தயிருடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டா இந்த பிரச்சனை வரவே வராதாம்!

  • SHARE
  • FOLLOW
தயிருடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டா இந்த பிரச்சனை வரவே வராதாம்!


How Does Honey In Yogurt Boost Gut Health: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் ஆரோக்கியம் என்பது உடலின் ஒவ்வொரு உறுப்புகளின் ஆரோக்கியமான செயல்பாட்டைக் குறிக்கிறது. அந்த வகையில் உடலில் உள்ள உறுப்புகள் சீராக மற்றும் ஆரோக்கியமாக இயங்குகிறது என்பதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுமுறைகளே அடிப்படைக் காரணமாக அமைகிறது. அவ்வாறே உடலில் மிக முக்கியமான செயல்பாடுகளில் இயங்கும் உறுப்புகளில் குடல் அமைகிறது. ஏனெனில் குடலை ஆரோக்கியமாக வைப்பதன் மூலம் ஒவ்வாமை மற்றும் தன்னுடல் தாக்க நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.

குடல் ஆரோக்கியத்திற்கு தயிர்

தயிர் புரோபயாடிக்குகள் நிறைந்த சிறந்த இயற்கையான மூலமாகும். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் நல்ல பாக்டீரியா ஆகும். இவை ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் சிறந்த நோயெதிர்ப்புச் சக்தியை ஆதரிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Drink Water While Eating: சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

சமீபத்திய ஆய்வு ஒன்றில், தயிரில் தேனைச் சேர்ப்பது ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கலவையாகக் கருதப்படுகிறது. தயிருடன் தேனைச் சேர்த்து அருந்துவது புரோபயாடிக், பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் போன்ற உயிருள்ள நுண்ணுயிரிகளால் ஏற்றப்படுகிறது. இவை குடலில் நீண்ட காலம் உயிர்வாழ உதவும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு பெரிதும் உதவுகின்றன. மற்ற வகைகளுடன் ஒப்பிடுகையில் தயிருடன் தேன் சேர்ப்பது செரிமான செயல்பாட்டின் போது புரோபயாடிக் உயிர்வாழ்வை சிறப்பாகப் பாதுகாக்கிறது. தேன் மற்றும் தயிர் கலவையானது மிகவும் பொதுவானதாகும். இந்த உணவுகளை ஒன்றாக சேர்த்து வைப்பது பல்வேறு செயல்பாட்டு நன்மைகளைத் தருகிறது.

புரோபயாடிக்குகளை அதிகரிக்க தேன் எவ்வாறு உதவுகிறது?

நிபுணர்களின் கூற்றுப்படி, ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்கள் சால்மோனெல்லா போன்ற சில தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இவை செரிமான செயல்பாட்டின் போது செரிமான நொதிகள், குடலில் இருந்து சுரக்கும் பித்தம் மற்றும் வயிற்றில் உள்ள அமிலம் போன்றவை குடலில் உருவாகும் நச்சுக்களை உருவாக்கி, அதனால் ஏற்படும் நுண்ணுயிரிகளின் பெரிய அளவிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறிப்பாக உணவு மூலம் பரவும் நோயிலிருந்து பாதுகாப்பாக வைக்கிறது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சில சமயங்களில் தயிர் போன்ற புளித்த உணவில் காணப்படக்கூடிய பல்வேறு நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்தின் போது அழிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனினும், தயிருடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கும் போது, புரோபயாட்டிக் பாக்டீரியாக்கள் இந்த செயல்முறையைத் தக்கவைத்துக் கொள்கிறது. எனினும், தேன் சேர்க்காமல் தயிரிலிருந்து மேலும் சில நன்மைகளைப் பெற முடியும்.

தயிருடன் எவ்வளவு தேன் பயன்படுத்தலாம்?

தயிரில் புரோபயாடிக்குகள் தவிர, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே உடல் எடை இழப்பு, இதய ஆரோக்கியம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் சருமம் போன்றவற்றிற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் ஆய்வுகளின் படி, தயிர் உட்கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்க மற்றும் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: யூரிக் அமிலத்தைக் குறைத்து கீல்வாதத்தைத் தடுக்கும் சூப்பர் காலை உணவுகள் இதோ!

இது போன்று, தயிரில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அதன் சுவை பிடிக்கவில்லை எனில், பழங்கள் மற்றும் கொட்டைகளுடன் சிறிது தேன் சேர்த்து சுவையை அதிகரிக்கலாம். இவ்வாறு பழங்கள், நட்ஸ் போன்றவற்றைச் சேர்ப்பது கூடுதல் நன்மைகளைத் தருகிறது.

தயிருடன் தேன் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனினும், தேன் ஒரு கூடுதல் சர்க்கரை என்பதால், உணவு வழிகாட்டுதல்களின்படி சரியான அளவு உட்கொள்ளலை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதன் படி, தேன் ஆனது த்த தினசரி கலோரி உட்கொள்ளலில் குறைந்தது 10 சதவீதமாக இருக்கலாம். ஒரு தேக்கரண்டி அளவிலான தேனில் சுமார் 64 கலோரிகள் இருப்பதாகவும், இதில் பெரும்பாலும் சர்க்கரை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தயிருடன் தேன் சேர்த்து சாப்பிடுவதன் விளைவுகள்

தேனில் அதிக சர்க்கரை நிறைந்திருப்பதால், இவற்றை அதிகளவு எடுத்துக் கொள்வது உடல் எடை அதிகரிப்பு மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கலாம். மேலும், சிலருக்கு தேன் உட்கொள்வது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே அளவோடு உட்கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Curry Leaves Juice: முடி உதிர்வு முதல் எடை குறைப்பு வரை… அனைத்து பிரச்சனைக்கும் இந்த ஒரு ஜூஸ் போதும்!!

Image Source: Freepik

Read Next

யூரிக் அமிலத்தைக் குறைத்து கீல்வாதத்தைத் தடுக்கும் சூப்பர் காலை உணவுகள் இதோ!

Disclaimer