கொளுத்தும் வெயிலில் யூரிக் ஆசிட் பிரச்சனையா? சட்டென குறைக்க இந்த பழங்கள் சாப்பிட மறந்திடாதீங்க

Summer fruits to naturally reduce high uric acid levels: உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதன் காரணமாக மூட்டு வலி, வீக்கம் போன்ற பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். கோடைக்காலத்தில் உடலில் யூரிக் அமில அளவைக் குறைப்பதற்கு சில ஆரோக்கியமான பழங்கள் உதவுகிறது. இதில் யூரிக் அமில அளவைக் குறைக்க கோடை வெப்பத்தில் சாப்பிட வேண்டிய பழங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
கொளுத்தும் வெயிலில் யூரிக் ஆசிட் பிரச்சனையா? சட்டென குறைக்க இந்த பழங்கள் சாப்பிட மறந்திடாதீங்க

Summer fruits that naturally lower uric acid in the body: கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக மற்றும் புத்துணர்ச்சியாக வைப்பது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை யூரிக் அமில அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும். உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் சிறுநீரகக் கற்கள், சிறுநீரக பாதிப்பு மற்றும் கீல்வாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. யூரிக் அமிலம் என்பது பியூரின்கள் என்ற ஒரு வகை வேதிப்பொருள் உடலுக்குள் உடைந்து உருவாகும் ஒரு கழிவுப் பொருள் ஆகும். இது சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படக்கூடியதாகும்.

ஆனால், அதிகளவு யூரிக் அமிலம் வெளியேற முடியாமல் உடலின் இரத்தத்தில் சேரும்போது அது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். இவை மூட்டுகளில் படிந்து வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த நிலை கீல்வாதம் என்றும் அழைக்கப்படுகிறது. எனினும், சரியான மருந்து மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் உதவியுடன் யூரிக் அமில அளவை நிர்வகிக்க முடியும். உடலில் ஏற்படும் அதிகளவு யூரிக் அமிலத்தை இயற்கையாகவே குறைக்க சில அத்தியாவசிய ஊட்டச்சத்து பண்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பழங்கள் உதவுகிறது. இதில் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் பழங்கள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: யூரிக் அமிலத்தை குறைக்க வெற்றிலையை இப்படி யூஸ் பண்ணுங்க..

யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் பழங்கள்

தர்பூசணி

கோடைக்காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இது ஒரு இயற்கையான டையூரிடிக் மூலமாக செயல்படுகிறது. இவை உடலிலிருந்து நச்சுகள் மற்றும் அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது. மேலும், தர்பூசணி அதிகளவிலான நீர்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். எனவே இது உடலில் நீரிழப்பைத் தவிர்த்து, நீரேற்றமாக இருக்க உதவுகிறது. தர்பூசணி இது உடலில் உள்ள pH அளவை இயற்கையாகவே சமப்படுத்தன் மூலம், அதன் கார தன்மை மூட்டுகளில் யூரிக் அமில படிகமாக்கலின் அபாயத்தைக் குறைக்கிறது.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களில் அதிகளவிலான வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலில் யூரிக் அமில அளவை இயற்கையாகவே குறைக்க உதவுகிறது. இது இரத்தம் மற்றும் பிற திரவங்களின் pH அளவை சற்று அதிகரிக்க உதவுகிறது. மேலும், எலுமிச்சை சாறு சிறுநீரை அதிக காரத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது. இது அதிக கால்சியம் கார்பனேட்டை வெளியிட உதவுகிறது. அடிப்படையில், கால்சியம் தாதுக்கள் யூரிக் அமிலத்துடன் பிணைக்கப்பட்டு நீர் மற்றும் பிற சேர்மங்களாக உடைக்கப்படுகிறது. இது இரத்தத்தை அமிலத்தன்மை குறைவாக மாற்றவும், உடலில் யூரிக் அமில அளவைக் குறைக்கவும் உதவுகிறது

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் அதிகளவு நீர்ச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது சிறுநீர் வழியாக உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதில் புரோமெலைன் என்ற புரோட்டியோலிடிக் நொதி காணப்படுகிறது. இது புரத முறிவை ஊக்குவிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் அன்னாசிப்பழத்தில் யூரிக் அமிலத்தை சமநிலைப்படுத்த உதவும் இயற்கை சர்க்கரைகள் நிறைந்துள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும் காலை உணவுகள் இதோ... தேநீர் கூட இதை குடிங்க!

பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள் மற்றும் செரிமான நொதிகள் நிறைந்துள்ளது. குறிப்பாக, இதில் பப்பேன் நொதிகள் நிறைந்துள்ளன. இது வீக்கத்தைக் குறைக்கவும், குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன. இதில் உள்ள வைட்டமின் சி யூரிக் அமிலத்தை கரையக்கூடிய வடிவங்களாக மாற்ற உதவுகிறது. இது உடல் சிறுநீர் மூலம் அதை வெளியேற்ற ஏதுவாக அமைகிறது. மேலும், பப்பாளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள அதிகப்படியான அமிலங்களை நடுநிலையாக்க உதவுகிறது.

செர்ரி பழங்கள்

செர்ரிகளில் அந்தோசயினின்கள் நிறைந்திருப்பதால், இவை யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும், இவை ஆக்ஸிஜனேற்றிகளின் சக்தி வாய்ந்தவை என்றும் அழைக்கப்படுகிறது. அந்தோசயினின்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது இயற்கையான அழற்சி எதிர்ப்பு சக்தியாக செயல்பட்டு கீல்வாத வெடிப்புகளின் அதிர்வெண்ணைக் குறைக்க உதவுகிறது.

இவை அனைத்தும் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் பழங்களாகும். எனவே, இயற்கையாகவே யூரிக் அமில அளவைக் குறைக்க, இந்த கோடைக்கால பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இது எப்போதும் நீரேற்றமாக இருக்க உதவுவதுடன், யூரிக் அமிலத்தையும் கட்டுப்படுத்துகிறது. அதே சமயம், பியூரின் நிறைந்த உணவுகளை கட்டுப்படுத்துவது அவசியமாகும். மேலும், உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் ஒரு மருத்துவ நிபுணரை அணுகுவது மிகவும் அவசியமாகும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க இந்த ஆயுர்வேத பானங்கள் உதவலாம்..

Image Source: Freepik

Read Next

காலையில் வெறும் வயிற்றில் ஏன் லெமன் வாட்டர் குடிக்கணும் தெரியுமா? உங்களுக்குத் தெரியாத நன்மைகள் இதோ

Disclaimer