Bloated Stomach: மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பல வகையான நோய்களை ஏற்படுத்துகின்றன. இவற்றால் மிகவும் பொதுவாக பாதிக்கப்படக் கூடியதாக செரிமான அமைப்பு இருக்கிறது. குறிப்பாக பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாகவே தொப்பை என்பது மாறிவிட்டது.
தொப்பையை குறைக்க பலர் பல வழிமுறைகளை மேற்கொள்கின்றனர். தொப்பையை குறைக்க முயற்சி செய்வதற்கு முன்பாக இதற்கான பொதுவான காரணத்தை அறிந்திருக்க வேண்டியது மிக முக்கியம். தொப்பை அதிகரிக்க முக்கிய காரணங்களில் ஒன்று வயிற்றில் வாயு சேருவது. வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளால் மக்கள் சிரமப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: இரும்பு போல வலுவான எலும்பு வேணுமா? மருத்துவர் சொல்லும் குறிப்புகள் இதோ!
சிலருக்கு அவ்வப்போது வாயு உருவாவது ஏற்பட்டு, அது எளிதில் வெளியேறிவிடும். ஆனால் சிலருக்கு பல வருடங்களாக நீடிக்கும் கடுமையான வாயு பிரச்சினை ஏற்படக்கூடும். ஏராளமானோருக்கு வயிற்றில் வாயு சேர்ந்திருக்கிறது என்பதே தெரியாது என்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம். பெரும்பாலான மக்கள் வயிற்று வாயுவை அகற்ற வாயு மருந்தை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இயற்கையான முறையில் வாயுவை அகற்ற விரும்பினால், சில தீர்வுகளை முயற்சி செய்யலாம்.
வயிற்றில் உள்ள வாயுவை இயற்கையாகவே வெளியேற்றி தொப்பையை குறைப்பது எப்படி?
லேசான கைகளால் மசாஜ் செய்யவும்
வயிற்றில் ஏற்படும் வாயுவை போக்க மசாஜ் செய்யலாம். வயிற்றில் மெதுவாக மசாஜ் செய்வது வாயுவை அகற்ற உதவும். இதற்கு எந்த எண்ணெயையும் எடுத்துக் கொள்ளலாம். அதை உங்கள் கையில் வைத்து பின்னர் அதை வயிற்றில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இது உங்கள் வயிற்று தசைகளை அமைதிப்படுத்தி வாயுவை நீக்க உதவியாக இருக்கும்.
மூலிகை தேநீர் குடிக்கவும்
வயிற்று வாயுவிலிருந்து உடனடி நிவாரணம் பெற மூலிகை தேநீர் பெரும் உதவியாக இருக்கும். இதற்கு புதினா, இஞ்சி அல்லது கெமோமில் தேநீர் குடிக்கலாம். விரும்பினால் சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து தேநீர் தயாரித்து குடிக்கலாம். இது தவிர, வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதும் வாயுவிலிருந்து நிவாரணம் பெற உதவும்.
ஆப்பிள் சிடர் வினிகர்
- வயிற்று வாயுவிலிருந்து உடனடி நிவாரணம் பெற ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்தலாம்.
- ஆப்பிள் சிடர் வினிகரில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது வயிற்றில் இருந்து வாயுவை அகற்ற உதவும்.
- ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சிடர் வினிகரைச் சேர்க்கவும்.
- காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரைக் குடிக்கவும்.
- இது வயிற்று வாயுவிலிருந்து நிவாரணம் பெற உதவும்.
உடற்பயிற்சி மற்றும் யோகா
வயிற்று வாயு உருவாவதற்கு உடற்பயிற்சியின்மை ஒரு முக்கிய காரணமாகும். தொடர்ந்து உடற்பயிற்சி அல்லது யோகா செய்பவர்கள் வாயுத்தொல்லையால் பாதிக்கப்பட வாய்ப்பே இல்லை.
அதே நேரத்தில், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்களிடையே வாயுப் பிரச்சினைகள் என்பதே காணப்படுவதற்கு வாய்ப்பில்லை.
என்னதான் பிஸியான வாழ்க்கை முறை என்றாலும் தவறாமல் உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டியது மிக முக்கியம். குறிப்பிட்ட நேரத்தை இதற்காக கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். அதேபோல் குறைந்தது 15-20 நிமிடங்களாவது நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் கூடவேக் கூடாது
- வயிற்றில் வாயு உருவாவதற்கு முக்கிய காரணமாக மோசமான வாழ்க்கை முறை கருதப்படுகிறது.
- இதற்காக நீங்கள் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
- மேலும் சூயிங் கம் மெல்லுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது வயிற்றில் அதிக வாயுவை ஏற்படுத்தும்.
- நல்ல வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம் வயிற்று வாயுவிலிருந்து விடுபடலாம்.
மெதுவாக சாப்பிடுவது முக்கியம்
சாப்பிடும் வேகம் வயிற்று வாயுவையும் பாதிக்கும். வேகமாக உணவு உண்பவர்களுக்கு வாயு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, வயிற்று வாயுவை அகற்ற, நீங்கள் மெதுவாக சாப்பிட்டு, உங்கள் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
மிக விரைவாக மெல்லுவது வாயு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும். வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஒருவர் உணவு உண்ண சுமார் 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும்போது பேசுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது காற்று உள்ளேப்புகுவதற்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க: குழந்தைகளின் மன வளர்ச்சியை கெடுக்கும் மொபைல் கதிர்வீச்சு.!
வயிற்றில் ஏற்படும் வாயுவை நீக்க நல்ல வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை குறிப்புகளை பின்பற்ற வேண்டும். இது உங்கள் வயிற்றில் உள்ள வாயுவை நீக்கும். வாயு என்பது மார்பக வலி, வயிற்று வலி, முதுகு வலி என பல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே வாயு தொல்லைக்கு கவனமாக இருக்க வேண்டியது முக்கியம்.
pic courtesy: freepik