Which pulses should not be eaten when uric acid increases: தற்போதைய காலகட்டத்தில், மக்களிடையே காணப்படும் மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்றாக யூரிக் அமிலப் பிரச்சனை மாறிவிட்டது. இந்த அதிகரித்த யூரிக் அமிலம் காரணமாக பல கடுமையான நோய்களின் அபாயமும் அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது. உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்க மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம் மற்றும் குறைவான தண்ணீர் குடிப்பது போன்றவையே காரணமாக அமைகிறது.
இந்த காரணிகளால் அதிகரிக்கக் கூடிய யூரிக் அமில அளவு காரணமாக மூட்டு வலி, இதய பிரச்சினைகள் மற்றும் சிறுநீரக நோய் போன்றவற்றின் அபாயமும் அதிகரிக்கலாம். எனவே உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தவர்கள் உணவுமுறையில் கவனமாக இருப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. எனவே இந்த சூழ்நிலையில், யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, சில பருப்பு வகைகளை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது எந்த பருப்பு வகைகளை உட்கொள்ளக்கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணரும் சுகாதார பயிற்சியாளருமான வர்னித் யாதவ் அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றிக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் இதோ...!
யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது சாப்பிடக்கூடாத பருப்பு வகைகள்
பீன்ஸ்
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, பீன்ஸ் அதிகளவு பியூரின்களைக் கொண்டதாகும். அதாவது 100 கிராம் பரிமாறலில் சுமார் 70-80 மி.கி பியூரின் காணப்படுகிறது. இந்நிலையில், உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும் போது, பீன்ஸ் உட்கொள்வதால் உடலில் யூரிக் அமிலத்தை மேலும் அதிகரிக்கலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக அமைகிறது. எனவே யூரிக் அமில அளவு அதிகமாக இருப்பவர்கள் பீன்ஸ் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
முக்கிய கட்டுரைகள்
பட்டாணி
அதிக யூரிக் அமில பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள், உணவில் பட்டாணி சேர்ப்பதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், மற்ற பருப்புகளை விட, பட்டாணியில் அதிக அளவிலான பியூரின்கள் காணப்படுகின்றன. 100 கிராம் பரிமாறலில் சுமார் 100 முதல் 120 மில்லிகிராம் பியூரின்கள் உள்ளது. இந்நிலையில் பட்டாணியை உட்கொள்வது உடலில் யூரிக் அமிலத்தை மேலும் அதிகரிக்கும். எனவே, அதிக அளவு உள்ள யூரிக் அமில பிரச்சனையைக் கொண்ட நபர்கள், பட்டாணி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.
கொண்டைக்கடலை
உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக இருக்கும் போது, கொண்டைக்கடலை உட்கொள்வதைத் தவிர்ப்பது அவசியமாகும். ஏனெனில், இது உடலில் யூரிக் அமிலம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கலாம். வேளாண்மை மற்றும் உணவு ஆராய்ச்சி இதழில் கூறியதாவது, “கொண்டைக்கடலையில் அதிகளவு பியூரின்கள் உள்ளன. அதாவது 100 கிராமுக்கு சுமார் 50-60 மி.கி உள்ளது.
இது உடலில் நுழைந்த பிறகு யூரிக் அமிலமாக உடைந்து பிரச்சினைகளை மோசமாக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது. எனவே கொண்டைக்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், உடலில் அதிக யூரிக் அமிலம் இருக்கும் போது இதை சாப்பிடுவதைக் குறைக்கப்படுவது மிகவும் முக்கியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவை இயற்கையான முறையில் குறைப்பது எப்படி? - ஈசியான டிப்ஸ்!
யூரிக் அமிலம் கலந்த பருப்பு வகைகளை ஏன் தவிர்க்க வேண்டும்?
ஊட்டச்சத்து நிபுணர் மற்றும்சுகாதார பயிற்சியாளர் வர்ணித் யாதவ் அவர்கள் கூற்றின் படி, யாதவ்கொண்டைக்கடலை, பீன்ஸ் மற்றும் பட்டாணி போன்ற பருப்பு வகைகளில் அதிக அளவிலான பியூரின்கள் உள்ளது. இது உடலில் யூரிக் அமிலமாக மாற்றப்படுகிறது என்று அவர் கூறினார். இந்நிலையில், அதிகளவு பியூரின் உள்ள உணவுகளை சாப்பிடுவது உடலில் யூரிக் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இது ஹைப்பர்யூரிசிமியா பிரச்சனையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே இந்தப் பருப்பு வகைகளைத் தவிர, உங்கள் உணவில் பயறு வகைகள், பாசிப்பயறு போன்ற பருப்பு வகைகளையும் குறைக்க வேண்டும். ஏனெனில், இவையும் பியூரின்கள் கொண்டவையாகும். இவை யூரிக் அமில அளவை அதிகரிக்கச் செய்யலாம்.
முடிவு
பருப்பு வகைகள் அன்றாட உணவில் ஒரு முக்கிய பகுதியாக இருந்தாலும், உடலில் அதிக யூரிக் அமில பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் இந்த பருப்பு வகைகளை உட்கொள்வதைத் தவிர்ப்பது அவசியமாகும். அதே சமயம், குறைந்த பியூரின் உள்ளடக்கம் கொண்ட பருப்பு வகைகளை உங்கள் உணவில் சேர்க்க முயற்சிக்கலாம். இது தவிர, யூரிக் அமிலம் அதிகரிப்பதைத் தடுக்கவும் குறைக்கவும் மருத்துவரை அணுகி, அவர் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். மேலும், யூரிக் அமிலத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: கொளுத்தும் வெயிலில் யூரிக் ஆசிட் பிரச்சனையா? சட்டென குறைக்க இந்த பழங்கள் சாப்பிட மறந்திடாதீங்க
Image Source: Freepik