Makhana for weight loss: மின்னல் வேகத்தில் உடல் எடையைக் குறைக்க மக்கானாவை இப்படி சாப்பிடுங்க

How to eat makhana for fat loss: உடல் எடையைக் குறைப்பதில் மக்கானா முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் எடையை வேகமாகக் குறைக்க மக்கானாவை அன்றாட உணவில் எவ்வாறு சேர்க்கலாம் என்பது குறித்து காணலாம். மேலும் எடையிழப்புக்கு மக்கானா தரும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Makhana for weight loss: மின்னல் வேகத்தில் உடல் எடையைக் குறைக்க மக்கானாவை இப்படி சாப்பிடுங்க

Best way to eat makhana for weight loss: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுமுறைகளால் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்றாக உடல் பருமன் அமைகிறது. உடல் பருமன் காரணமாகவே நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே எடை குறைப்பில் ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வது மிகவும் அவசியமாகும்.

உடலில் கூடுதல் கிலோவைக் குறைக்க குறைந்தளவிலான கலோரி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு உடல் எடையைக் குறைக்கும் சிறந்த உணவுப்பொருள்களில் ஒன்றாக மக்கானா அமைகிறது. இது எடையிழப்புக்கு மட்டுமல்லாமல், உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் சிறந்ததாகும். மக்கானா ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், வியக்கத்தக்க வகையில் குறைந்த கலோரிகளுடனும் உள்ள உணவுப்பொருளாகும். எனினும், எடையிழப்புக்கு மக்கானாவை உட்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், இதை அதிகம் உட்கொள்வது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: Walking for weight loss: எடையை குறைக்க எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்? எப்படி நடக்கணும்?

மக்கானா என்றால் என்ன?

எடை இழப்புக்கு மக்கானா சாப்பிடுவது அதன் தனித்துவமான ஊட்டச்சத்து தன்மை காரணமாக பிரபலமான வழியாகக் கருதப்படுகிறது. இதில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைந்த அளவில் உள்ளது. எனவே இது ஒரு சிறந்த சிற்றுண்டியாகக் கருதப்படுகிறது. மேலும், இது அதிக நார்ச்சத்துக்களைக் கொண்டிருப்பதால், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை இரண்டுமே எடை மேலாண்மைக்கு முக்கியமானவையாகும்.

மக்கானாவின் புரத உள்ளடக்கம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இது பசியைக் குறைக்க உதவுவதுடன், இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் கூடுதல் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மேலும் மக்கானாவை அன்றாட உணவில் பல்வேறு வழிகளில் சேர்க்கலாம். இதை வறுத்து, கறிகளில் சமைத்து அல்லது மொறுமொறுப்பான சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் எடை இழப்புக்கு மக்கானா சாப்பிடுவது விரைவான பலன்களைத் தருகிறது.

எடையிழப்புக்கு மக்கானா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

எடையிழப்புக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கும் முக்கியமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை மக்கானா கொண்டுள்ளது. ஆய்வு ஒன்றில், மக்கானாவில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிக்கிறது. இவை எடை இழப்புடன் உகந்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் செல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. தசை மற்றும் நரம்பு செயல்பாட்டில் மக்னீசியம் ஊட்டச்சத்துக்களும், இரத்த அழுத்தத்தை சீராக்க பொட்டாசியமும் உதவுகிறது.

நல்ல புரதம் நிறைந்த

மக்கானா அதிக புரதச்சத்து நிறைந்ததாகும். எனவே இது எடையை நிர்வகிப்பதற்கான ஒரு முக்கிய மூலப்பொருளாகும். இந்த புரதம் நிறைந்த சிற்றுண்டி திருப்தியை அல்லது முழுமையின் உணர்வை பெரிதும் சேர்க்கிறது. இதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்தவும், ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கவும் உதவுகிறது. உணவில் மக்கானாவைச் சேர்ப்பது ஆரோக்கியமற்ற, அதிக கலோரி உணவுகளுக்கான விருப்பத்தைக் குறைக்கிறது. இந்த திருப்தியானது உடல் எடை இழப்புக்கு முக்கியமானதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss: எடையைக் கட்டுப்படுத்த இரவு உணவுக்குப் பிறகு இந்த 4 விஷயங்கள செய்யுங்க போதும்!

