$
Foods That May Help Reduce Uric Acid Levels And Prevent Gout: இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய பாதிப்பு உள்ளிட்ட பலதரப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவ்வாறே உடலில் யூரிக் அமிலம் சமநிலையில் இருக்கும் போது உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது கீல்வாதம் போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
இந்நிலையில் யூரிக் அமிலத்தைக் குறைக்க அதற்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வது ஓரளவு நிவாரணத்தை அளிக்கும். ஒருவருக்கு சாதாரண யூரிக் அமிலத்தை விட அளவு அதிகமாக இருந்தால், அதைக் குறைக்க சில எளிதான வீட்டு வைத்தியங்களைக் கையாள்வது, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது உள்ளிட்டவற்றை செய்யலாம். இரத்தத்தில் அதிகப்படியான யூரிக் அமிலம் இருப்பது, கீல்வாதத்தைத் தவிர சிறுநீரகக் கற்கள் உள்ளிட்ட பல்வேறு நோய் அபாயங்களை ஏற்படுத்துகிறது. இதில் யூரிக் அமிலத்தைக் குறைக்கவும், கீல்வாதத்தைத் தடுக்கவும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Drink Water While Eating: சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
யூரிக் அமிலம் அதிகமானால் என்ன ஆகும்?
உணவுகள் மற்றும் பானங்களில் உள்ள ப்யூரின்களை உடல் உடைக்கும் போது, உடலில் யூரிக் அமிலம் உருவாகிறது. இதை சிறுநீரகங்கள் வெளியேற்றுகின்றன. ஆனால், யூரிக் அமிலம் அதிகமாகும் போது அவை இரத்தத்தில் தங்கி ஹைப்பர்யூரிசிமியா என்ற நிலையை உண்டாக்குகிறது. இந்த அதிகப்படியான யூரிக் அமிலம் படிகங்களை உருவாகி, மூட்டுகளில் குடியேறி மூட்டுவலியின் ஒருவடிவமான கீல்வாதத்தை ஏற்படுத்துகிறது.
இரவில் மூட்டுகளில், அதிலும் குறிப்பாக பெருவிரலில் ஏற்படும் கடுமையான வலி கீல்வாதத்தின் அறிகுறியாகும். சற்றே அதிகமான யூரிக் அமிலங்கள் எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. ஆனால், காலப்போக்கில் இவை உடலில் வலி மற்றும் பிற சேதங்களை ஏற்படுத்தலாம். இவ்வாறு உடலில் ஹைப்பர்யூரிசிமியா ஏற்படுவது மூட்டுகள், எலும்புகள், தசைநார்கள் போன்றவற்றை சேதப்படுத்துகிறது.

யூரிக் அமில உற்பத்தியை எவ்வாறு குறைக்கலாம்?
அதிக யூரிக் அமிலம் உற்பத்தியாவதை, சில வாழ்க்கை முறை மாற்றங்களுடன் நிர்வகிக்கலாம். அதாவது அதிக தண்ணீர் அருந்துவது, உணவில் சில மாற்றங்களைச் செய்வது உள்ளிட்டவற்றின் மூலம் யூரிக் அமில உற்பத்தியைக் குறைக்க முடியும். இது தவிர, சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் போன்றவற்றைக் கையாள வேண்டும்.
வாழைப்பழங்கள்
அதிக யூரிக் அமிலம் காரணமாக, கீல்வாதத்தை உருவானால் இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தை குறைக்க வாழைப்பழத்தை உட்கொள்ளலாம். இவை கீல்வாத தாக்குதல்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வாழைப்பழங்களில் ப்யூரின் இயற்கையாகவே மிகக் குறைவாக இருப்பதால், யூரிக் அமில சிகிச்சைக்கு இது ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.
செர்ரி பழங்கள்
யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் உணவுப்பட்டியலில் செர்ரிகள் உதவுகிறது. செர்ரிகள் எவ்வாறு யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தும் என நினைக்கிறீர்களா? இதற்கு செர்ரிகளில் உள்ள அந்தோசயினின்கள் எனப்படும் இயற்கையான அழற்சி எதிர்ப்பு கூறு இருப்பதே காரணமாகும். இவை யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தி கீல்வாதத்தைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: 40 வயதைக் கடந்தும் எலும்பு இரும்பு போல இருக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்!
சிட்ரஸ் பழங்கள்
சில வகையான சிட்ரஸ் பழங்களின் உதவியுடன் நம் உடலில் அதிகம் உற்பத்தியான யூரிக் அமிலத்தைக் குறைக்கலாம். அதன் படி, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களானது வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலத்தின் வளமான மூலமாகக் கருதப்படுகிறது. எனவே இந்த வகை பழ வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் உள்ள யூரிக் அமில அளவை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும். மேலும் இவை அதிகப்படியான யூரிக் அமிலத்தை திறம்பட வெளியேற்ற உதவுகிறது.
செம்பருத்தி
அதிக யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் சிறந்த மூலிகைகளில் ஒன்றாக செம்பருத்தி அமைகிறது. எனவே உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதற்கு செம்பருத்தி தேநீர் சிறந்த தேர்வாகும். இது யூரிக் அமில அளவைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை குடிப்பதற்கு முன்னதாக 5 நிமிடங்கள் சூடான நீரில் செம்பருத்தியை மூழ்கச் செய்து பின்னர் குடிக்க வேண்டும்.

கொத்தமல்லி
கொத்தமல்லி பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த சிறந்த உணவுப்பொருளாகும். மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்புப் பண்புகள் போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. மேலும், கொத்தமல்லியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை கீல்வாதத்துடன் தொடர்புடையதாகும். இவை வீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
கிரீன் டீ
கிரீன் டீ அருந்துவது உடல் எடையை குறைக்க மட்டுமல்லாமல், உடலில் யூரிக் அமில உற்பத்தியைக் குறைக்கவும் உதவுகிறது என பல்வேறு ஆய்வுகளில் கூறப்படுகிறது. எனவே கிரீன் டீ ஆனது கீல்வாதத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அல்லது இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த பானமாக அமைகிறது.
இது போன்ற உணவுமுறைகளைக் கையாள்வதன் மூலம் உடலில் ஏற்படும் அதிகப்படியான யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தி, வீக்கத்தைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த ரீசனுக்காக நீங்க கண்டிப்பா குளிர்பானங்களைத் தவிர்க்கணும்!
Image Source: Freepik