Quinoa for Weight Loss: மாஸ் வேகத்தில் உடல் எடையைக் குறைக்கும் குயினோவா! எப்படினு பாருங்க!

  • SHARE
  • FOLLOW
Quinoa for Weight Loss: மாஸ் வேகத்தில் உடல் எடையைக் குறைக்கும் குயினோவா! எப்படினு பாருங்க!

அந்த வகையில் இன்று பெரும்பாலானோர் உடல் எடையைக் குறைக்க குயினோவா தானியங்களைப் பயன்படுத்துகின்றனர். குயினோவா ஒரு தானியம் போன்ற விதையாகும். இதில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களுடன் புரதச்சத்துக்களும் நிறைந்துள்ளது. குறிப்பாக, சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. மேலும் குயினோவாவில் மெக்னீசியம், இரும்பு மற்றும் மாங்கனீசு, நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களும் அதிகம் உள்ளது. இது போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட குயினோவா உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதை உட்கொள்வது வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதில் உடல் எடை குறைய குயினோவா எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Berries For Weight Loss: நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு எடை குறையணுமா? இந்த ஒரு பழம் சாப்பிடுங்க

உடல் எடை குறைய குயினோவா தரும் நன்மைகள்

குறைந்த கலோரி

குயினோவாவில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அடர்த்தியுடன் ஒப்பிடுகையில், இதில் குறைந்த கலோரிகள் நிறைந்துள்ளது. அதாவது அதிக கலோரிகளை உட்கொள்ளாமல் திருப்தி உணர்வைத் தருகிறது. பொதுவாக குறைந்த கலோரி நிறைந்த உணவுகள் உடல் எடை இழப்புக்கு நன்மை பயக்கும். மேலும், இவை பசியைக் கட்டுப்படுத்தி, அதிக அளவு உணவு உட்கொள்ளலைத் தடுப்பதன் மூலம் உடல் எடை இழப்பில் பயனளிக்கிறது.

அதிக புரத உள்ளடக்கம்

குயினோவாவில் உள்ள ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மனநிறைவை அதிகரிக்கிறது. இது பசியைக் குறைக்கவும், தசை வெகுஜனத்தை பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது அது முழுமை உணர்வை அளிக்கிறது. இறுதியில் இவை அதிகப்படியான உணவு அல்லது சிற்றுண்டி உட்கொள்வதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இவ்வாறு அதிக கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் எடையிழப்பில் பங்காற்றுகிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த குயினோவா

குயினோவாவில் கேம்ப்ஃபெரால் மற்றும் குர்செடின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில், நாள்பட்ட அழற்சியால் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு கொழுப்புச் சேமிப்பு அதிகரிக்கப்படலாம். இது எடையிழப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Black Beans for Weight Loss: புல்லட் வேகத்தில் உடல் எடையைக் குறைக்கும் கருப்பு பீன்ஸ்! எப்படினு தெரிஞ்சிக்கோங்க

குறைந்த கிளைசெமிக் குறியீடு

குயினோவாவில் குறைந்த கிளைசெமிக் குறியீடு நிறைந்துள்ளது. அதாவது இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிப்பதற்கு பதிலாக படிப்படியாகக் குறைக்கிறது. கூடுதலாக, குறைந்த கிளைசெமிக் குறியீடு நிறைந்த உணவுகள் உடல் எடையிழப்பில் பங்காற்றுகிறது. ஏனெனில் இவை இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை உறுதிப்படுத்த உதவுகின்றன. இவ்வாறு உடலில் கொழுப்பு சேர்வதைக் கட்டுப்படுத்தி, ஆற்றலை சீராக வெளியிட உதவுகிறது. இவை பசியைக் கட்டுப்படுத்துவதுடன், ஆற்றல் செயலிழப்புகளைத் தடுக்கவும் உதவுகிறது.

நார்ச்சத்துக்கள் நிறைந்த குயினோவா

குயினோவா அதிகளவிலான நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதனை உணவில் அதிகளவு சேர்ப்பது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. மேலும் இந்த நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக, குயினோவாவில் நிறைந்த கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்சுவதில் பயனளிக்கிறது. இவ்வாறு இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கவும், ஆற்றல் வெளியீட்டை அதிகரிப்பதாகவும் அமைகிறது. மேலும், ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைத்து உடல் எடையிழப்பில் பயனளிக்கிறது.

குடல் ஆரோக்கியத்திற்கு

குயினோவாவில் உள்ள நார்ச்சத்து ப்ரீபயாடிக்காக செயல்பட்டு குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதாவது ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர் மூலம் எடை இழப்பு முயற்சிகளை மேம்படுத்த முடியும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்தி ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கலாம். இது உடல் எடையிழப்புக்கு உதவுகிறது.

இவ்வாறு பல்வேறு வழிகளில் குயினோவா உடல் எடை இழப்பில் முக்கிய பங்காற்றுகிறது. இதனை சாலடுகள், சூப்கள் போன்ற அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். அதே சமயம், உணவில் குயினோவைச் சேர்ப்பது உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Curd for Weight Loss: எகிறும் உடல் எடையை வேகமா குறைக்கும் தயிர்! எப்படி தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Black Beans for Weight Loss: புல்லட் வேகத்தில் உடல் எடையைக் குறைக்கும் கருப்பு பீன்ஸ்! எப்படினு தெரிஞ்சிக்கோங்க

Disclaimer

குறிச்சொற்கள்