Sourdough Bread: எடையை மாஸ் வேகத்தில் குறைக்கும் புளிப்பு ரொட்டி! எப்படினு பாருங்க

  • SHARE
  • FOLLOW
Sourdough Bread: எடையை மாஸ் வேகத்தில் குறைக்கும் புளிப்பு ரொட்டி! எப்படினு பாருங்க

பொதுவாக புளிப்பு ரொட்டியானது இயற்கையான நொதித்தல் செயல்முறை மூலம் ரொட்டி ஆகும். இந்த நொதித்தல் செயல்முறையில் காட்டு ஈஸ்ட் மற்றும் லாக்டிக் அமில பாக்டீரியாவைப் பயன்படுத்துகிறது. இவை இரண்டுமே வணிக ஈஸ்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் வழக்கமான ரொட்டியில் இருந்து தனித்து அமைகிறது. இவ்வாறு நொதித்தல் செயல்முறையின் மூலம் கிடைக்கும் ரொட்டி செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கவும், ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் உடல் எடையைக் குறைக்க புளிப்பு ரொட்டி எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Cortisol and Weight Loss: உடல் எடையிழப்புக்கு இது ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா?

புளிப்பு ரொட்டி நன்மைகள்

உடலில் குடல் நுண்ணுயிரிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ப்ரீபயாடிக்குகளை புளிப்பு ரொட்டி கொண்டுள்ளது. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் அமைகிறது. ஏனெனில், நொதித்தலின் போது உருவாகும் லாக்டிக் அமிலம் பசையம் மற்றும் பைடிக் அமிலத்தை உடைக்க உதவுகிறது. இதன் குறைந்த கிளைசெமிக் குறியீடுகள், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

எடையிழப்புக்கு புளிப்பு ரொட்டி எவ்வாறு உதவுகிறது?

குடல் ஆரோக்கியத்திற்கு

குடலின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது உண்மையில் உடல் எடை இழப்பு சிகிச்சையில் பெரிதும் உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் புளிப்பு ரொட்டியில் உள்ள ப்ரீபயாடிக்குகள் உதவுகிறது. இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது. ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகள் எடை மேலாண்மை மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. மேலும் ப்ரீபயாடிக்குகள் வீக்கத்தைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இவை இரண்டுமே எடையிழப்பில் பங்குவகிக்கிறது.

செரிமான ஆரோக்கியம்

புளிப்பு மாவில் உள்ள லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் பசையம், மாவுச்சத்துக்களை முன்கூட்டியே செரிமானம் அடைய உதவுகிறது. இது செரிமான அமைப்பை எளிதாக்குகிறது. உடலில் ஊட்டச்சத்துக்களை திறம்பட உறிஞ்சுவதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இவ்வாறு உடல் எடையிழப்பைப் பாதிக்கும் காரணிகளான வீக்கம் மற்றும் அசௌகரியத்தை தடுக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உணவை மென்று சாப்பிடுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியுமா?

பசியைக் கட்டுப்படுத்துவது

புளிப்பு ரொட்டி உட்கொள்வது மனநிறைவை அதிகரிக்கிறது. மேலும், இயற்கை நார்ச்சத்துக்கள் மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளின் கலவையானது நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம், சிற்றுண்டி உட்கொள்வதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. இதன் மூலம் உடலில் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது.

குறைந்த கிளைசெமிக் குறியீடு

வழக்கமான ரொட்டியுடன் ஒப்பிடுகையில், நொதித்தல் செயல்முறையின் காரணமாக புளிப்பு ரொட்டி குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த இயற்கை நொதித்தலானது, கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை மெதுவாக்குகிறது. இவை இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் படிப்படியான வெளியீட்டை ஏற்படுத்துகிறது. இந்த செயல்முறையானது த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்க உதவுகிறது. இவை அதிகப்படியான உணவைத் தடுத்து, பசியைக் குறைக்க உதவுகிறது.

இவ்வாறு புளிப்பு ரொட்டியானது பல்வேறு வழிகளில் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Flours: எகிறும் உடல் எடையை சட்டென குறைக்க எந்த மாவு வகை சிறந்தது?

Image Source: Freepik

Read Next

Cortisol and Weight Loss: உடல் எடையிழப்புக்கு இது ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா?

Disclaimer