Which food increase uric acid in your body: யூரிக் அமிலம் என்பது பியூரின்கள் என்ற ரசாயனங்கள் உடைந்து, இரத்தத்தில் கழிவாக வெளியேறக் கூடிய ஒரு பொருளாகும். இந்நிலையில், உடலில் யூரிக் அமிலம் இயற்கையாகவே அதிகமாக இருப்பின், சிறுநீரகக் கற்கள், மூட்டு வலி மற்றும் கீல்வாதம் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, யூரிக் அமிலத்தைக் குறைப்பதற்கு சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு முறையைக் கையாள்வது அவசியமாகும். ஏனெனில், பல வீடுகளில் உணவு என்பது வெறும் சுவையைப் பற்றியது மட்டும் என நினைக்கின்றனர்.
உண்மையில், நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுகள் ஊட்டச்சத்துக்களை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால் சில நேரங்களில், நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் உடலில் யூரிக் அமில அளவை அமைதியாக உயர்த்தக்கூடும். ஆம். ஏனெனில் இது போன்ற உணவுகளில் அதிக யூரிக் அமிலம் இருக்கலாம். எனவே இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதில் அதிகளவிலான யூரிக் அமிலத்தைத் தவிர்ப்பதற்கு, நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள் சிலவற்றைக் காணலாம்.
யூரிக் அமில அளவை அதிகரிக்கக்கூடிய உணவுகளும், அதற்கான மாற்றுகளும்
கீரை
கீரை உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியதாகும். ஆனால், இதில் அதிகளவிலான ஆக்சலேட்டுகள் மற்றும் பியூரின்கள் உள்ளன. இந்நிலையில், இதை அதிகளவு உட்கொள்வதால் யூரிக் அமிலம் அதிகமாகலாம். எனவே அதிக யூரிக் அமிலம் உள்ளவர்கள் கீரையை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்காது.
இந்த பதிவும் உதவலாம்: யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் குடிக்கலாமா.? நிபுணர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்..
மாற்று உணவுகள்
வெந்தய இலைகள் சமமாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், செரிமானம் அடைய எளிதாகவும் மற்றும் குறைந்த பியூரின்கள் கொண்டதாகவும் இருக்கும். மேலும் இவை கூடுதல் ஆபத்து இல்லாமல் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் மற்றும் புத்துணர்ச்சியைத் தருகிறது.
காலிஃபிளவர்
காலிஃபிளவர் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருப்பினும், இது சிலுவை குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இதில் மிதமான அளவில் பியூரின்கள் அதிகமாக உள்ளது. இதை தினமும் சாப்பிடுவதால், அதிலும் குறிப்பாக பெரிய அளவில் சாப்பிடுவது யூரிக் அமில அளவை அதிகரிக்க பங்களிக்கலாம்.
மாற்று உணவுகள்
காலிஃபிளவருக்கு மாற்றாக சுரைக்காய் போன்ற குளிர்விக்கும், நச்சு நீக்கும் பண்புகளுடன் கூடிய காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த காய்கறிகளில் குறைந்த அளவிலான பியூரின்கள் உள்ளது. இவை உடலுக்கு நீரேற்றத்தை வழங்குவதுடன், யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
துவரம் பருப்பு
பருப்பில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஏனெனில் மசூர் பருப்பு, துவரம்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போன்ற சில பருப்பு வகைகளில் மிதமான முதல் அதிக அளவு பியூரின்கள் காணப்படுகிறது. இவை யூரிக் அமிலமாக உடையும் கலவைகளாகும். இந்த பருப்பைத் தொடர்ந்து அதிகளவில் உட்கொள்வது யூரிக் அமிலத்தை பாதிக்கலாம்.
மாற்று உணவுகள்
பச்சைப் பயறு அல்லது பாசிப்பருப்பு ஒரு இலகுவான, குறைந்த பியூரின் கொண்ட உணவாகும். இது வயிற்றுக்கு எளிமையானதாகவும், நல்ல புரதத்தை வழங்கக்கூடியதாகவும் அமைகிறது. முளைத்த பாசிப்பருப்பு கூடுதல் நன்மைகளைத் தருகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துவதாகவும், குறைவான அமிலத்தன்மை கொண்டதாகவும் அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஹை யூரிக் அமிலத்தின் காரணமாக உங்க உடலில் இந்த மாற்றங்கள் எல்லாம் ஏற்படும்
காளான்கள்
காளான்கள் பல வழிகளில் ஆரோக்கியமான உணவாகக் கருதப்பட்டாலும், இவை பியூரின் நிறைந்த சேர்மங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக காரமான குழம்புகளில் சமைக்கும்போது அல்லது அடிக்கடி உட்கொள்ளும்போது யூரிக் அமிலத்தை அதிகரிக்கலாம்.
மாற்று உணவுகள்
டோன் செய்யப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீர், மிதமாக சாப்பிடும்போது, குறைந்த பியூரின் உள்ளடக்கத்துடனான புரதத்தை வழங்குகிறது. தாவர அடிப்படையிலான மற்றும் உடலுக்கு இலகுவான மென்மையான டோஃபுவைத் தேர்ந்தெடுக்கலாம்.
இனிப்பு பானங்கள்
பெரும்பாலான இனிப்பு பானங்கள், அதிலும் குறிப்பாக பிரக்டோஸ், குளுக்கோஸ் சிரப் அல்லது செயற்கை இனிப்புகள் கொண்டதாகும். இவை யூரிக் அமில அளவை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதில் பிரக்டோஸ் உடலில் உடைந்து யூரிக் அமில உற்பத்தியை அதிகரிக்கிறது.
மாற்று உணவுகள்
சீரக நீர், தேங்காய் தண்ணீர் அல்லது துளசி அல்லது புதினா கலந்த நீர் போன்றவை உடலுக்குப் புத்துணர்ச்சியூட்டுவதுடன், நச்சுக்களை வெளியேற்றி, இயற்கையாகவே யூரிக் அமில சமநிலையை பராமரிக்கிறது. மேலும், இந்த பாரம்பரிய பானங்கள் சிறுநீரகங்களுக்கு மென்மையானவையாகும். இவை அனைத்து பருவங்களிலும் நீரேற்றம் அளிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: யூரிக் ஆசிட் குறைய... உடலை இப்படி ஒருமுறை டீடாக்ஸ் செய்து பாருங்கள்..!
Image Source: Freepik