Health Benefits Of Avocado Seeds: உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் பல்வேறு வகையான பழங்கள் உதவுகின்றன. அவ்வாறே உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் பழங்களில் ஒன்றாக அமைவது அவகேடோ ஆகும். இதனை மக்கள் டோஸ்ட், ஸ்மூத்தியாக சாப்பிட விரும்புகின்றனர். மேலும் பலர் சாலட்டில் சேர்த்து சாப்பிடுவர். அவகேடோவில் ஏராளமான ஃபோலேட், புரதம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளது.
நாம் பழங்களை சாப்பிடும் போது, பெரும்பாலான பழங்களில் உள்ள கொட்டைகளை எடுத்து விடுகிறோம். ஆனால் சில பழங்களின் கொட்டைகளிலும் நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தருவதாக அமைகிறது. இந்த வரிசையில் அவகேடோ பழமும் அடங்கும். மற்ற பழங்களைப் போலவே, அவகேடோ பழம் சாப்பிடும் போதும் நாம் விதையை தூங்கி எறிந்து விடுகிறோம். ஆனால், இந்த விதைகள் சருமத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்த பதிவும் உதவலாம்: Avocado Substitute: அவகோடாவுக்கு பதில் இதை ட்ரை பண்ணி பாருங்க!
அவகேடோ பழத்தின் விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
செரிமான அமைப்பின் ஆரோக்கியத்திற்கு
அவகேடோ பழத்தின் ஊட்டச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஏராளமான நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலை தடுக்கவும், அஜீரணம், வாய்வு போன்ற செரிமான பிரச்சனைகளைப் போக்கவும் உதவுகிறது. இந்த விதைகளில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வயிறு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பொட்டாசியம் நிறைந்த
அவகேடோ விதைகளில் அதிக அளவிலான பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே இதனை உட்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான பொட்டாசியம் ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். மேலும், இந்த பொட்டாசியம் ஊட்டச்சத்துக்களின் உதவியுடன் உடலில் இருந்து நச்சுப் பொருட்கள் எளிதில் அகற்றப்பட்டு, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவது உடல் வலியிலிருந்து நிவாரணம் தர உதவுகிறது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க
அவகேடோ விதைகள் உட்கொள்வதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இதன் நார்ச்சத்துக்கள் உடலிலிருந்து கெட்ட கொழுப்பைக் குறைத்து மாரடைப்பு அபாயங்கள் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. அவகேடோ விதைகளை சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்கிறது. மேலும், இந்த விதைகளை உட்கொள்ளலின் மூலம் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Avocado Oil Benefits: அவகோடா எண்ணெய்யில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்!
பூஞ்சை தொற்றுக்களைத் தடுக்க
அவகேடோ விதைகளை உட்கொள்வதன் மூலம் பூஞ்சை தொற்றுகளை தடுக்க உதவுகிறது. இந்த விதைகளை சாப்பிடுவது உடலில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. அதன் படி, அவகேடோ விதையானது பாக்டீரியா நோய்த்தொற்றுக்களைத் தடுக்க உதவுகிறது. எனவே, இதனை உட்கொள்வதன் மூலம் வயிற்றில் நிறைந்திருக்கும் பாக்டீரியாக்களின் அளவை அதிகரித்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
நோயெதிர்ப்புச் சக்தி வலுவாக
தேநீர் தயாரிக்கும் போது அவகேடோ பழத்தின் விதைகளை எளிதாகப் பயன்படுத்தலாம். இவ்வாறு தேநீரில் விதைகளைப் பயன்படுத்துவது அதன் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நோயெதிர்ப்புச் சக்தியை வலுவாக்க உதவுகிறது. இவை பல்வேறு நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இது தொற்று நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
அவகேடோ விதைகளை எப்படி சாப்பிடலாம்?
- அவகேடோ விதைகளை உணவில் எளிதான முறையில் பயன்படுத்தலாம். அவகேடோ விதைகளை சாப்பிடுவதற்கு அவகேடோ பழத்தினை வெட்டி விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.
- பிறகு இந்த விதைகளை நன்கு காய வைத்து, நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த பொடியை எதிலும் சேர்த்து எளிதாக சாப்பிடலாம்.
- இவ்வாறு அவகேடோ விதை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனினும், ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பின், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே அதை உட்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Avocado Benefits: இந்த நன்மைகள் எல்லாம் பெற தினமும் ஒரு அவகேடோ பழம் சாப்பிடுங்க
Image Source: Freepik