Thu Oct 29, 2026 | 12:55 PM IST

Soaked Seeds Benefits: இந்த விதைகளை ஊறவைத்து சாப்பிட்டால் எக்கச்சக்க நன்மைகள் கிடைக்குமாம்!

Soaked Seeds Benefits: இந்த விதைகளை ஊறவைத்து சாப்பிட்டால் எக்கச்சக்க நன்மைகள் கிடைக்குமாம்!Soaked Seeds Benefits: இந்த விதைகளை ஊறவைத்து சாப்பிட்டால் எக்கச்சக்க நன்மைகள் கிடைக்குமாம்!

Is It Good To Eat Soaked Seeds: உடல் ஆரோக்கியத்திற்கு முழு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமாகும். இதில் விதைகளும் அடங்கும். ஆனால், விதைகளை அப்படியே உட்கொள்ளாமல் ஊறவைத்து உட்கொள்வது முழு நன்மைகளையும் தரும். ஊறவைத்த விதைகளை உட்கொள்வது அவற்றின் முழு ஊட்டச்சத்து திறனைத் திறக்க ஒரு சக்திவாய்ந்த வழியாகும். அதன் படி, சியா, ஆளி மற்றும் சூரியகாந்தி போன்ற விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது போன்ற ஊறவைத்த விதைகளை உட்கொள்வது என்சைம்களை செயல்படுத்தி, பைடிக் அமிலம் போன்ற ஆன்டி-நியூட்ரியன்டுகளை குறைக்கிறது.

மேலும் எள் மற்றும் வெந்தயம் போன்றவற்றை ஊறவைத்து உட்கொள்ளும் போது செரிமானம், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் எலும்பு ஆரோக்கியம் போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. ஊறவைத்த பாதாம் உட்கொள்ளல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், மூளை செயல்பாட்டிற்கும் உதவுகிறது. இது தவிர துளசி விதைகள் செரிமானம் மற்றும் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. மேலும் இதய ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை கணிசமாக அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இதில் எந்தெந்த விதைகளை ஊறவைத்து உட்கொள்வதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Soaked Figs Benefits: தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா?

விதைகளை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சியா விதைகள்

இந்த விதைகள் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை ஊறவைக்கப்படும் போது, தண்ணீரை உறிஞ்சி, ஜெல் போன்ற நிலைத்தன்மையை அடைகிறது. இது செரிமானம் அடைய எளிதாகிறது. மேலும் இது ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் உணவு நார்ச்சத்து போன்ற வளமான ஆதாரங்களை வழங்குகிறது. மேலும் ஊறவைத்த சியா விதைகளை உட்கொள்வதன் மூலம் உடல் எடை இழப்பு, இதய ஆரோக்கியம், இரத்த சர்க்கரை பராமரிப்பு போன்ற பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.

சூரியகாந்தி விதைகள்

2 முதல் 4 மணி நேரம் வரை சூரியகாந்தி விதைகளை ஊறவைப்பதன் மூலம், அது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் என்சைம்களை செயல்படுத்துகிறது. இதில் உள்ள விதைகளில் வைட்டமின் பி மற்றும் ஈ, செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இவை வீக்கத்தைக் குறைத்து ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த உதவுகிறது. இந்த ஊறவைத்த சூரியகாந்தி விதைகளை சாலட்கள் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்க்கலாம்.

எள் விதைகள்

எள் விதைகளை 4-6 மணி நேரம் ஊறவைப்பது அதன் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இவை எலும்பு ஆரோக்கியத்திற்கு மேம்படுத்துகின்றன. மேலும் இதன் ஊறவைத்தல் செயல்முறை பைடிக் அமிலத்தை உடைக்கும் என்சைம்களை செயல்படுத்தி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது தவிர, ஊறவைத்த எள் விதைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Soaked Walnuts Benefits: தினமும் ஒரு கைப்பிடி ஊறவைத்த வால்நட் சாப்பிடுவது இவ்வளவு நல்லதா?

தர்பூசணி விதைகள்

தர்பூசணி விதைகளை 6-8 மணி நேரம் ஊறவைப்பது அதிக செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. குறிப்பாக, இதில் உள்ள மெக்னீசியம் சத்துக்கள், இதய ஆரோக்கியம், எலும்பு வலிமை மற்றும் சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. ஊறவைத்த தர்பூசணி விதைகளில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே இவை ஒரு சத்தான சிற்றுண்டியாக அமைகிறது.

பாதாம்

ஓரிரவு முழுவதும் ஊறவைத்த பாதாமை உட்கொள்வது அவற்றின் தோலில் உள்ள டானின்களை நீக்குகிறது. ஏனெனில், இந்த டானின்கள் ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கும். இவ்வாறு டானின்கள் நீக்கப்படுவதன் பாதாமை மிகவும் செரிமானமாக்குகிறது. மேலும் இதில் வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், ஊறவைத்த பாதாம் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

வெந்தய விதைகள்

ஊறவைத்த வெந்தய விதைகளை உட்கொள்வது அவற்றின் ஊட்டச்சத்து கிடைப்பதை மேம்படுத்துகிறது. மேலும் காலை எழுந்த உடன் ஊறவைத்த வெந்தய விதைகளை சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தவும், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. மேலும் இந்த ஜெல் போன்ற பொருள் நார்ச்சத்து நிறைந்தவையாகவும், கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்கவும், மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் அமைகிறது.

இவ்வாறு ஊறவைத்த விதைகளை உட்கொள்வது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துவதுடன், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Soaked Dry Fruits: ஹெல்த்தியா இருக்க ஊறவைத்த உலர் பழங்களை சாப்பிடுங்க

Image Source: Freepik

Read Next

→ Ragi Halwa: ஒரு கப் ராகி மாவு இருந்தா போதும் நாவில் வைத்ததும் கரையும் அல்வா ரெடி!!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.