கத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது. ஏனெனில் உடலில் இதயம், சிறுநீரகம் போன்ற செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை பொட்டாசியம் வழங்குகிறது.

அவகேடோவில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கச் செய்வதுடன், சோடியத்தால் உடலில் ஏற்படும் விளைவைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Okra Water Benefits: இதய ஆரோக்கியம் முதல் நோயெதிர்ப்புச் சக்தி வரை. வெண்டைகாய் நீர் தரும் அற்புத நன்மைகள்

கண் ஆரோக்கியத்திற்கு

அவகேடோவில் லுடீன் மற்றும் சியாக்சிந்தின் போன்ற மூலக்கூறுகள் அதிகளவில் நிறைந்துள்ளது. இந்த மூலக்கூறுகள் கண் பார்வையில் ஏற்படும் மாகுலர் சிதைவு செயல்முறையைத் தாமதப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க அவகேடோ பழத்தைச் சாப்பிடலாம். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கர்ப்பிணி பெண்கள் அவகேடோ பழத்தை எடுத்துக் கொள்வது குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிப்பதுடன், தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு

அவகேடோ பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது. அவகேடோ பழத்தைச் சாப்பிடுவது அதிக கலோரிகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். குறைவான கலோரிகள் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். மேலும் இதில் குறைந்தளவு கிளைசெமிக் குறியீடு நிறைந்துள்ளன. இவை நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த தேர்வாக அமைகிறது.

அவகேடோவில் குறைந்தது 30% வரையிலான கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் நிறைந்துள்ள பல வகையான ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Turmeric With Chia Seeds: செரிமானம் முதல் சர்க்கரை வியாதி வரை. மஞ்சளுடன் சியா விதை தரும் சூப்பர் நன்மைகள்

Image Source: Freepik

Read Next

Egg Yolk: முட்டை மஞ்சள் கருவில் இத்தனை வைட்டமின்கள் இருக்கிறதா?

Disclaimer

குறிச்சொற்கள்