இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். பொதுவாக, மனித இரத்தம் வெறும் சிவப்பு இரத்த அணுக்களால் மட்டுமல்லாமல், தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவும் வெள்ளை இரத்த அணுக்கள், பிளேட்லெட்டுகள் மற்றும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், நாம் தினமும் உட்கொள்ளக்கூடிய உணவில் சில நச்சுக் கழிவுகளும் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றாகவே யூரிக் அமிலம் அடங்குகிறது.
யூரிக் அமிலம் என்பது ஒரு வேதியியல் பொருள் ஆகும். இவை மனித உடலில் இருந்து சிறுநீர் வழியாக வெளியேற்றப்பட்டால், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இது மருத்துவ ரீதியாக, ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: யூரிக் அசிட்டைக் குறைத்து வலியிலிருந்து விடுபட விருப்பமா? இந்த 6 பொருட்கள் உங்களுக்கு உதவும்...!
இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரித்தால் என்னாகும்?
இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பதன் காரணமாக, நம் உடலில் ஒவ்வொன்றாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? முக்கியமாக, அதிக யூரிக் அமிலத்தின் காரணமாக மூட்டுகளில் வலி தோன்றத் தொடங்குகிறது. இது அப்படியே தொடர்வதால், மூட்டுகள் அல்லது பிற உறுப்புகளுக்கு சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
அதிலும் கவலைக்குரிய விஷயங்களில் ஒன்றாக, இவை நீரிழிவு நோய், இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. எனவே, யூரிக் அமிலத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது மிகவும் அவசியமாகும். இதற்கு, நாம் முதலில் சில உணவுகளிலிருந்து விலகி இருப்பது அவசியமாகக் கருதப்படுகிறது.
யூரிக் அமிலத்தில் தவிர்க்க வேண்டியவை
யூரிக் அமிலத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பின், முதலில் சில காய்கறிகளை உட்கொள்வதைத் தடுக்க வேண்டும். NHI அறிக்கையின்படி, கீரை, காலிஃபிளவர் மற்றும் பச்சை பட்டாணி போன்ற உணவுகளிலிருந்து விலகி இருப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இதில் அதிகளவு பியூரின் இருப்பதால் இவை உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கும் அபாயம் உண்டாகலாம்.
அதிக யூரிக் அமிலம் உள்ளவர்கள் காளான் சாப்பிடலாமா?
காளான்கள் அதிக அளவு புரதம் கொண்ட உணவு வகையாகும். எனவே ஏற்கனவே யூரிக் அமில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பின், இவற்றைத் தவிர்ப்பது நல்லது. உண்மையில், காளான்களை அன்றாட உணவில் சேர்க்கும்போது, உடல் அவற்றை செரிமானம் அடையச் செய்து பியூரினை நீக்குகிறது. ஆனால், இந்த பியூரின் எலும்புகளில் சேரத் தொடங்கி இடைவெளிகளை உருவாக்குகிறது. இது அவ்வப்போது வலியை ஏற்படுத்தக்கூடும்.
இந்நிலையில், புரதம் நிறைந்த மற்ற பொருள்களை அன்றாட உணவில் சேர்க்கும் போது வலி மோசமடையக்கூடும். எனவே அதிக யூரிக் அமிலம் அல்லது கீல்வாதம் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் காளான்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: யூரிக் ஆசிட்டைக் குறைக்கும் பச்சை பப்பாளி.. இப்படி எடுத்துக்கோங்க
காளான்களுக்கு பதிலாக வேறு என்ன சாப்பிடலாம்?
யூரிக் அமில பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் காளான்களுக்கு பதிலாக வேறு சில உணவுகளைத் தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- குறிப்பாக, இவர்கள் அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அதன் படி, ஓட்ஸ் கஞ்சி, ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடலாம்.
- கூடுதலாக, இந்த பிரச்சனைக்கு முளைத்த தானியங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.
தவிர்க்க வேண்டியவை
அதிக யூரிக் அமிலம் உள்ளவர்கள் முக்கியமாக, சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். ஏனெனில் இனிப்புகளில் உள்ள சர்க்கரை அளவு உடலில் அமில உற்பத்தியை அதிகரிக்கும். அதே சமயம், செயற்கை சர்க்கரை கொண்ட குளிர்பானங்களைத் தவிர்ப்பதும் அவசியமாகும். இவற்றைத் தவிர்ப்பதன் மூலம் யூரிக் அமில பிரச்சனையைக் கட்டுக்குள் வைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: யூரிக் அமிலத்தை கூண்டோடு அழிக்கும் சூப்பர் பானங்கள் இங்கே.!
Image Source: Freepik