List of green vegetables for weight loss: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக உடல் பருமனும் அடங்கும். இதனால், எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், இந்த எடையிழப்பு பயிற்சி மிகவும் கடினமானதாகும். உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக தங்கள் உணவைக் கண்காணிப்பது அவசியமாகும். இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
அவ்வாறு உடல் எடையைக் குறைக்கவும், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்கவும் பச்சை காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றாட வாழ்வில் இயற்கையாகவே கிடைக்கும் சில பச்சை காய்கறிகளை எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இவை உடல் கொழுப்பை எரிக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும், நீண்ட நேரம் நிறைவான உணர்வுடன் வைத்திருக்கவும் உதவுகிறது. இதில் உடல் எடையைக் குறைக்க உதவும் பச்சை காய்கறிகள் என்னென்ன என்பது குறித்து காணலாம். மேலும், இதை உட்கொள்வதால் உடலுக்குக் கிடைக்கும் வேறு சில ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் காணலாம்.
எடை குறைய பச்சை காய்கறிகள்
பாலக்கீரை
பாலக்கீரை நார்ச்சத்து நிறைந்த உணவுகளுக்கு பெயர் பெற்றதாகும் மேலும், இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி3, பி6, பி9, சி, கே போன்ற பல்வேறு ஆரோக்கியமான வைட்டமின்களும், தாதுக்கள், மக்னீசியம், இரும்பு போன்றவையும் நிறைந்துள்ளது. குறிப்பாக, பாலக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாலக்கீரையை அன்றாட உணவில் பாலக்கீரை சாதம், பாலக்கீரை சூப், ஸ்மூத்தி, பாலக் பருப்பு போன்ற வழிகளில் தயார் செய்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Fenugreek For Weight Loss: வெயிட் டக்குனு குறையணுமா? வெந்தயத்தை இப்படி எடுத்துக்கோங்க
வெந்தயக்கீரை
இதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீஸ், காப்பர், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல்வேறு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வெந்தயத்தில் நிறைந்திருக்கும் நன்மைகள் அனைத்தும் வெந்தயக்கீரையிலும் காணப்படுகிறது. வெந்தயக் கீரை உட்கொள்வது உடலுக்கு ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடியதாகும். மேலும், வெந்தயக்கீரை இலைகளில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் தேவையற்ற கலோரிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸில் குறைந்த கொழுப்பு, குறைந்தளவிலான கலோரிகள் மற்றும் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இது உடல் எடையைக் குறைக்க சிறந்த தேர்வாகும். மேலும் இதில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், பொட்டாசியம், மெக்னீசியம், தயாமின், இரும்புச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதை அன்றாட உணவில் சேர்ப்பது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
இவை உடலுக்கு ஆற்றலை வழங்கவும், செரிமான மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. கூடுதலாக, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரித்து, கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. இதை அன்றாட உணவில் மொறுமொறுப்பான முட்டைக்கோஸ் சாலட், லேசான முட்டைக்கோஸ் சூப் போன்ற வழிகளில் தயார் செய்து எடுத்துக் கொள்ளலாம்.
புதினா
புதினா இலைகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. புதினாவில் மிகவும் குறைவான கலோரிகள், அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே எடை குறைப்பில் ஆர்வம் உள்ளவர்கள் புதினாவை சேர்த்துக் கொள்ளலாம். மேலும், இது வீக்கத்தைக் குறைக்கவும், கொழுப்பை உடைக்கவும் உதவுகிறது. இவை கூடுதல் கலோரிகள் இல்லாமல் உணவில் புத்துணர்ச்சியையும் சேர்க்கிறது. உடல் எடை குறைய அன்றாட உணவில் புதினா சட்னி தயார் செய்யலாம். இது தவிர, எலுமிச்சை நீரில் புதிய இலைகளைச் சேர்க்கலாம் அல்லது புதினா தேநீர் செய்து அருந்தலாம். இது இனிமையான மற்றும் எடைக்கு ஏற்ற பானமாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Mint Leaves Benefits: நோயெதிர்ப்பு சக்தி முதல் மன அழுத்தம் வரை! புதினா இலை தரும் அற்புத நன்மைகள்
பாகற்காய்
இது குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறியாகும். பாகற்காயில் வைட்டமின் சி உள்ளது. இதை உட்கொள்வது வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, பசி எடுப்பதைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் பாகற்காயில் உள்ள ஆரோக்கியமான பண்புகள் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பு குவிப்பைக் குறைக்கிறது. வெறும் வயிற்றில் புதிய பாகற்காய் சாறு அருந்துவது எடையிழப்பை திறம்பட ஆதரிக்கிறது.
வெள்ளரிகள்
இது நீர் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகவும், நம்ப முடியாத அளவிற்கு குறைந்தளவிலான கலோரிகளையும் கொண்டுள்ளது. இது முழுமையாக வைத்திருப்பதுடன், நீரிழப்பைத் தடுக்கவும், நச்சு நீக்கத்திற்கும் உதவுகிறது. மேலும் இதில் மினரஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் போன்ற சத்துக்களும் உள்ளது. வெள்ளரிக்காயில் வைட்டமின் பி, சி, கே மற்றும் பொட்டாசியம், ஃபிசெடினின் போன்றவையும் நிறைந்துள்ளது. தினமும் வெள்ளரி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம் மற்றும் காலை எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் வெள்ளரிக்காய் தண்ணீரைக் குடிக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் எடை குறைக்க உதவுமா.? தெரிஞ்சுக்கலாம் வாங்க..
Image Source: Freepik