$
How To Make Ragi Halwa: யாருக்குத்தான் இனிப்பு புடிக்காது. அதுவும் பால்கோவா, அல்வா என்றால் பெயரை கேட்டதும் நாவில் எச்சில் ஊரும். இப்போது நமக்கு பிடித்த இனிப்பு பண்டங்களை நாமே வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து சாப்பிட நினைக்கிறோம். அந்த வகையில், பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ராகியை வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - ½ கப்.
பொடித்த வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 2 கப்.
தேங்காய் எண்ணெய் - ½ கப்.
முந்திரி பருப்பு - ¼ கப்.
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்.
நெய் - 4 ஸ்பூன்.
இந்த பதிவும் உதவலாம் : Drink Water While Eating: சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
ராகி அல்வா செய்முறை:

- முதலில் ஒரு பெரிய கடாயில் நெய் ஊற்றி, நெய் காய்ந்ததும் அதில் முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுக்கவும்.
- இப்போது கேழ்வரகு மாவை தண்ணீர் ஊற்றி கட்டிகள் ஏற்படாமல் கூழ் போல கரைத்து கொள்ள வேண்டும். இது கெட்டியான மாவு பதத்துக்கு இருக்க வேண்டும்.
- பின்னர் ஒரு அகன்ற கனமான இரும்பு சட்டியில் கேழ்வரகு மாவு ஊற்றி மிதமான தீயில் நன்று கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
- குறைந்தது மூன்று நிமிடங்கள் வரை இந்த கேழ்வரகு மாவை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
- இப்போது அதே கடாயில் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து தேவையான அளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : Rice Vs Chapati: சுகரை எது கண்ட்ரோல் பண்ணும்.? சாதமா.? சப்பாத்தியா.?
- இந்த கேழ்வரகு மாவை கிளறிக் கொண்டு இருக்கும் போது இடையிடையே கொஞ்சம் கொஞ்சமாக தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொண்டே இருப்பது அவசியம்.
- இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறும் போது அடி பிடிக்காமல் இருக்க உதவும். இப்போது அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஒரு ஐந்து நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருங்கள்.
- இந்த தேங்காய் எண்ணெய் முழுவதுமாக வெளியேறிய பிறகு இந்த கேழ்வரகு மாவு ஒரு பந்து போன்ற பக்குவத்தில் கிடைக்கும்.
- இப்போது நாம் பொன்னிறமாக நெய்யில் வறுத்து எடுத்த முந்திரி பருப்பை இந்த கேழ்வரகு கலவையில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- சுமார் மூன்று நிமிடங்கள் வரை இந்த கடாயில் கேழ்வரகு கலவையை கிளறிக் கொண்டே இருந்தால் நாம் சேர்த்த தேங்காய் எண்ணெய் கேழ்வரகு கலவையிலிருந்து தனியாக வெளியேற தொடங்கும்.
இந்த பதிவும் உதவலாம் : தயிருடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டா இந்த பிரச்சனை வரவே வராதாம்!
- இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் சுடச்சுட சுவையான ராகி அல்வா தயார்!
ராகி அல்வா ஆரோக்கிய நன்மைகள்

- ராகி இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது இரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்தும். இது பெண்களின் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும்.
- ராகியில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
- ராகி குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதாவது, இது இரத்த சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கிறது. இது ஹார்மோன் சமநிலைக்கு நன்றி, இரத்த சர்க்கரையின் ஏற்ற இறக்கங்கள் இன்சுலின் மற்றும் பிற ஹார்மோன்களின் அளவை பாதிக்கலாம் .
இந்த பதிவும் உதவலாம் : தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதில் இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கா.?
- ராகியில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது பெண்களின் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது.
- ராகியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடல் இயக்கங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. பெண்களின் உடலில் ஹார்மோன் சமநிலைக்கு ஆரோக்கியமான செரிமான அமைப்பு மிகவும் முக்கியமானது.
Pic Courtesy: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version