What to eat instead of rice to lose weight: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உடல் எடை அதிகரிப்பு ஒரு பொதுவான பிரச்சனையாகக் கருதப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க சீரான உணவுமுறையைக் கையாள்வது மிகவும் முக்கியமாகும். அதன் படி, இந்திய உணவு வகைகளில் அரிசி முக்கிய உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே நம் அன்றாட உணவில் அரிசி இல்லாத உணவுமுறையைக் கையாள்வது மிகவும் கடினமாக இருக்கும்.
ஆனால் பல்வேறு சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வெள்ளை அரிசி அதிக கலோரி நிறைந்த உணவாகும். வெள்ளை அரிசியில் வெற்று கலோரிகள் அதாவது எளிய கார்போஹைட்ரேட்டுகள் அதிகளவு உள்ளது. எனவே இது எடை இழக்க முயற்சிப்பவர்களுக்கு அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு குறைவான ஆரோக்கியமான விருப்பமாகவே அமைகிறது. பொதுவாக பாலிஷ் செய்யப்படாத அரிசியில் தாதுக்கள் நிறைந்துள்ளது. ஆனால், அரிசியை பாலிஷ் செய்வதால், இந்த ஊட்டச்சத்துக்கள் நீக்கப்பட்டு எளிய கார்போஹைட்ரேட்டுகளின் மூலமாக மட்டுமே மாற்றுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Pori For Weight Loss: பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
எடை குறைய அரிசிக்கு பதிலாக சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான மாற்றுகள்
வெள்ளை அரிசிக்குப் பதிலாக ஆரோக்கியமான மாற்றுகள் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இதில் அன்றாட உணவில் சேர்க்கக்கூடிய ஆரோக்கியமான வெள்ளை அரிசி மாற்றுகளைக் காணலாம்.
குயினோவா
வெள்ளை அரிசி மாற்றான இந்த பிரபலமான குயினோவா பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது இது ஒரு பசையம் இல்லாத உணவாகும். எனவே பசையம் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு குயினோவா ஒரு சிறந்த ஆரோக்கியமான அரிசி மாற்றாகும். குயினோவா எளிதில் செரிமானம் அடையக் கூடியதாகவும், புரதம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. மேலும் இது அழற்சி எதிர்ப்பு, மோனோசாச்சுரேட்டட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும். அன்றாட உணவில் குயினோவாவை கீர், உப்மா மற்றும் சிக்கன் பிரியாணி போன்ற உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
தினை
தினையை சோளம், பஜ்ரா, ராகி மற்றும் இன்னும் பல்வேறு வடிவங்களில் அறிந்திருப்போம். குயினோவாவைப் போலவே தினை பசையமற்ற மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும். தினைகள் மோசமான தரமான மண்ணிலும் வளரும் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான ஒரு நல்ல திட்டம் ஆகும். தினை அரிசிக்கு மாற்றாக ஒரு ஆரோக்கியமான தேர்வாகக் கருதப்படுகிறது.
பார்லி
வாற்கோதுமை அல்லது பார்லி ஆனது புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இந்த தானியம் உண்மையில் உலகளவில் பயிரிடப்படக்கூடிய பழமையான தானியங்களில் ஒன்றாகும். மேலும், வெள்ளை அரிசியுடன் ஒப்பிடுகையில் பார்லியில் அதிக புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது வைட்டமின் பி, துத்தநாகம், செலினியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்ததாகும்.
டாலியா
டாலியா என்பது உடைந்த கோதுமையைக் குறிக்கிறது. டாலியா நாம் பலரும் எடுத்துக் கொள்ளக்கூடிய தேசி வெள்ளை நிற மாற்றாகும். டாலியாவை சமைப்பது அரிசியைப் போன்ற அமைப்பு மற்றும் சுவையைத் தரக்கூடியதாக அமைகிறது. USDA-வின் படி, டாலியா 91 கிராம் பரிமாறலில் 76 கலோரிகள் மட்டுமே உள்ளதாகவும், இது அரிசியுடன் ஒப்பிடும்போது 25% குறைவான கலோரிகளைக் கொண்டதாகவும் அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Brown Rice Benefits: வெள்ளை சோறுக்கு பதிலா பிரவுன் அரிசியில் மட்டும் சாதம் சாப்பிட்டு பாருங்க!
பழுப்பு அரிசி
அரிசிக்கு மாற்றாக பழுப்பு அரிசி ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இது ஒரு சிறந்த முழு தானியமாகும். இது வெளிப்புற தவிடு அடுக்கு மற்றும் கிருமியை அப்படியே கொண்டதாகும். மேலும் இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. வெள்ளை அரிசியைப் போல பழுப்பு அரிசி தீவிர செயலாக்கத்திற்கு உட்படுத்தப்படாததால் இது மிகவும் ஆரோக்கியமானதாக மற்றும் சத்தாக மாற்றுகிறது.
மேலும் பழுப்பு அரிசி ஒரு குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவாக இருப்பதால், இது வெள்ளை அரிசிக்கு சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது. ஆனால் வெள்ளை அரிசி ஒரு உயர் கிளைசெமிக் குறியீட்டு உணவாக மட்டுமல்லாமல், வெளியிடப்பட்ட சர்க்கரை உள்ளடக்கம் அதிகளவில் கொண்டதாகும். இதனால், வெள்ளை அரிசி கொழுப்பு குவிவதற்கு வழிவகுக்கலாம்.
மூங்கில் அரிசி
அரிசிக்கு மாற்றாக மூங்கில் அரிசி ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. பூக்கும் மூங்கிலால் அதன் ஆயுட்காலம் முடியும் போது உற்பத்தி செய்யப்படும் விதையானது அரிசியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மூங்கில் அரிசி என அழைக்கப்படுகிறது. இந்த தனித்துவமான அரிசி மாற்றீடு எளிதில் கிடைக்காததாகும். இருப்பினும், இது வைட்டமின் பி மற்றும் புரதத்தின் வளமான மூலமாகும். எனவே இதை அன்றாட உணவில் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Bamboo Rice Benefits: உடல் எடையை சட்டுனு குறைக்க இந்த அரிசியை எடுத்துக்கோங்க
Image Source: Freepik