குறைந்த கலோரிகள்

இது இயற்கையாகவே குறைந்த கலோரி அளவின் காரணமாக பரிந்துரைக்கப்படுகிறது. எனவே இது உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது. குறைந்த கலோரி உணவுகள் வழக்கமான கலோரி நுகர்வை கணிசமாக அதிகரிக்காமல் திருப்திகரமான ஒரு பசியை அனுபவிக்க அனுமதிக்கிறது. இது எடை நிர்வாகத்திற்கு உதவுகிறது. அதிக கலோரிகளைக் கொண்ட பல பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகளைப் போலல்லாமல், இது எடையிழப்புக்கு ஒரு ஆரோக்கியமான விருப்பத்தைத் தருகிறது.

அதிக நார்ச்சத்துக்கள்

எடை மேலாண்மையில் முக்கிய அங்கமாக அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதாகும். அவ்வாறு மக்கானாவில் உள்ள அதிக நார்ச்சத்து, முழுமை மற்றும் திருப்தி உணர்வுகளை அளிக்கிறது. இது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது. இந்த முழுமை உணர்வு உணவுக்கு இடையில் அதிகமாக சாப்பிடுவதையும் சிற்றுண்டி சாப்பிடுவதையும் குறைக்கிறது. இதன் மூலம் கலோரி நுகர்வு இயற்கையாகவே குறையும். இது எடையைக் குறைக்க அல்லது பராமரிக்க விரும்புவோர்க்கு சிறந்த பயனுள்ள உக்தியாகக் கருதப்படுகிறது.

எடை இழப்புக்கு மக்கானாவை சாப்பிடும் முறை

உடல் எடையை இழக்க விரும்புவோர்கள், மக்கானாவை அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்வதற்கான சில வழிகளைக் காணலாம்.

மக்கானா கஞ்சி

பால் அல்லது தண்ணீரில் மக்கானாவை சமைத்து சூடான கஞ்சியைத் தயார் செய்யலாம். இது ஆறுதலுக்காக தேன் அல்லது வெல்லம் போன்ற இனிப்புகளைச் சேர்த்து அதன் மேல் நட்ஸ் அல்லது பழங்களைச் சேர்க்கலாம்.

வறுத்த மக்கானா

மக்கானாவை அனுபவிப்பதற்கான எளிய மற்றும் மிகவும் பிரபலமான வழியாக மக்கானாவை வறுத்து சாப்பிடுவதாகும். இதற்கு ஒரு வாணலியில் மக்கானாவை மொறுமொறுப்பாகவும், தங்க பழுப்பு நிறமாகவும் மாறும் வரை வறுக்க வேண்டும். இதில் சுவைக்காக ஒரு சிட்டிகை உப்பு, மிளகு அல்லது பிற மசாலாப் பொருட்களைச் சேர்க்கலாம்.

மக்கானா கறி

எடையிழக்க விரும்புபவர்கள் அவர்களுக்கு பிடித்த காய்கறி அல்லது பருப்பு கறியில் மக்கானாவை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இது ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்தை அதிகரிக்க உதவுகிறது. மக்கானா கறியின் சுவைகளை உறிஞ்சி, உணவிற்கு ஒரு தனித்துவமான அமைப்பைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: ஆச்சர்யம் ஆனால் உண்மை; மக்கானா சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகிடுமாம்!

மக்கானா ஸ்மூத்தி

பழங்கள், காய்கறிகள் மற்றும் தயிருடன் மக்கானாவைச் சேர்த்து நிறைவான ஸ்மூத்தியைத் தயார் செய்யலாம். காலை உணவு அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு உணவில் மக்கானாவை சேர்த்துக்கொள்ள இது ஒரு சிறந்த தேர்வாகும்.

மக்கானா சூப்

இது மொறுமொறுப்பான சிற்றுண்டியாக அமைகிறது. கூடுதல் ஊட்டச்சத்துக்களுக்காக சூப்களில் வறுத்த மக்கானாவை சேர்க்கலாம். இதை தெளிவான மற்றும் கிரீமி சூப்கள் இரண்டிலும் சேர்க்கலாம்.

மக்கானா ரைத்தா

வறுத்த மக்கானாவை தயிர், வெள்ளரிக்காய் மற்றும் மசாலாப் பொருட்களுடன் சேர்த்து ரைத்தாவைத் தயார் செய்யலாம். இதை ஒரு சிற்றுண்டியாக அல்லது ஆரோக்கியமான துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Makhana Benefits: மக்கானா என்றால் என்ன? இது உடல் எடையை சட்டென்று குறைக்குமா?

Image Source: Freepik

Read Next

Bloated Stomach: மொத்த வாயுவை வெளியேற்றி உப்பிய வயிறு ஒல்லியா மாற்றலாம்- இதை பண்ணுங்க!

Disclaimer