Black Coffee Benefits For Weight Loss: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக உடல் பருமனும் அடங்கும். இதனால், எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், இந்த எடையிழப்பு பயிற்சி மிகவும் கடினமானதாகும். உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக தங்கள் உணவைக் கண்காணிப்பது அவசியமாகும். இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
இந்நிலையில் உடல் எடையைக் குறைக்க உதவும் சிறந்த பானங்கள் பல்வேறு வகைகள் உள்ளது. இவை உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் ஒன்றாக உடல் எடை குறைய கருப்பு காபி ஒரு சிறந்த பானமாகும். இந்த கருப்பு காபி ஆனது வகை 2 நீரிழிவு, புற்றுநோய், கல்லீரல் நோய் மற்றும் பல நிலைமைகளின் அபாயங்களைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இதில் பிளாக் காபி எவ்வாறு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பது குறித்துக் காண்போம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Ghee for Weight Loss: நெய்யை இப்படி சாப்பிட்டு பாருங்க! சீக்கிரமா தொப்பையைக் குறைக்கலாம்
உடல் எடை குறைய பிளாக் காபியின் நன்மைகள்
குறைந்த கலோரி
கருப்பு காபி கிட்டத்தட்ட கலோரி இல்லாத பானமாகும். மேலும், இது சர்க்கரை பானங்கள் மற்றும் பிற உயர் கலோரி பானங்களுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது. எனவே அதிக கலோரி கொண்ட பானங்களை கருப்பு காபியுடன் மாற்றுவதன் மூலம், ஒட்டுமொத்த கலோரி அளவைக் குறைக்க முடியும். இவ்வாறு எடையிழப்புக்கு உதவுகிறது.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க
கருப்பு காபியில் காஃபின் உள்ளது. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்த உதவுகிறது. இவ்வாறு அதிக வளர்சிதை மாற்ற விகிதத்தில் இருக்கும்போது, உடல் ஓய்வு நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கிறது. இது எடை குறைப்பிற்கு வழிவகுக்கிறது.
உடல் செயல்திறனை மேம்படுத்த
உடற்பயிற்சிக்கு முன்பாக கருப்பு காபி குடிப்பது உடல் செயல்திறனை அதிகரிக்க உதவும். இதற்கு கருப்பு காபியில் உள்ள காஃபின் அட்ரினலின் அளவை அதிகரிப்பதே ஆகும். இது உடலை உடல் உழைப்புக்கு தயார்படுத்துகிறது. இது உடலை கடினமாக உழைக்கவும் அதிக கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது.
எடை மேலாண்மைக்கு
கருப்பு காபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தை எதிர்த்துப் போராடவும், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது. இவ்வாறு மறைமுகமாக எடை மேலாண்மை மற்றும் இழப்புக்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Loss Drink: ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடையைக் குறைக்கும் சூப்பர் ட்ரிங் இதோ!
பசியைக் கட்டுப்படுத்த
கருப்பு காபியில் உள்ள காஃபின் ஆனது பசியை அடக்கும் பொருளாக செயல்படுகிறது. இதில் கருப்பு காபி குடிக்கும் போது, பசி கட்டுப்படுத்தப்பட்டு அதிக கலோரி உட்கொள்ளலைத் தவிர்த்து, நாள் முழுவதும் குறைந்த கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையிழப்பில் ஈடுபடுகிறது.
கொழுப்பைத் தவிர்க்க
கறுப்பு காபியில் உள்ள காஃபின் நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. மேலும், கொழுப்பு செல்களை உடல் கொழுப்பை உடைக்க சமிக்ஞை செய்கிறது. இது பின்னர் இரத்த ஓட்டத்தில் வெளியிடப்பட்டு ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, உடற்பயிற்சியின் போது, கொழுப்பிழப்புக்கு உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த
கருப்பு காபியை வழக்கமாக உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. இவ்வாறு இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கும். நிலையான இரத்த சர்க்கரை அளவைக் கொண்டிருக்கும் போது, பசியைத் தடுக்கலாம். இவ்வாறு உடல் எடையிழப்புக்கு உதவுகிறது.
பிளாக் காபி உட்கொள்ளல் உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. மேலும் அல்சைமர் நோய், பார்கின்சன் நோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் காஃபின் ஒரு இயற்கையான தூண்டுதலாகும். இது நரம்பியல் கடத்தியான அடினோசின் செயல்பாட்டைத் தடுக்க உதவுகிறது. மேலும், தளர்வை அதிகரித்து, மூளையில் தூக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும், மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றை நீக்கி ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Loss Drinks: வெறும் ஏழே நாளில் தொப்பைக் கொழுப்பு கறைய இந்த ட்ரிங் குடிங்க!
Image Source: Freepik