Ghee for Weight Loss: நெய்யை இப்படி சாப்பிட்டு பாருங்க! சீக்கிரமா தொப்பையைக் குறைக்கலாம்

  • SHARE
  • FOLLOW
Ghee for Weight Loss: நெய்யை இப்படி சாப்பிட்டு பாருங்க! சீக்கிரமா தொப்பையைக் குறைக்கலாம்


How To Consume Ghee For Weight Loss: இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றனர். இந்த அதிகரித்த உடல் எடை பல பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இதற்கு பலரும் சந்தையில் கிடைக்கும் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் உடற்பயிற்சி, டயட் என பல முறைகளைக் கையாள்கின்றனர். அவ்வாறே சில உணவுப்பொருள்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

அவற்றில் ஒன்றாக நெய் அமைகிறது. பல நூற்றாண்டுகளாக இந்திய சமையலறைகளில் பிரதானமாகக் காணப்படுவது நெய் ஆகும். இது செழுமையான சுவையுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. நெய்யில் கொழுப்புச்சத்து நிறைந்துள்ளதால், இவை உடல் எடை இழப்புக்குப் பயன்படுத்த பலரும் யோசிப்பர். ஆனால், ஆரோக்கியமான உணவில் நெய்யைப் பயன்படுத்துவது எடை இழப்புக்கு உதவுகிறது. இதில் உடல் எடை குறைய நெய்யைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு வழிகள் மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Fiber Rich Foods: உங்க உடல் எடையை அசால்ட்டாக குறைக்க இந்த 5 உணவுகள் போதும்!

உடல் எடை குறைப்பில் நெய் தரும் ஆரோக்கிய நன்மைகள்

உடல் எடையைக் குறைப்பதற்கு நெய் பல்வேறு சிறந்த மற்றும் ஆரோக்கியமான நன்மைகளைத் தருகிறது. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

கொழுப்பை எரிக்க

நெய்யில் உள்ள லினோலிக் அமிலம் (CLA) ஆனது கொழுப்பை எரிப்பதை மேம்படுத்தும் ஒரு வகையான கொழுப்பு அமிலமாகும். ஆய்வு ஒன்றில் லினோலிக் அமிலமானது உடல் கொழுப்பைக் குறைக்கவும், எடை அதிகரிப்பைத் தடுக்கவும் உதவும் என கூறப்படுகிறது. இது கொழுப்பின் முறிவை அதிகரிப்பதற்கும், புதிய கொழுப்பு செல்கள் உருவாவதைத் தடுப்பதற்கும் உதவுகிறது. எனவே உணவில் நெய்யைச் சேர்ப்பது, அதிக கொழுப்பை எரிக்கவும், உடலில் உள்ள ஒட்டுமொத்த கொழுப்பின் சதவீதத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்திற்கு

எடை மேலாண்மைக்கு ஆரோக்கியமான செரிமான அமைப்பு மிகவும் முக்கியமாகும். மேலும் நெய் உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை பல வழிகளில் ஆதரிக்கிறது. நெய்யில் நிறைந்துள்ள ப்யூட்ரேட் ஒரு குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலமாகும். இவை குடலில் உள்ள செல்களை வளர்க்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஒரு ஆரோக்கியமான குடல் புறணி ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துவதுடன் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற எடை இழப்புக்கு இடையூறாக இருக்கும் செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. மேலும் நெய்யானது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துவதன் மூலம், உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்தவும் எடை இழப்பு முயற்சிகளை ஆதரிக்கவும் உதவுகிறது.

வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த

நெய்யில் உள்ள நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் உள்ளதால், இது விரைவாக உறிஞ்சப்பட்டு உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. இது நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்கள் போலல்லாமல், இந்த நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் ஆனது கொழுப்பாக சேமிக்கப்படும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் இது ஆற்றல் செலவை அதிகரிக்கிறது. மேலும், கலோரிகள் எரிப்பதை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் உடல் எடை இழப்பில் பெரிதும் பங்காற்றுகிறது. இது தவிர, நெய்யில் உள்ள ப்யூட்ரேட் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Juice: கஷ்டமே படாம உடல் எடையைக் குறைக்கணுமா? இந்த ஒரு ட்ரிங்க் குடிங்க போதும்!

பசியைக் கட்டுப்படுத்த

நெய் உட்கொள்வது வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், பசியைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உணவுடன் நெய்யை உட்கொள்வதன் மூலம் நீண்ட காலத்திற்கு திருப்தியாக இருப்பதை உணரலாம். நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மூளையில் முழுமையைக் குறிக்கும் ஹார்மோன்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது. எடை இழப்புக்கும் அவசியமான கலோரியை பற்றாக்குறையை பராமரிக்க நெய் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.

உணவில் நெய் எவ்வாறு சேர்க்கலாம்?

உணவில் சீரான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் நெய்யைச் சேர்த்துக் கொள்வது உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது.

உணவுகளில் சிறிதளவு சேர்ப்பது

சமைத்த அரிசி, காய்கறிகள், அல்லது குயொனோவா போன்றவற்றின் மீது கூடுதல் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்காக நெய்யைச் சேர்க்கலாம். மேலும், முழு தானிய டோஸ்டிலும், சூப்கள் போன்றவற்றிலும் நெய் பயன்படுத்தலாம்.

சமையல் எண்ணெயாகப் பயன்படுத்துவது

நெய் அதிக வெப்பநிலையில் சமைப்பதற்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. எனவே காய்கறிகள் அல்லது முட்டைகளை வறுத்தல் போன்ற உணவுப்பொருள்களில் நெய்யைப் பயன்படுத்தலாம். இதன் முழுமையான சுவை உணவுகளின் சுவையை அதிகரிக்கவும், உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Millet For Weight Loss: உடல் கொழுப்பை சட்டுனு கரைக்க தினையை இப்படி செஞ்சி சாப்பிடுங்க

பானங்களில் சேர்ப்பது

காபி அல்லது டீ போன்ற பானங்களில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அருந்துவது ஒரு பிரபலமான பானமாகக் கருதப்படுகிறது. இது உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்குவதுடன், மனநிறைவை ஊக்குவிக்கவும், நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

குறைவான உட்கொள்ளல்

உடல் ஆரோக்கியத்திற்கு நெய் பல்வேறு நன்மைகளை வழங்கினாலும், அதில் இன்னும் ஒரு வகையான கொழுப்பு நிறைந்திருக்கும். எனவே இதனை மிதமான அளவில் உட்கொள்வதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளல் மற்றும் உணவுத் தேவைகளைப் பொறுத்து, ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வரை எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு பல்வேறு நன்மைகளைத் தரக்கூடிய நெய் உட்கொள்வது எடை இழப்புக்கு ஒரு சுவையான மற்றும் பயனுள்ள வழியாகக் கருதப்படுகிறது. இது கொழுப்பை எரிக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், முழுமையான உணர்வை அளிக்கவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. எனினும், எந்தவொரு உணவுமுறை மாற்றத்தையும் பின்பற்றுவது போல, நெய்யை சீரான உணவின் ஒரு பகுதியாக மற்றும் மிதமாக உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். இவ்வாறு செய்வது உடல் எடை இழப்புக்கு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips: சட்டுனு உடல் எடையை குறைக்க பசு நெய்யை இப்படி சாப்பிடுங்க!!

Image Source: Freepik

Read Next

Fiber Rich Foods: உங்க உடல் எடையை அசால்ட்டாக குறைக்க இந்த 5 உணவுகள் போதும்!

Disclaimer

குறிச்சொற்கள்