சம்மரில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வாக உங்க டயட்ல சேர்க்க வேண்டிய ஒரு சூப்பர் ஃபுட் இதோ

Health benefits of avocado in summer: அவகேடோ பழங்கள் பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும். இது நீரேற்றம் மற்றும் குளிர்ச்சியூட்டும் தன்மை கொண்டதாகும். கோடைக்காலத்தில் அவகேடோ பழம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சம்மரில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வாக உங்க டயட்ல சேர்க்க வேண்டிய ஒரு சூப்பர் ஃபுட் இதோ

Is avocado good in summer: கோடைக்காலத்தில் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். எனவே இந்த காலநிலையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், சீரான உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகும். ஏனெனில், சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையுடன் கோடைக்காலத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். குறிப்பாக, கோடையில் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அவகேடோ பழம் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் கோடைக்காலத்தில் அவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

அவகேடோவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

அவகேடோ பழத்தில் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. வைட்டமின் சி, வைட்டமின் பி , வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், முக்கியமான கொழுப்புகள் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. அவகேடோவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அவகேடோவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. மேலும் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன.

இந்த பதிவும் உதவலாம்: Avocado For Belly Fat: தொப்பையை வெண்ணெய் போல கரைக்கும் வெண்ணெய்பழம்! இப்படி சாப்பிடுங்க

கோடைக்காலத்தில் அவகேடோ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அவகேடோ சாப்பிடுவதால் ஏற்படும் முழு நன்மைகளையும், அதை உணவில் சேர்ப்பது அவ்வாறு சேர்ப்பது என்பது குறித்து காணலாம்.

குளிர்ச்சியை மேம்படுத்த

அவகேடோவில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. இது உடலில் வெப்பத்தால் ஏற்படும் வீக்கத்தைத் தணிக்க உதவுகிறது. மேலும், அவகேடோவில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்றவை சருமத்தை புற ஊதா கதிர்வீச்சு மற்றும் சூரிய சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

நீரேற்றத்தை அதிகரிக்க

அவகேடோ பழங்கள் அதிகளவிலான நீர்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது உடலில் நீரேற்றத்தை பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக, வெப்பமான காலநிலையில் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதில் அவகேடோ முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், அவகேடோ பழங்கள் பொட்டாசியம் நிறைந்ததாகும். இது தசைப்பிடிப்பு, நீரிழப்பு மற்றும் வெப்ப சோர்வு போன்றவற்றைத் தடுக்கிறது.

ஆற்றல் மேம்பாட்டிற்கு

அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலுக்கு நீண்ட கால ஆற்றலை வழங்குகிறது. இது வெப்பத்தில் திடீர் ஆற்றல் வீழ்ச்சியைத் தடுக்க உதவுகிறது. இதன் குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீடு இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. மேலும் இது நீரிழப்புடன் தொடர்புடைய சோர்வு மற்றும் தலைச்சுற்றலைக் குறைக்க வழிவகுக்கிறது.

சருமம், முடி ஆரோக்கியத்திற்கு

அவகேடோ பழங்களில் வைட்டமின்கள் சி, ஈ மற்றும் பயோட்டின் போன்றவை நிறைந்துள்ளது. இவை அனைத்துமே சருமத்தின் நீரேற்றம், நெகிழ்ச்சித்தன்மை மற்றும் முடியின் வலிமையைப் பராமரிக்க அவசியமாகும். அவகேடோ பழத்தில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் சருமம் மற்றும் முடிக்கு ஏற்படும் வறட்சி மற்றும் வெயிலால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Avocado Seed Benefits: அவகேடோ பழம் மட்டுமல்ல அதன் விதையையும் சாப்பிடணும்! ஏன் தெரியுமா?

குடல் ஆரோக்கியத்திற்கு

அவகேடோவில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை உணவாகக் கொண்டு குடல் நுண்ணுயிரி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது வீக்கம் மற்றும் அஜீரணம் போன்றவற்றைத் தடுக்கிறது. மேலும், இயற்கை செரிமான நொதிகள் கொழுப்புகள் மற்றும் புரதங்களை உடைக்க உதவுகிறது. எனவே இது வெப்பமான காலநிலையில் வயிற்றில் எளிதாக்குகிறது.

கோடைக்காலத்தில் அவகேடோ பழங்களை சாப்பிடுவதற்கான வழிகள்

அவகேடோ ஸ்மூத்திகள் - வாழைப்பழம், பசலைக்கீரை, தேங்காய் தண்ணீர் மற்றும் ஒரு துளி எலுமிச்சை சாறுடன் கலந்த அவகேடோ ஸ்மூத்திகளை எடுத்துக் கொள்ளலாம்.

அவகேடோ டோஸ்ட் - முழு தானிய டோஸ்ட்டின் மேல் அவகேடோ டோஸ்ட் சேர்த்து, அதன் மேல் செர்ரி தக்காளி, வேகவைத்த முட்டைகள் மற்றும் ஆளி விதைகளைத் தூவி சாப்பிடலாம்.

அவகேடோ சூப் - எலுமிச்சை, வெள்ளரிக்காய் மற்றும் தேங்காய் பால் கலந்த குளிர்ந்த அவகேடோ சூப் சாப்பிடலாம். இது க்காலத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் உணவாக அமைகிறது.

அவகேடோ சாலட்கள் - தக்காளி, வெண்ணெய் மற்றும் ஃபெட்டா சீஸ் போன்றவற்றுடன் ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அவகேடோ சாலட்டாக சாப்பிடலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Avocado Benefits: இந்த நன்மைகள் எல்லாம் பெற தினமும் ஒரு அவகேடோ பழம் சாப்பிடுங்க

Image Source: Freepik

Read Next

Garlic in Summer: பூண்டு உடலின் சூட்டை அதிகரிக்குமா? தினசரி எத்தனை பூண்டு சாப்பிட்டால் நல்லது?

Disclaimer