Sat Sep 12, 2026 | 12:59 AM IST

உணவில் சணல் விதைகள் சேர்க்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

Health Benefits of Eating Hemp Seeds: அன்றாட உணவுகளில் ஆரோக்கியமான, ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். அந்த வகையில் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகவும், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாகவும் அமைகிறது. இதில் ஒன்றாக சணல் விதைகள் அமைகிறது. இந்த சணல் விதைகள் அதன் உயர் புரத உள்ளடக்கத்திற்காக நன்கு அறியப்படுகிறது.

சணல் விதைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இவை இதய ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் மற்றும் உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு நன்மை பயக்கும். இந்த சணல் விதைகளை சாலட்கள், சாண்ட்விச்கள் உள்ளிட்டவற்றில் எளிதாக சேர்க்கலாம். இந்த விதைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் என்னென்ன வகையான நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Tea in Empty Stomach: வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? இத பாருங்க

சணல் விதைகள் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

தாவர அடிப்படையிலான புரதம்

சணல் விதைகள் ஒரு முழுமையான புரத மூலமாகக் கருதப்படுகிறது. இதில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளது. இவற்றை உடலால் சொந்தமாக உற்பத்தி செய்ய முடியாது. வேகன் மற்றும் சைவ உணவு உண்பவர்களுக்கும் நல்ல மாற்றாக அமைகிறது. அதிக புரத உள்ளடக்கம் தசை வளர்ச்சி, பழுது மற்றும் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்திற்கு

சணல் விதைகள் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்த நல்ல மூலமாகும். அதிலும் குறிப்பாக அதன் ஓடுகளை அப்படியே உட்கொள்வது, அதன் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மெதுவாக்குகிறது. மேலும் இவை இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறது. கூடுதலாக, முழுமையின் உணர்வை அதிகரிக்கிறது. கூடுதலாக, இதன் நார்ச்சத்துக்கள் மலத்தில் பெருமளவு சேர்க்கிறது மற்றும் வழக்கமான குடல் இயக்கங்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

எடை மேலாண்மைக்கு

உடல் எடை குறைய விரும்புபவர்களுக்கு சணல் விதைகள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதன் உயர்தர புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இவை ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது. மேலும் ஆரோக்கியமான கொழுப்புகளின் சீரான விகிதம் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும், நீடித்த ஆற்றலை வழங்கவும் உதவுகிறது. இவை எடை இழப்பு மேலாண்மைக்கு பெரிதும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Soaked Seeds Benefits: இந்த விதைகளை ஊறவைத்து சாப்பிட்டால் எக்கச்சக்க நன்மைகள் கிடைக்குமாம்!

இதய ஆரோக்கியத்திற்கு

சணல் விதைகளில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது. இவை அனைத்துமே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதில் நைட்ரிக் ஆக்சைடை உருவாக்கும் அமினோ அமிலமான அர்ஜினைனின் இருப்பு, உடலில் இரத்த நாளங்கள் தளர்த்தப்பட்டு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சரும ஆரோக்கியத்திற்கு

சணல் விதைகளில் நிறைந்திருக்கும் கொழுப்பு அமிலங்கள் அதிலும் குறிப்பாக காமா-லினோலெனிக் அமிலம் (GLA) சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறத். இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் தடிப்புத் தோல் அழற்சி, அரிக்கும் தோலழற்சி மற்றும் வறண்ட சருமம் போன்ற தோல் நிலைகளைத் தணிக்கிறது. இந்த சணல் விதைகளைத் தவறாமல் உட்கொள்வதன் மூலம் சருமத்தின் நீரேற்றம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதுடன், சருமத்தில் காணப்படும் எரிச்சலைக் குறைக்கலாம்.

மூளை ஆரோக்கியத்திற்கு

சணல் விதைகளில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் போன்றவை மூளையின் செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானவை ஆகும். இந்த கொழுப்பு அமிலங்கள் நினைவகம் மற்றும் மனநிலையை ஒழுங்குபடுத்துவதுடன், அறிவாற்றல் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும், சணல் விதைகளில் உள்ள மெக்னீசியம் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதில் பங்கு வகிக்கிறது.

இவ்வாறு பல்வேறு வழிகளில் சணல் விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். எனவே இது போன்ற நன்மைகளைப் பெற சணல் விதைகளை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Hemp Seed Benefits: ஆரோக்கியமான சணல் விதைகள் தரும் அற்புத நன்மைகள்

Image Source: Freepik

Read Next

Iron Rich Foods: அடேங்கப்பா.! இரும்புச்சத்தில் கீரை மிஞ்சிய உணவுகள் இவ்வளவு இருக்கா.?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content