What happens if you drink black coffee on an empty stomach: அன்றாட வாழ்வில் தினமும் காலையில் காபி, டீ, பால் போன்றவற்றை குடிப்பதை மக்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இது தவிர, சிலர் உடல் ஆரோக்கியத்திற்காக கருப்பு காபி அருந்துவர். இது உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருவதாக பலரும் கருதுகின்றனர். ஆனால், இது ஏராளமான உடல்நல பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. உண்மையில், கருப்பு காபி குடிப்பது பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், வெறும் வயிற்றில் அதைக் குடிப்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஏனெனில், இதை வெறும் வயிற்றில் அருந்துவது வயிற்றின் உட்புற புறணியில் பாதிப்பை ஏற்படுத்தி புண், எரிச்சல் உணர்வுக்கு வழிவகுக்கிறது.
வெறும் வயிற்றில் கருப்பு காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தினமும் வெறும் வயிற்றில் கருப்பு காபி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
வளர்ச்சிதை மாற்ற மேம்பாட்டிற்கு
கருப்பு காபியில் காணப்படும் ஒரு இயற்கை தூண்டுதலான காஃபின் உள்ளதால், இது கொழுப்புகளை எரித்து, வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. எனவே இது ஒருவருக்கு ஆற்றல் ஊக்கத்தை அளித்து, உடல் செயல்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டவும், வெப்பத்தை உருவாக்க கலோரிகளை எரிக்கும் செயல்முறையான தெர்மோஜெனீசிஸை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Black Coffee Benefits: பிளாக் காபி குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
நல்ல செரிமானத்திற்கு
கருப்பு காபி செரிமானத்தை மேம்படுத்துவதோடு நேரடி தொடர்புடையதாகும். சில இந்த காபியை செரிமான அமைப்புக்கு ஒரு மென்மையான தூண்டுதலாகக் கருதுகின்றனர். இவை குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும், வீக்கத்தைத் தவிர்க்கவும் உதவுகிறது.
செறிவு, மனத்தெளிவை மேம்படுத்த
கருப்பு காபியில் நிறைந்துள்ள காஃபின் மத்திய நரம்பு மண்டலத்தை உற்சாகப்படுத்துகிறது. இது செறிவு மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது. இதை வெறும் வயிற்றில் உட்கொள்வது உடலுக்கு சாதகமாக அமைகிறது. மேலும் இது ஆற்றலை மேம்படுத்தி காலை வேலைகள் சீராகவும் வேகமாகவும் நடக்க உதவுகிறது.
வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
இது போன்ற நன்மைகள் இருப்பினும், தினமும் வெறும் வயிற்றில் காபி குடிப்பது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது பற்றி இதில் காண்போம்.
தீவிர நீரிழப்பு
காபி ஒரு லேசான டையூரிடிக் மருந்தாக செயல்படுவதால், இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. பொதுவாக தூக்கத்திற்குப் பிறகு உடல் ஏற்கனவே சற்று நீரிழப்புடன் இருக்கும். இந்நிலையில், வெறும் வயிற்றில் இதை உட்கொள்வதால் உடலில் நீரிழப்பு அதிகரிக்கலாம். இதன் காரணமாக, தலைவலி, சோர்வு மற்றும் அறிவாற்றல் செயல்பாடு குறைதல் போன்றவை ஏற்படும். ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சரியான நீரேற்றம் மிகவும் அவசியமாகும்.
அதிகரித்த அமில ரிஃப்ளக்ஸ்
வெறும் வயிற்றில் கருப்பு காபி குடிப்பது அமில ரிஃப்ளக்ஸை ஏற்படுத்தலாம். இது வயிற்று அமில உற்பத்தியைத் தூண்டுகிறது. மேலும், இந்த அமிலத்தைத் தடுக்க உணவு இல்லாமல், அது உணவுக்குழாயில் எளிதாக மீண்டும் எழுந்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். குறிப்பாக, ஏற்கனவே இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயால் (GERD) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் சிக்கலானது.
இந்த பதிவும் உதவலாம்: Black Coffee for Weight Loss: தினமும் ஒரு டம்ளர் பிளாக் காபி! தொப்பைக் கொழுப்பு முழுவதும் காலி!
குறைந்த இரத்த சர்க்கரை
கருப்பு காபி குடிப்பது தற்காலிகமாக ஆற்றலை அதிகரிக்கும் அதே வேளையில், வெறும் வயிற்றில் இதை உட்கொள்வதால் ஆரம்ப காஃபின் விளைவு குறைந்தவுடன் இரத்த சர்க்கரை அளவுகளில் விரைவான குறைவை ஏற்படுத்தும். இதனால் எரிச்சல், சோர்வு போன்றவை ஏற்படலாம். குறிப்பாக, நீரிழிவு அல்லது இரத்தச் சர்க்கரைக் குறைவாக உள்ளவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
செரிமான பிரச்சினைகள்
சிலருக்கு வெறும் வயிற்றில் கருப்பு காபி குடிப்பதால், வயிற்றுப் புறணி எரிச்சலடைந்து, வீக்கம், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு செரிமானப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே சமயம், காபியின் அமிலத்தன்மையிலிருந்து வயிற்றைப் பாதுகாக்க உணவு இல்லாததால், இந்த அறிகுறிகள் மேலும் மோசமடையலாம். குறிப்பாக, ஏற்கனவே செரிமான உணர்திறன் உள்ளவர்களுக்கு இது பிரச்சனையை ஏற்படுத்தும்.
ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் பிரச்சனை
சில ஆராய்ச்சிகளில் காபி அருந்துவது சில ஊட்டச்சத்துக்களை, குறிப்பாக இரும்பு மற்றும் கால்சியம் உறிஞ்சுவதில் தலையிடக்கூடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வெறும் வயிற்றில் குடிப்பது இந்த விளைவை அதிகரிக்கக்கூடும். நாளடைவில், இது உடலில் அத்தியாவசிய தாதுக்களின் குறைபாடுகளுக்கு வழிவகுக்கிறது. எனவே சரியான ஊட்டச்சத்து உட்கொள்ளலுக்கு சமச்சீர் உணவுடன், கவனத்துடன் காபி அருந்துவது மிகவும் முக்கியமாகும்.
பதட்டம் ஏற்படுவது
காபியில் காணப்படும் காஃபின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. வெறும் வயிற்றில் இந்த விளைவு அதிகரிக்கக் கூடும் என்பதால், பதட்டம், நடுக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. காஃபினை உறிஞ்சுவதற்கு உணவு இல்லாததன் காரணமாக, இரத்தத்தில் காஃபின் அளவுகள் மிகவும் தீவிரமாக, விரைவாக அதிகரிக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Black coffee benefits: காலையில் எழுந்ததும் பிளாக் காபி குடிப்பதால் உடலுக்கு என்னாகும் தெரியுமா?
Image Source: Freepik