காலையில் வெறும் வயிற்றில் ஏன் லெமன் வாட்டர் குடிக்கணும் தெரியுமா? உங்களுக்குத் தெரியாத நன்மைகள் இதோ

Why you should drink lemon water every morning on an empty stomach: தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால், பலருக்கும் இதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிவதில்லை. இது குறித்து நிபுணர் ஒருவர் காலை வெறும் வயிற்றில் லெமன் வாட்டர் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி விளக்கியுள்ளார். அதைப் பற்றி காண்போம்.
  • SHARE
  • FOLLOW
காலையில் வெறும் வயிற்றில் ஏன் லெமன் வாட்டர் குடிக்கணும் தெரியுமா? உங்களுக்குத் தெரியாத நன்மைகள் இதோ


Health benefits of drinking lemon water in morning empty stomach: அன்றாட வாழ்வில் தினமும் காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளும், செய்யக்கூடிய பழக்க வழக்கங்களும் அன்றைய தினத்தை நல்வழியில் எடுத்துச் செல்ல உதவுகிறது. எனவே தான் காலை நேரம் மிகவும் முக்கியமான காலமாகக் கருதப்படுகிறது. அதன் படி, தினமும் காலை நேரத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுமுறை மற்றும் பழக்க வழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

பொதுவாக எலுமிச்சை அமிலத்தன்மை கொண்டதாக இருப்பதால், பெரும்பாலானோர் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இதை அருந்துவதில் தயக்கம் கொள்கின்றனர். ஆனால், இந்த எளிய மற்றும் மிகச்சிறந்த பானம் உடலுக்குப் பலவிதமான நன்மைகளைத் தருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அவ்வாறு ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகேர்ஜி அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பதிவில், தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து விவரித்துள்ளார். அது பற்றி இதில் தெளிவாகக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Hot Lemon Water: இரவு படுக்கைக்கு முன் வெந்நீரில் லெமன் கலந்து குடிப்பது நல்லதா.?

வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

அஞ்சலி முகேர்ஜி அவர்களின் தனது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்ட படி,”காலையில் எலுமிச்சை நீர் அருந்துவது சக்திவாய்ந்த நன்மைகளைக் கொண்ட ஒரு எளிய பழக்கம்” என்று கூறியுள்ளார்.

உடலை காரமாக்குகிறது

எலுமிச்சை அமிலத்தன்மை நிறைந்த பழமாக இருப்பினும், இவை உடலின் pH அளவை சமப்படுத்த உதவுகின்றன. இது உடலில் ஏற்படும் அமிலத்தை மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

கல்லீரல் நச்சுத்தன்மையை ஆதரிக்கிறது

எலுமிச்சை நீர் அருந்துவது உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. சிறந்த செரிமானத்திற்காக, நொதி உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

இரும்பு உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது

எலுமிச்சை வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இவை தாவர அடிப்படையிலான உணவுகளிலிருந்து இரும்பை உறிஞ்சி, குறைபாடுகளைத் தடுக்கிறது.

உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துகிறது

எலுமிச்சையில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் நீரேற்றம் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும், உடலில் ஏற்படும் தசைப்பிடிப்புகளைத் தடுக்க வழிவகுக்கிறது.

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது

எலுமிச்சையில் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இவை கொலாஜன் தொகுப்பை ஆதரிக்க உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான சருமம், முடி மற்றும் மூட்டுகளை ஊக்குவிக்கிறது.

இவ்வாறு காலையில் எழுந்ததும் எலுமிச்சை நீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து அஞ்சலி முகேர்ஜி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் எப்படி குடிக்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது,”அறை வெப்பநிலையிலோ அல்லது வெதுவெதுப்பான நீரிலோ ஒரு சில துளிகள் எலுமிச்சையைச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் தொடங்கலாம், பின்னர் படிப்படியாக அதை ½ டீஸ்பூன் ஆகவும், இறுதியில் உங்கள் உடல் சரிசெய்யும்போது 1 டீஸ்பூன் ஆகவும் அதிகரிக்கலாம். இது காலப்போக்கில் அதை மேலும் செறிவூட்டுகிறது, அதன் நச்சு நீக்கும் விளைவுகளை அதிகரிக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Lemon Water Benefits: குளிர்காலத்தில் எலுமிச்சை நீர் குடிப்பதன் நன்மைகள்.!

இது தவிர, இன்னும் பிற உடல் ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். அது குறித்து விரிவாகக் காணலாம்.

செரிமான அமைப்பை மேம்படுத்துவதற்கு

எலுமிச்சையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. மேலும், எலுமிச்சை நீரில் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனவே இது சுவாச நோய்களை குறைக்க உதவுகிறது. வாரம் முழுவதும் எலுமிச்சை நீரை உட்கொள்வது வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகிறது.

குறைந்த மன அழுத்தம்

எலுமிச்சை தண்ணீர் அருந்துவது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. எலுமிச்சை நீரைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இந்த மாற்றத்தை உணரலாம். இது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. இதற்கு இதில் உள்ள பொட்டாசியம் ஊட்டச்சத்துக்களே காரணமாகும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த

எலுமிச்சை நீரை அருந்துவது பிபியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை அருந்துவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை உட்கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

இது போன்ற ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறுவதற்கு வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் அருந்தலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Lemon Water: வெயில் காலத்தில் ஏன் தினமும் ஒரு கிளாஸ் லெமன் வாட்டர் குடிக்கணும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

இயற்கையாகவே மலம் வெளியேறி வயிறு காலியாக டாக்டர் சொன்ன இந்த 5 ட்ரிங்ஸ்ல ஒன்னு குடிங்க போதும்

Disclaimer