Sat Sep 12, 2026 | 01:26 AM IST

Black Beans for Weight Loss: புல்லட் வேகத்தில் உடல் எடையைக் குறைக்கும் கருப்பு பீன்ஸ்! எப்படினு தெரிஞ்சிக்கோங்க

Black Beans For Weight Loss How Does It Help: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக உடல் பருமனும் அடங்கும். இதனால், எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், இந்த எடையிழப்பு பயிற்சி மிகவும் கடினமானதாகும். உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக தங்கள் உணவைக் கண்காணிப்பது அவசியமாகும். இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இவ்வாறு உடல் எடையைக் குறைக்கவும், உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கவும் உதவும் உணவுப்பொருள்களில் பருப்பு வகைகளும் அடங்கும்.

அந்த வகையில் வீட்டில் இன்று பெரும்பாலானோர் பயன்படுத்தும் கருப்பு பீன்ஸ் மிகுந்த நன்மை பயக்கும். கருப்பு பீன்ஸ் ஆனது அதன் அடர்த்தியான அமைப்பு மற்றும் சுவைக்காக நன்கு அறியப்படுகிறது. இவை மிகவும் சத்தானவையாகும். கருப்பு பீன்ஸில் தாவர அடிப்படையிலான புரதம், உணவு நார்ச்சத்து மற்றும் இரும்பு, மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இதில் குறைந்த அளவிலான கொழுப்பு மற்றும் கிளைசெமிக் குறியீடுகள் உள்ளது. இவை நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க ஆரோக்கியமான தேர்வாக அமைகிறது. இவை உடல் எடையைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உடல் எடை குறைய கருப்பு பீன்ஸ் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Berries For Weight Loss: நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு எடை குறையணுமா? இந்த ஒரு பழம் சாப்பிடுங்க

உடல் எடை குறைய கருப்பு பீன்ஸ் எப்படி உதவுகிறது?

கருப்பு பீன்ஸ் உட்கொள்ளல் உடல் எடையை எவ்வாறு குறைக்கிறது என்பது குறித்து காணலாம்.

ஊட்டச்சத்து மிக்க பீன்ஸ்

கருப்பு பீன்ஸில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இதில் கலோரிகள் இல்லாத இரும்பு, மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவையும் உள்ளது. இது போன்ற பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது எடை இழப்புக்குத் தேவையான கலோரி பற்றாக்குறையை பராமரிக்கவும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கவும் உதவுகிறது.

நார்ச்சத்துக்கள் நிறைந்த

ஒரு கப் அளவிலான கருப்பு பீன்ஸ் சுமார் 15 கிராம் அளவிலான நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. உடல் எடை குறைப்பில் நார்ச்சத்துக்கள் பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது செரிமானத்தை மெதுவாக்கி, முழுமை உணர்வை ஊக்குவிக்கிறது. மேலும் இவை இரத்த சர்க்கரை அளவையும் உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அதிகப்பையான உணவு மற்றும் பசியைத் தடுத்து உடல் எடையைப் பாதுகாக்கிறது.

அதிக புரதச்சத்துக்கள்

தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாக கருப்பு பீன்ஸ் அமைகிறது. ஒரு கப் அளவிலான சமைத்த கருப்பு பீன்ஸில் கிட்டத்தட்ட 15 கிராம் அளவிலான புரதச்சத்துக்கள் உள்ளது. உடல் எடை குறைப்பின் போது அதிக புரத உட்கொள்ளல் தசை வெகுஜனத்தை பராமரிப்பதுடன், மனநிறைவை அதிகரிக்கிறது. இதன் மூலம் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால், இவை ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைத்து உடல் எடை குறையைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Black Coffee for Weight Loss: தினமும் ஒரு டம்ளர் பிளாக் காபி! தொப்பைக் கொழுப்பு முழுவதும் காலி!

செரிமான ஆரோக்கியம்

கருப்பு பீன்ஸில் உள்ள நார்ச்சத்துக்கள் உடல் எடையை குறைப்பதுடன், செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. கூடுதலாக, வழக்கமான குடல் இயக்கங்களை ஆதரிக்கவும், திறமையான ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் உதவுகிறது. இவை அனைத்துமே ஆரோக்கியமான எடையை அடைவதற்கும் பராமரிப்பதற்கும் உதவும் முக்கிய காரணிகளாகும்.

குறைந்த கொழுப்பு

கருப்பு பீன்ஸில் இயற்கையாகவே கொழுப்பு குறைவாக உள்ளது. அதன் படி, ஒரு கப் அளவிலான கருப்பு பீன்ஸ் 1 கிராமிற்கும் குறைவான கொழுப்புகளையே கொண்டுள்ளது. இது எடை இழப்பை ஆதரிப்பதுடன், இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்த தேர்வாக அமைகிறது. ஏனெனில் குறைவான கொழுப்பு இருப்பதால், அதிகப்படியான கலோரிகளைச் சேர்க்காமல் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

குறைந்த கிளைசெமிக் குறியீடு

கருப்பு பீன்ஸ் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டதாகும். இது குளுக்கோஸை மெதுவாக இரத்த ஓட்டத்தில் வெளியிடுவதுடன், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்க உதவுகிறது. இதன் மூலம் இன்சுலின் எதிர்ப்புக்கு பங்களிக்கிறது. இந்த காரணிகள் எடை இழப்புக்கு முக்கியமானவையாகக் கருதப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு வழிகளில் எடையிழப்புக்கு ஆறுதலாக கருப்பு பீன்ஸ் மிகுந்த நன்மை பயக்கும். எனவே உடல் எடையிழப்பு பயணத்தில் இருப்பவர்கள் கருப்பு பீன்ஸை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Curd for Weight Loss: எகிறும் உடல் எடையை வேகமா குறைக்கும் தயிர்! எப்படி தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Avocado For Belly Fat: தொப்பையை வெண்ணெய் போல கரைக்கும் வெண்ணெய்பழம்! இப்படி சாப்பிடுங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content